Bio Data !!

04 November, 2011

சில அழகிய பனித் துளிகள் !!


1 )  தொல்லை செய்யும் பூனையை என்னவர் இரண்டு கால்களிலும், அவரிடம் இருந்து தப்பித்து அது தன் நான்கு கால்களிலும் துள்ளிக் குதித்து ஓடும் அழகே அழகு

2 )மழைக்காலக் குடைகளாய், ஹெல்மெட்டுகள் தலை அடிபடாமல் இருப்பதை விட தலை நனையாமல் இருப்பதற்கு அதிக முக்கியத்துவம்

3 )வார்த்தைகளின் வெளிப்பாட்டிற்கும், வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் பலரிடம் 'முரண்' இருக்கிறதே ஏன்? ஏன்?ஏன்? 

4 )மனநலம் குன்றிய குழந்தைகள் எல்லாம் ஒரே ஜாடையில் இருப்பது போல தோற்றம். அவை தெய்வக்குழந்தைகள் ஆனதாலா?



5 )தலை குனிந்து, நெளிந்து வளைந்து நடக்கும் பெண்கள் ,காவல் துறை சீருடையில் பார்க்கும் போது எங்கே போய் முட்டிகிறதுன்னு தெரியல.
சீருடை போட்டதும் சிக்கென கம்பீரம் தொற்றிக் கொள்ள வேண்டாமா?

6 )காதல் தோல்வி கலங்க வைக்கும். தோற்ற காதல் ஜெயித்து மறுபடியும் தோற்றால் உயிரை உருக்கி விடும். கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் 

7 )இருட்டில், துழாவி அலைபேசி எடுத்து , FM க்கு உயிர் கொடுக்கும் போது நமக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒலித்தால் அடடடா !!அறிவியலின் ஆனந்தம் !

8 )கணவனோடு கோபம் கொண்டு அந்நிய ஆடவனிடம் அந்தரங்கம் பகிர்வது ஆளும் கட்சி மேல் ஆத்திரம் கொண்டு எதிர்கட்சிக்கு ஓட்டு போடுவது போல


9 )உன்னிடம் தோற்க எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர். இன்னும் தயக்கம் ஏன்? முயற்சி செய். முன்னேறு !

10 )உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.
நான் சென்னைக்கு போறேன்(வாரேன்) அதனாலே எல்லோரும் பத்திரமா இருந்துக்கோங்க !

22 comments:

  1. உன்னிடம் தோற்க எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர். இன்னும் தயக்கம் ஏன்? முயற்சி செய். முன்னேறு !



    பிடித்த வரிகள்.

    ReplyDelete
  2. நீங்க சென்னைக்கு போயிட்டீங்க இல்ல, நாங்க பத்திரமா இருப்போம்...

    ReplyDelete
  3. )வார்த்தைகளின் வெளிப்பாட்டிற்கும், வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் பலரிடம் 'முரண்' இருக்கிறதே ஏன்? ஏன்?ஏன்? //

    இப்ப்டிபட்டவர்களை தினம் தினம் பார்க்கிறேன் நான்...!!!

    ReplyDelete
  4. )தலை குனிந்து, நெளிந்து வளைந்து நடக்கும் பெண்கள் ,காவல் துறை சீருடையில் பார்க்கும் போது எங்கே போய் முட்டிகிறதுன்னு தெரியல.
    சீருடை போட்டதும் சிக்கென கம்பீரம் தொற்றிக் கொள்ள வேண்டாமா?//

    சீருடை போட்டுட்டு தலையில பூ வச்சிருந்த பெண் போலீசை எங்கயோ கண்ட நினைவு...!!!

    ReplyDelete
  5. காதல் தோல்வி கலங்க வைக்கும். தோற்ற காதல் ஜெயித்து மறுபடியும் தோற்றால் உயிரை உருக்கி விடும். கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் //

    ஐயோ இதை ஏன் நியாபகபடுத்துறீங்க...

    ReplyDelete
  6. 10 )உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.//

    ரைட்டுங்கோ....

    ReplyDelete
  7. நான் சென்னைக்கு போறேன்(வாரேன்) அதனாலே எல்லோரும் பத்திரமா இருந்துக்கோங்க !//

    புயல் வருதுலேய் மக்கா ஓடிருங்க தலைதெறிக்க ஹி ஹி...

    ReplyDelete
  8. பொன்மொழிகள் அனைத்தும் சூப்பர்....!!!

    ReplyDelete
  9. அழகிய பனித் துளிகள் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    தங்கள் பயணம் சிறக்க் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நன்றி லக்ஷ்மி அம்மா நலமா இருக்கீங்களா?

    ReplyDelete
  11. உங்களுக்கு கொஞ்சம் அக்குரும்பு ஜாஸ்தி தான் நீங்க எந்த ஊரு சொல்லுங்க அங்கே அடுத்து வரேன்

    ReplyDelete
  12. நன்றி தமிழ்வாசி , நலம் தானா? சென்னையில் (க்ரோம்பேட்) பதிவர்கள் சந்திப்பு நடப்பதாக 'குட்டி சுவர்க்கம்' வலைப்பூவில் பார்த்தேன் தகவல் தெரிந்து மழையும் இல்லாமல் இருந்தால் போகலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் உதவி செய்யுங்கள்

    ReplyDelete
  13. அப்போ அப்போ fb ல போட்டவை நானே ரசித்ததால் நீங்களும் ரசிக்கலாமே என்று தொகுத்தேன் மனோ. அப்படியே ஒரு பதிவும் தேத்தியாச்சில்ல அதான்

    ReplyDelete
  14. நன்றி மங்காத்தாடா, என்னங்க இது மரியாதை இல்லாத பேரா இருக்குது ஹா ! ஹா!
    தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  15. POINT NO.5, 7 & 8 UNMAYANA EDARTHAMANA THUILIGAL.

    VAZTHUKKAL
    HAPPY TO JOURNEY

    KARUNAJI
    CHENNAI

    ReplyDelete
  16. ///வார்த்தைகளின் வெளிப்பாட்டிற்கும், வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் பலரிடம் 'முரண்' இருக்கிறதே ஏன்? ஏன்?ஏன்? ////

    இன்னும் மனதை பிசைந்து என்றென்றும்
    எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது...
    விடை தான் இன்று வரை கிடைக்கவில்லை...
    ஆனாலும் தேடுதல் நிற்கவில்லை..

    ReplyDelete
  17. அருமையான பகிர்வு சகோ. நெல்லையிலிருந்து சென்னை சென்று அங்கேயும் மழை பெய்யவிடாமல் தடுத்து விட்டீர்களோ என்று எனக்குள் ஒரு சந்தேகம்.இன்றைய மினி பதிவர் சந்திப்பில் பதிலை சொல்லுங்க.

    ReplyDelete
  18. நன்றி மகேந்திரன் என்னால் சகித்துக் கொள்ள முடியாத குணம் அது ஒன்று தான் . நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  19. வேண்டாம் இங்கேயே சொல்றேன். நான் அங்கு வந்த போது பெய்யாமல் இருந்து என் பிளான் படி செயல்பட உதவியை மழையின் கரங்களுக்கு என் நன்றிகள் அதற்காக மழை பெய்யாமல் பண்ணினேன் என்ற அபவாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். "பெய்யான பெய்யும் மழை ' பத்தினி. 'பெய்யாதே என்றால் பெய்யாமல் இருப்பது " ?????

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!