Bio Data !!

16 November, 2011

"போதுமப்பா சந்திப்பைப் பற்றிய பதிவு " எனப் புலம்பாதீர்கள்.

தேனம்மையிடம் நான் சென்னை வருவதாக சொன்னதும் வேடியப்பனின்(எனக்கு பின்னால் புத்தகங்களுக்கே  பலம் கொடுத்து நிற்கிறாரே அவரே தான்) discovery book ஸ்டாலுக்கு வந்து விடலாம் அது தனக்கும் பக்கமாக இருக்கும் என்று சொன்னார்கள். காலை 10 .30க்கு சந்திப்பதாக ஏற்பாடு. நான் 8 ஆம் தேதி காலையில் என் கணவரின் தம்பி வீட்டிலிருந்து வந்து விடுவதாக சொல்லி இருந்தேன் . என்ன ட்ராபிக் ! என்ன ட்ராபிக் !  11 .30 க்கு தான் வர முடிந்தது. தான் VIP ஆக கூட்டம் தொடங்கிய பின் தான் வர வேண்டும் என்று எண்ணி 11 .00 மணிக்கு வந்திருக்கிறார் 'மாண்பு மிகு' செல்வக்குமார் அவர்கள். நான் அதற்கும் அரை மணி லேட் எப்பூடி?
வேடியப்பன்
வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை. அங்கே உள்ள புத்தகங்களை பற்றி  நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். நான் போகும் போதே நண்பர்கள் அனைவருக்கும் ஏதாவது புத்தகம் பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை அவர்கள் தேர்வில் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப சரியான புத்தகங்களை வேடியப்பன் தேர்வு செய்து கொடுத்தார். நண்பர் செல்வகுமார் தனது அடுத்த ப்ராஜெக்ட் காந்திஜியைப் பற்றியது என்பதால் அது சம்பந்தமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டார். அவரது மிகச் சிறந்த முயற்சியில் அணிலின் பங்காய் இந்த புத்தகங்கள் இருப்பதில் எனக்கு பெருமை. வேடியப்பன் அவர்களுக்கும்  புத்தகம் பரிசளிக்க ஆசை இருந்தது. அது கடலைக்கடை வாசலில் கடலை வண்டி போட்டு விற்பதை போல் ஆகும் என்பதால் அந்த விருப்பம் கை விடப் பட்டது.

அங்கே இருக்கும் போதே செல்வகுமார் அலைபேசியில் அழைப்பு.  எண்ணைப் பார்த்ததும்,சத்தம் வராமல் "கௌசல்யா" என்று உதடசைத்து என் கையில் கொடுத்தார். "ஹலோ!!அண்ணா!" என்றார் கௌசல்யா
"நான் அண்ணா இல்லம்மா அக்கா!" என்றேன்
"அக்கா.....எனக்கு பொறாமையா இருக்குதுக்கா" என்றார். அந்த குரலில் பொறாமை இல்லை அன்பு தான் பொதும்பிக் கொண்டிருந்தது.
செல்வகுமார் சிறப்பான மனிதர். "HELLO ! GOOD MORNING !RUFINA!" என்று சொல்லும் போதே அவருக்குள் இருந்து அந்த உற்சாகம் நம்முள் படர ஆரம்பித்து விடும். அதன் பிறகு அவர் பேசி முடிக்கும் வரை உல்லாச ஊஞ்சலாட்டம் தான். அவரது "முத்தக் கவிதைகள்" பிரசித்தி பெற்றவை. மனுஷர் முத்தத்தை பற்றி ஆராய்வதில் கமலஹாசனுக்கு அடுத்து நிற்பார் என நினைக்கிறேன். சொல்ல முடியாது முந்தி விட்டாலும் ஆச்சரியம் இல்லை. 
ஜேம்ஸ், தேனம்மை, ரூபினா , செல்வா, ஜிபின்
                                                                                
மேலே இருப்பதில் நாலு பேரை பற்றி இப்பொழுது உங்களுக்கு தெரியும். தரையில  இருக்கிறாரே அவர் தான் என் கணவரின் தம்பி. என் புகுந்த வீட்டில் ஒரே அலை வரிசையில் இருப்பது நாங்கள் இருவரும் தான். சந்திப்பின் எல்லா போட்டோக்களும் அவர் எடுத்தது தான். ஆனால் அவரை மட்டும் இப்படி எடுத்து விட்டோம். ஏதோ இதுவாவது கிடைத்ததே! "தினத்தந்தியில்" Economic Times ஒரு பக்கம் வருமே அது இவர் கை வண்ணம் தான். அது இன்றைய நிலை. உண்மையிலேயே பெரிய மனிதர். திரை உலகில் இவரது முதல் படமே பெரிய ஹிட். "குணா" படத்தில் உதவி இயக்குனர். அது பல ஆண்டு கடும் சோதனைக்கு பிறகு தான். இருந்தும் திரை உலகின் நெளிவு சுளிவுகள் இவருக்கு பழகியே வராத காரணத்தால் பத்தாண்டுகளுக்கு பின் வலுக் கட்டாயமாக வெளிக் கொணர்ந்தோம். ஷேக்ஸ்பியரின் "மாக்பெத்" இவரது முயற்சியால் தமிழாக்கம் பெற்று வெளியிடப் பட்டிருக்கிறது. மற்றும் ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப் படும் முயற்சியில் இருக்கிறது. இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பாயாசத்தின் முந்திரிகளாய் அப்பப்போ இடையில் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும். 

