Bio Data !!

25 November, 2011

வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி


விக்கி தான் உதவி செய்யணும். வீடியோ பதிவில் வரச்செய்யும் வழி தெரியவில்லை 
நன்றி நண்பர்களே!! இணைத்து விட்டேன்
   பாடலின் முதல் வரி "வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி " படத்தின் பெயர் '3 ' பெயரே அவ்வளவு தாங்க. எழுதி இயக்குபவர் தனுஷின் காதல் மனைவி ஐஸ்வர்யா.
எனது செல்ல மருமகனிடம் இருந்து இப்படி ஒரு பின்னோட்டம்

"தனுஷோட "why this kolaveri " song, உலகத்தையே கலக்கிட்டு இருக்கு. 10 நாளுக்குள்ள 40 இலட்சம் hit - youtube-la மட்டும். இங்க Timesofindia ல இருந்து news TV channels வரைக்கும் எல்லாரும் கவர் பண்ணியாச்சு. பெங்களூர்-லையே FM ரேடியோ-ல போடுறான். ஆனா அது பத்தி ஒரு writer / பிளாக்கர் கூட ஒண்ணுமே எழுதகாணோம், ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்த பாட்ட கேட்டீங்களா? என்ன நினைக்கீறீங்க?"

ஒண்ணு ரெண்டு தடவை இந்த பாட்டு கேட்டு இருக்கேன். முதல் பாடலில் கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு தெரிந்தது. இது வித் புல் கான்பிடேன்ஸ்.

தான் பாடினா நல்லா இருக்குமா என்ற கொஞ்ச நஞ்ச சந்தேகத்தில் ஏதாவது விமர்சனம் வந்தால் காமெடி பாடல் தான் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்பது போன்ற பாடல் வரிகள். ஆனால் தனுஷின் குரலில் நல்ல வளம், நல்ல ராகம்

கூடிய விரைவில் நல்ல ஆக்டர் கம் பாடகரை தமிழ் திரையுலகம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. சிம்பு மட்டும் தான் பாடுவாரா? நாங்களும் பாடுவோம்ல ... இல்ல தனுஷ்!! .

21 comments:

  1. மொத தடவ கேட்டதுலையே ரொம்ப்ப்ப்ப்ப பிடிச்சு போச்சு ரூபினா. வரிகள சரியா கவனிக்கல. ஆனா மியூசிக் செம கலக்கல்.... நேத்து முழுக்க வாய்ல அந்த பாட்டு தான் ஓடிட்டிருந்துச்சு !

    ஆனா இது ரொம்ப நாளைக்கு நிலைச்சு நிக்காது (கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, மன்மதராசா,....... இதுபோல் கொஞ்ச நாளைக்கு சக்கபோடு போட்டு மறஞ்சுடும் :-)

    ReplyDelete
  2. பதிவு இடும் பொழுதே படங்களை இணைப்போம் அல்லவா, அதன் பக்கத்திலேயே வீடியோ இணைக்க ஒரு டாப் இருக்கும்... அதை சொடுக்கினால் அருமையாக இணைக்கலாம்
    new interface has this benefit..

    ReplyDelete
  3. சகோ...பதிவு இடும்போது லிங்க் என்பதற்கு பக்கத்துல போட்டோ இணைப்புன்னு நீல கலர்ல போட்டோ இருக்கும். அது பக்கத்துல கருப்பு கலர்ல வீடியோ போட்டோ இருக்கும் பாருங்க. அங்க ஒரு க்ளிக் பண்ணுங்க, அப்புறம் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும் அதுல From YouTube அப்படின்னு இடது புறம் வரும் பாருங்க, அதை ஒரு க்ளிக் பண்ணுங்க...இப்போ நடுவுல ஒரு பாக்ஸ் வரும். அதுல நீங்க எடுத்து இருக்க Url போடுங்க...பக்கத்துல ஒரு க்ளிக் பண்ணுங்க...இப்போ இணையும் பாருங்க!

    ReplyDelete
  4. youtubல உங்களுக்கு பிடிச்ச க்ளிப்க்கு கீழ share அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அத க்ளிக் பண்ணா embed அப்படினு இருக்கும். அந்த code ஐ copy பண்ணி வச்சுக்கோங்க.

