Bio Data !!

12 November, 2011

discovery book palace சந்திப்பு !


இவர் நம்ம பதிவுலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர். நான்கு ஆண்டுகளாக பழக்கம். ஆனால் இந்த முறை சென்னை செல்லும் போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். உடல் சரியில்லாமல் கொஞ்சம் டல்லாக இருக்கிறார். படு ஸ்மார்ட் பார்ட்டி. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் என் அலுவலக நண்பர் CCNA வில் 100 /100 வாங்கியதாக செய்தித் தாளில் பார்த்தவுடன் CCNA மேல் ஒரு காதல். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என அன்றைய ஹீரோ வான ஆர்குட் க்ரூப்ஸ் இல் தேடிய போது சிக்கினார். நாகர்கோயில் காரர் என்றதும் ஒரு பாசம் (என் திருமண வாழ்வின் முதல் ஆறு வருடங்கள் இருந்த ஊர் அல்லவா?)அன்று முதல் நண்பர்கள். அப்பொழுது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சுமார் அரை லட்சம் மாதம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு கனவுத் தொழிற்சாலைக்குள் (அதே தான் சினி பீல்ட் தாங்க) தொபுக்கடீர்னு குதிக்க தயாராக இருந்தார். வீட்டுக்கு , ஏன் அவங்க அம்மா அப்பாவுக்கு கூட ஒரே பிள்ளை. அதனால நான் பேசும் போதெல்லாம் அதை டிஸ்கரேஜ் செய்து கொண்டே இருப்பேன். 

திடீர்னு ஒரு நாள் "நான் வேலையை விட்டுட்டேங்க. வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தாத் தான் சாதிக்க முடியும்"  னு சொன்னார். எனக்கு பகீர்னது. வளரும் பயிர் சின்ன வயதில் மிக உயர்ந்த வேலை. அதை விட உயர்வாக அதை விடுவதில் இருந்த துணிச்சல்.   ஒன்றும் சொல்வதற்கில்லை. வேலையை விட்டாச்சு. அதன் பின் கண்டிப்பாக நம்பிக்கை ஊட்டி தான் பேச வேண்டும். 

கொஞ்ச காலம் ரொம்பவே கஷ்டப்பட்டார். IT துறையில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர் சிரம தசையில் இருந்தார். கட் அண்ட் பேஸ்ட் அது தாங்க எடிட்டிங் துறையில் தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு சில வளர்ந்த எடிட்டர்களிடம் உதவியாளராக சேர முயன்றார். நடக்கவில்லை.  இன்றைய டெக் உலகத்தில் இவரது கம்ப்யூட்டர் அறிவு மிக எளிதாக தொழில் கற்றுக் கொள்ள வைத்தது. சங்கத்தில்  சந்தாதாரராக இருந்தால் தான் அவர் பெயர் வெள்ளித்திரையில் வரும். அதற்கு ஒரு பெரிய தொகை தேவையாக இருந்தது. வேலையை விட்டது வீட்டுக்கு தெரியாது. இந்த நிலையில் சில காலம் இவர் செய்த எடிட்டிங் க்கு இவர் சொந்தம் கொண்டாடாமல் இருந்து பின் சங்கத்தில் சந்தாதாரராகி விட்டார். பல விளம்பரப் படங்கள் செய்திருக்கிறார். "திருமண மாலை" சில காலம் எடிட்டிங் செய்தார். இவர் எடிட்டிங் செய்த படம் முதன் முதலாக இவர் பெயரில் அநேகமாக ஜனவரியில் வெளிவரும். 

சொந்தத்தில் இப்பொழுது எடிட்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். அங்கே போய் படங்கள் எப்படி எடிட் செய்யப் படுகின்றன என்று செய்முறை விளக்கம் தந்தார். பறந்து பறந்து அடிக்கிற பாச்சா வெல்லாம் இனிமே என்னிடம் பலிக்காது. அதெல்லாம் எப்படி என்று சொல்லித் தந்து விட்டார்.

சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க அப்பா சென்னையில் "உலகம் சுற்றும் வாலிபன்" ஷூட்டிங் பார்க்க ஒரு சிபாரிசில் கூட்டி போயிருந்தார்கள். க்ளோப் உருண்டையில் இருந்து மஞ்சுளா ஆடிய படியே படிகளில் கீழே இறங்கி வரும் காட்சி.  சுற்றி இருப்பவர்கள் வீரிய மௌனம் கடைப் பிடிக்க வேண்டி இருந்தது. சின்ன சத்தம் வந்தாலும் இயக்குனர்களுக்கு கோபம் வந்து விடும். ஆனால் இப்பொழுது எடிட் பண்ணாமல் ஒரு காட்சி காட்டினார். அதில் பின்புலத்தில் பேசிக் கொள்வதெல்லாம் கேட்கிறது. "நோ ப்ராப்ளம். அதை எரேஸ் செய்திடுவோம்" னு சொன்னார்.         

