Bio Data !!

24 November, 2011

வன்முறைக்கு விடை கொடுப்போம் !!


பெண்களின் மேல் வன்முறையை பயன்படுத்தாதீர்கள்,

பெண்களின் மீதான வன்முறையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் , ஒவ்வொருவரும் தனித்தனியாக.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது அறுபது வயதுக்கு மேலான தன் தாயை, அடித்திருக்கிறார் தனது திருமணத்துக்கு முன். திருமணம் ஆன பின் அதே வன்முறையை தன் மனைவி மேல் பிரயோகிக்கிறார். அவருடைய பெண் பிள்ளைகளும் அவரது அடிகளுக்கு தப்பவில்லை. எல்லோர் மீதான தன் வன்முறைக்கும் தன் தரப்பில் ஒரு நியாயம் வைத்த்திருப்பார். 

இப்படியான ஆண்களுக்கும் இவர்களை விட குறைவான வன்முறை உபயோகிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். போர் தர்மத்தில் கூட சம பலம் உடையவர்கள் தான் போரிட வேண்டும் என்று இருக்கிறது. இறைவனின் படைப்பிலேயே ஆணை விட பெண் உடல் மன பலம் குறைந்து காணப்படுகிறாள். ஹீமோக்ளோபின் அளவில் கூட பெண்ணுக்கு 12  - 14  உம் ஆண்களுக்கு 14 - 18  இருக்க வேண்டும் என்கிறார்கள். பூப் போன்ற பெண்களை பூமியில் வாட விடாதீர்கள்.

"செங்காளி" என்று ஒரு கதை படித்தேன். முதலிரவில் கணவன் இயல்பாக மனைவியிடம் சேர மாட்டான். அவன் தன்னைப் பற்றி காம்ப்ளெக்ஸ் இல் குன்றி விடக் கூடாதே என்று அவள் தன் நாணத்தை புறம் தள்ளி முன் வருவாள். உடனே அவனுடைய நெருப்பான வார்த்தைகள் "ரொம்ப அனுபவம் தான் போல இருக்கு" முதலிரவில் நாவினால் சுட்ட வடு மெல்ல நீக்கி இயல்புக்கு வர முயலும் போது தான் அவனுக்கும் அவன் அண்ணிக்கும் உள்ள தவறான உறவு தெரிய வரும். அந்த ஆதங்கத்தில் அதன் பிறகு அவன் "உன்னைப் பத்தி தெரியாதா?முதலிரவிலேயே தான் உன் புத்தி தெரிந்து விட்டதே" என்பான். உடனே அவள் "நீ பொட்டையா இருந்தா நான் முன்னேறித்தானே தானே வர வேண்டி இருக்குது " என்றவுடன் கணவனின் குடும்பத்தார்கள் எல்லோரும் சேர்ந்து அவளை அடித்து துவைத்து விடுவார்கள். அவனிடம் இருந்து தன்னை விலக்கி விடும் படி பஞ்சாயத்தில் கொண்டு செல்லும் போது கணவன் சார்பான வன்முறைகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு அவள் தன் கணவனை "பொட்டை " என்பது மட்டும் தான் விவாதத்தில் நிற்கும். அவள் இறுதியில் "நீங்கள் என்ன எனக்கு விவாகரத்து தருவது , நானே இவனிடம் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று தன் தாலியை கழற்றி வீசி விட்டு வருவாள். 
தன் மேல் முழு நம்பிக்கை உடைய எந்த ஆணும் தன் மனைவியை சந்தேகப் பட மாட்டான். முக்காலே மூணு வீசம் வன்முறைக்கு சந்தேகம் தான் அடித்தளம். பெண்களின் தலை முடியை தன் கை விரல்களில் சுற்றி அரிவாளால் வெட்டி எறிந்த வன்முறையாளர்கள் எனக்கு தெரியும்." எந்த ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். அதே போல எந்த ஒரு பெண்ணின் தவறுக்கும் (விலக்குகள் இருக்கலாம்) பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம். இயல்பாய் நல்ல பெண்ணாய் இருந்து ஒரு ஆணினால் வழி தவறிய பெண் அந்த ஆணை தன் வாழ் நாளில் மன்னிப்பதில்லை. 