    போஸ்ட் போடும் போது compose மற்றும் இருக்கும் இல்லையா. edit html ல க்ளிக் பண்ணி எந்த வார்த்தைக்கு முன்ன்னால பின்னால மேல, கீழ ன்னு உங்களுக்கு பிடிச்ச இடத்தில் embed code-ஐ paste பண்ணுங்க. அப்பறம் வழக்கம் போல compose ஐ க்ளிக் பண்ணி எழுதுங்க.

    :-)

    ReplyDelete
  5. இது தனுசின் ரெண்டாவது பாடலா?
    டவுட்டா இருக்கு.ஆயிரத்தில் ஒருவன் படத்துலயும்,இப்போ மயக்கம் என்ன படத்துலயும் பாடியிருக்காரே?

    ReplyDelete
  6. பாடல் கலக்கல்...!!!
    நீங்க சொன்னமாதிரி வாய்ஸ்சில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  7. நன்றி ஆமீனா . வரிகள் கவனிக்க வில்லை என்றாலும் பெரிய நஷ்டம் இல்லை. போட்டு நிரப்பப்பட்ட டம்மி வார்த்தைகளே பாடல் ஆகி விட்டது.
    ஆனால் இப்படிப்பட்ட டம்மி ஏணியில் ஏறி தனுஷ் மேலே சென்று விடுவார் என்பது என் கணிப்பு

    ReplyDelete
  8. நன்றி சூர்யா மற்றும் நண்பர்களே !! வீடியோ இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  9. நன்றி விக்கி இணைத்து விட்டேன். இனி நாங்களும் உங்களுக்கு போட்டியா வந்திடுவோம்ல ... வளர்த்த கடா .... சும்மா ஜோக் க்கு தான்

    ReplyDelete
  10. நன்றி கோகுல். திருத்தி விட்டேன் நிறைய பாடி விட்டார் போல இருக்கு. சிபி மன்னிப்பு கேட்க தயங்காதது மாதிரி நான் திருத்திக் கொள்ள தயங்குவதே இல்லை

    ReplyDelete
  11. நன்றி மனோ. வாழ்த்துக்கள் யாருக்கு ?

    ReplyDelete
  12. >>vrufina rajkumar said...

    நன்றி விக்கி இணைத்து விட்டேன். இனி நாங்களும் உங்களுக்கு போட்டியா வந்திடுவோம்ல ... வளர்த்த கடா .... சும்மா ஜோக் க்கு தான்


    இதை வன்மையா கண்டிக்கிறேன்.. வீடியோ விக்கியை யாராலும் மிஞ்ச முடியாது ஹி ஹி

    ReplyDelete
  13. இப்போதைக்கு ஹிட் .அவ்வளவுதான்.

    ReplyDelete
  14. ஆமாம் சண்முகவேல். ஒரு இளைஞர் பட்டாளம் இணைத்திருக்கிறது, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  15. haa haa Rufi pattai ipothan mulusa ketenda..:)

    ReplyDelete
  16. வாங்க வாங்க தேனம்மை. இடையே இப்படி ஜாலி பாட்டும் தேவையாகத் தானே இருக்கிறது

    ReplyDelete
  17. கலக்கல்.தனுஷோட வாய்ஸ்ல பாட்டு ரொம்ப நல்லா இருக்குது.முதல் தடவையா இந்த பாட்டு கேட்டேன்.ரொம்ப பிடிச்சிட்டுது.பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

    என் மனதை திருடிய பாடல்கள்

    ReplyDelete
  18. நானும் இந்தப்பாடல் ஃபேமஸ் ஆன பிறகுதான் கேட்டேன். அவ்வளவா இம்ப்ரஸ் ஆகலை எனக்கு!:)

    என் வலைப்பூவுக்கு வந்து கருத்தும் பதிந்தமைக்கு நன்றிகள்! :)

    ReplyDelete
  19. நன்றி சித்தாரா தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  20. நன்றி மகி taste differs. no problem
    தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!