இனி வருவது, இறுதியாக வருவது ஒரு முக்கியமான VIP ...காத்திருங்கள் 

27 comments:

  1. கலக்கிபுட்டீங்க சகோ!

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க சக பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete
  3. தரையில கண் தெரியா கபோதி (சும்மா செல்லமாத்தான் கோபிச்சிகிடாதேjames) மாதிரி இருக்கிறாரே அவர் தான் என் கணவரின் தம்பி. என் புகுந்த வீட்டில் ஒரே அலை வரிசையில் இருப்பது நாங்கள் இருவரும் தான்//

    ஹா ஹா ஹா ஹா சரியான வாரல் கொளுந்தனாருக்கு, நானும் ஒருக்கா சொல்லட்டுமா அப்பிடி ஹி ஹி.....

    ReplyDelete
  4. அற்புதமான சந்திப்பு, இப்படிபட்ட சந்திப்புகளினால் அன்பும் வெளிப்படுகிறது, உறவும் வலுப்படுகிறது, மனசும் லேசாகிறது அதுவே அன்பு வாழ்த்துக்கள் உங்கள் எல்லாருக்கும்...!!!

    ReplyDelete
  5. வணக்கம் ரூஃபினா,

    நாஞ்சில் மனோ சொல்லியிருப்பது போல, எழுத்துகளைத் தாண்டி மனித மனங்களை அறிந்து கொள்ளவும், பழகவும் இதுபோன்ற சந்திப்புகள் உதவுகின்றன.

    உங்களை (மீண்டும்) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ரூஃபினா.. என்னை விட்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டதற்க்காக நேனு கோச்சிகினுடு..

    இன்னும் உங்கள் சிறு கதையை வாசிக்கவில்லை. ஏன் என்று கேட்காதீர்கள். அப்புறம் அடுத்த ஃபோனில் பேச டாபிக் இருக்காது(எனக்கு).

    ReplyDelete
  6. மகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  7. ஒத்த கருத்துள்ளவர்களை சந்திக்கும் போது உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கதானே செய்யும். அந்த உற்சாகத்தை வார்த்தைகளின் வடிவில் அழகாக கொண்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றி விக்கி, உங்கள் பின்னூட்டம் டெம்ப்ளட் ஆகி விடப் போகிறது.

    ReplyDelete
  9. நன்றி லக்ஷ்மி அம்மா, அதற்காகத்தானே இப்படிப் பட்ட பதிவுகள்

    ReplyDelete
  10. இது எனக்கு ரெண்டு வருஷம் தாங்கும் ' னு சொன்னேன் அதற்கு செல்வா "ரெண்டு வருஷமா அதற்க்கிடையில பல தடவை நீங்க சென்னை வரணும்" என்று சொன்னார். சரியாக சொன்னீங்க மனோ

    ReplyDelete
  11. செல்வா சார், நீங்கள் பேசுற தெலுகு சரியானு கண்டு பிடிக்க முடியாதுன்னு அடிச்சு விடுறீங்களா?

    ReplyDelete
  12. நன்றி சூர்யஜீவா என்ன அடக்கி வாசிக்கிற மாதிரி இருக்குது

    ReplyDelete
  13. நன்றி மலேசியாவில் இருக்கும் துபாய் ராஜா.

    ReplyDelete
  14. சுவாரஸ்யமாக செல்கிறது,தொடருங்கள்.

    ReplyDelete
  15. ப்ரமாதம் அசத்தல் ரூஃபினா.. நல்ல அழகான வர்ணனைகள்.. கலைமகள் போட்டிக்கும் எழுத ஆரம்பிச்சிடலாம். மயக்கும் எழுத்து உங்களுடையது.. ப்ளீஸ்.. எதிர்பார்ப்போடு இருக்கேன்.. :))

    ReplyDelete
  16. அற்புதமான சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்ற சந்திப்புகளினால் பதிவுலக உறவு வலுப்பெறும். மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
  17. நன்றி சண்முகவேல். இன்றே கடைசி.

    ReplyDelete
  18. நன்றி தேனம்மை, இன்று பாருங்கள் ஒரு அருமையான தோழியைப் பற்றி எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
  19. நன்றி starjan !! இதற்கு அடுத்து நெல்லையில் கூடிய சந்திப்பில் உங்களைப் பற்றி நானும் துபாய்ராஜாவும் பேசிக் கொண்டோம், உயர்வாகத்தான்.

    ReplyDelete
  20. இதைப்போன்ற சந்திப்புகள் மனதுக்கு மகிழ்ச்சியையும்
    பதிவுலக உறவுகள் இடையில் நல்லுறவையும் ஏற்படுத்தும். சந்தோஷ தருணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  21. நன்றி மகேந்திரன் , வரவுக்கும் சகோதரி என்ற அழைப்புக்கும்

    ReplyDelete
  22. ஹா ஹா பதிவர் சந்திப்பா? நடத்துங்க

    ReplyDelete
  23. >>வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை

    என்னை மாதிரியா? ஹி ஜ்ஹி

    ReplyDelete
  24. //வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை// ஆஹா ..! உங்களின் வருகையால் உண்டான மகிழ்சியில் ஒருவேளை பேச முடியாமல் போயிருக்குமோ? அருமை. என்னை அறிமுகம் செய்தமக்கு நன்றி!

    ReplyDelete
  25. நல்லதொரு சந்திப்பு.. கலக்குங்க :-)

    ReplyDelete
  26. நன்றி வேடியப்பன், நன்றி அமைதி சாரல் !

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!