இன்று பெண்களுக்கான வன்முறைக்கு எதிரான நாள். ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம் எக்காரணம் கொண்டும் தன்னை விட வலிமை குறைந்தவர்களிடம் வன்முறை பிரயோகிக்க மாட்டோம் என்று, 


20 comments:

  1. அய்யோ அம்மா அந்த ஃபோட்டோவை பார்க்க முடியல.. அவ்வ்வ்வ்

    ReplyDelete
  2. >>தன் மேல் முழு நம்பிக்கை உடைய எந்த ஆணும் தன் மனைவியை சந்தேகப் பட மாட்டான்

    குட் ஒன்

    ReplyDelete
  3. //ஹீமோக்ளோபின் அளவில் கூட பெண்ணுக்கு 12 - 14 உம் ஆண்களுக்கு 14 - 18 இருக்க வேண்டும் என்கிறார்கள். //

    இன்றைய மருத்துவ உலகு படி இது சரி என்றாலும் இதிலும் குறை இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்கள் வாதிடுகிறார்கள்.. ஒரு பெண் பூப்படையும் முன் அவள் ஹெமொக்ளோபின் அளவு ஆணுக்கு சமமாக இருப்பதால்... மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு இந்த அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று வாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.. உங்கள் பார்வைக்கு

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும் பதிவு.
    பெண்களுக்கு ஆறுதலான பதிவும் கூட..

    //அதே போல எந்த ஒரு பெண்ணின் தவறுக்கும் (விலக்குகள் இருக்கலாம்) பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம். //

    உண்மையிலும் உண்மை.

    பதிவிற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  5. ரொம்ப பொதுவா யோசிக்கிறீங்க...
    இன்னமும் இன்னமும் நிறைய ..உங்ககிட்ட.எதிர் பார்க்கிறேன்...

    1) வார்த்தைகளால் வன்முறை செய்யும் பெண்களை கண்டதில்லையா?
    2) பெரும்பாலன வன்முறைகளில் பெண்களுக்கும் பங்கு உண்டு..ஒப்புகொள்ளுகிற்களா இல்லையா?

    ஏதோ அமெரிக்க/பக்கிஸ்தான் ராணுவம் திடிரென்று..காரனம் இல்லாமல் இந்தியாவை தாக்கியது... என்பது போல்.. ஆண்கள் பெண்களை தக்கினார்ன்னா ... எல்லா பெண்களும் எப்பவும் அப்பாவிகள் தானா?
    http://mydreamonhome.blogspot.com/

    ReplyDelete
  6. இனி ஒருபோதும் வன்முறைக்கு இடம்கொடுக்க கூடாது...

    ReplyDelete
  7. சரியா சொல்லி இருக்கீங்க...- இது சீரியஸ்

    மேடம் எனக்கு வீட்ல கொடுக்குற அடி தாங்க முடியல!...ஹிஹி..நான் என்னத்த சொல்றது...சாமி உளறிட்டனே! - இது சிரியஸ்

    ReplyDelete
  8. நல்ல பெண்ணாய் இருந்து ஒரு ஆணினால் வழி தவறிய பெண் அந்த ஆணை தன் வாழ் நாளில் மன்னிப்பதில்லை.//

    என் நண்பன் ஒருவன் செய்த அநியாயம் இது, நாங்களே அவனை மன்னிக்கவில்லை அவள் எப்படி அவனை மன்னிப்பாள்....!!!

    சிறப்பான பதிவும், விழிப்புணர்வு பதிவும், நன்றி...

    ReplyDelete
  9. விக்கியுலகம் said...
    சரியா சொல்லி இருக்கீங்க...- இது சீரியஸ்

    மேடம் எனக்கு வீட்ல கொடுக்குற அடி தாங்க முடியல!...ஹிஹி..நான் என்னத்த சொல்றது...சாமி உளறிட்டனே! - இது சிரியஸ்//

    மூதேவி இனி சனிக்கிழமை மட்டும் குடிக்குரதை நிறுத்துடா.....ஹி ஹி.... அப்புறம் அடிக்கமாட்டாங்க அண்ணிகிட்டே நான் சொல்றேன்...

    ReplyDelete
  10. பாராட்டுக்கு நன்றி சிபி அந்த அவ்வ்வ்வவ் வ எப்போ விடுறதா உத்தேசம்

    ReplyDelete
  11. தங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி வினோத்.
    இன்று பெண்களுக்கான வன்முறைக்கு எதிரான நாள்.//
    இதற்கான பதிவு இது கூல் !!

    ReplyDelete
  12. நன்றி விக்கி !! மனோ என்னவோ சொல்லி இருக்கிறார் பாருங்க

    ReplyDelete
  13. மீதி ஆறு நாளும் அடி உங்களுக்கு விழுந்திடப் போகுது மனோ

    ReplyDelete
  14. வன்முறைக்கு விடை கொடுப்போம்

    ReplyDelete
  15. வணக்கம்! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  16. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக. இது ஏதோ ஆள் மாறாட்டம் என்று நினைக்கிறேன். நேரடி சேவையில் இறங்க முடியாத அரசுப் பணியில் இருப்பவள்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!