அதன் பின் டப்பிங் ஸ்டுடியோ பார்த்தேன். ஏற்கனவே AIR  இல் நிகழ்சிகள் வழங்கி பழக்கம் இருப்பதால் கொஞ்சம் 'தெரிஞ்ச மாதிரி' கேள்வி எல்லாம் கேட்டேன். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகணும்கறது எனது நெடு நாள் கனவு. இப்போ வாழ்நாளில் பாதி ஓடி விட்டது, பார்ப்போம் ! ! ஹோட்டல் அக்க்ஷயாவில் பிரைட் ரைசும், சாம்பார் வடையும் வாங்கித் தந்தார். அன்று நான் சைவம் சாப்பிடும் மூடில் தான் இருந்தேன். அந்த சாம்பார் வடைக்காகவாவது மறுபடியும் சென்னை செல்ல வேண்டும். 

நிறைந்த மனதோடு, டிஸ்கவரி புக் பாலஸில்  நடக்கப் போகும் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து பிரிந்தேன். இன்னும் தொடர எண்ணம் உண்டு ....

அவர் பேரை சொல்லாமலே விடுறேன்னு பார்க்கிறீங்களா ? வாய்க்குள்ளே நுழையாத ஒரு பெயர் இப்போதைக்கு விட்டுருவோம் இன்னொரு மழை நாளில் சொல்கிறேன்.

26 comments:

  1. Enjoy my English blog also friends
    http://blossom111111.blogspot.com/2011/11/love-game.html

    ReplyDelete
  2. அவரை பற்றிய மிக அருமையான நினைவு பகிர்தல் !!

    ReplyDelete
  3. பேரை சொல்லவேயில்லையே..

    ReplyDelete
  4. இனி விஜய்காந்தின் சண்டை காட்சி பாப்பீங்க பாப்பீங்க ஹா ஹா ஹா ஹா சினிமாவின் ரகசியம் தெரிஞ்சா சினிமா ரசிக்கவே முடியாதுப்பா...!!!

    ReplyDelete
  5. அவர் பெயர் ஜிபின், மழை நாளில் சொல்லலாம்னு இருந்தேன் நீங்க கேட்டதால சொல்லிட்டேன் இந்திரா

    ReplyDelete
  6. நன்றி துபாய் ராஜா நலம் தானா. தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  7. எப்படி எடுத்தாங்கன்னு தெரிஞ்சிக்கறப்போ ஒரு த்ரில்லாத்தானே இருக்குது மனோ? கவனிச்சீங்களா உங்க ஊர் thaan

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு பேர் சொல்லலியே?

    ReplyDelete
  9. "வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தாத் தான் சாதிக்க முடியும்" உண்மையான விசயம்

    ReplyDelete
  10. நன்றி லக்ஷ்மி அம்மா அவர் பெயர் ஜிபின். அவரது வாழ்வு திரையுலகில் ஜொலிக்க வாழ்த்துங்கள்

    ReplyDelete
  11. நன்றி நீச்சல்காரன், ரொம்ப நாளைக்கப்பறம் வந்தமாதிரி இருக்குது. நலம் தானா?

    ReplyDelete
  12. சகோ சினிமா வெறும் சீன்மாவா இருந்தாலும்...அதன் பின்புலத்தில் உழைக்கும் நபரைப்பற்றி அழகா சொல்லி இருக்கீங்க நன்றி!

    ReplyDelete
  13. சினிமா வெறும் சீன்மாவா //
    ஹய்!! இது நல்லா இருக்கே !!

    ReplyDelete
  14. உழைக்க ஒரு உத்வேகத்துடன் கிளம்பிட்டார். வாழ்த்துவோம்.

    ReplyDelete
  15. உண்மை தான் FOOD அவரிடம் பேசும் போது நமக்கே ஒரு நம்பிக்கை பிறக்கும் எதையும் சாதித்து விடலாம் என்ற துணிவு வரும்

    ReplyDelete
  16. நன்றி starjan , தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  17. ஜிபின் ஒரு சூப்பர் ஸ்டார் வித் கார்த்திக்..:)

    ReplyDelete
  18. ஹேய் !! அந்த குட்டிப் பையனைப் பற்றி எழுத விட்டுப் போச்சே!! நல்ல சந்திப்பு இல்லையா தேனம்மை

    ReplyDelete
  19. >>கட் அண்ட் பேஸ்ட் அது தாங்க எடிட்டிங் துறையில் தான் இவருக்கு ஆர்வம் இருந்தது.

    ஐ ஜாலி என் டிபார்ட்மெண்ட் ஹா ஹா

    ReplyDelete
  20. >>அவர் பேரை சொல்லாமலே விடுறேன்னு பார்க்கிறீங்களா ? வாய்க்குள்ளே நுழையாத ஒரு பெயர் இப்போதைக்கு விட்டுருவோம் இன்னொரு மழை நாளில் சொல்கிறேன்.

    ஆமா, பெரிய மணி ரத்னம் மழை நாள்ல குதிரைல வந்துட்டே சொல்ப்வாங்க ஹய்யோ அய்யோ

    ReplyDelete
  21. யாரங்கே !! இந்த சிபி வாயில அந்த பிளாஸ்திரியை எடுத்து கட் அண்ட் பேஸ்ட் !!

    ReplyDelete
  22. //நிறைந்த மனதோடு, டிஸ்கவரி புக் பாலஸில் நடக்கப் போகும் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து பிரிந்தேன். இன்னும் தொடர எண்ணம் உண்டு ...//கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!