Bio Data !!

11 November, 2011

பள பள மாம்பலம் !!


சொல்ல கொஞ்சம் வெட்கமா தான் இருக்குது இருந்தாலும் சுய சரிதை அல்லவா சொல்லிடலாம்னு முடிவு. ஹா !! ஹா !! இது நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது கொஞ்சம் ஓவர் பில்ட் அப்பு !!

நான் பொதுவாவே இருக்கும் இடத்திலேயே சுகம் காண்பவள். அதிகம் ஊர் சுற்ற பிடிக்காது பல வருடங்களுக்கு பின் சென்னை போனேன். கிளம்பும் போதே என் மகள் " அம்மா !சென்னையில தொலஞ்சு போய்டாதே . இந்த மதுரையிலேயே எந்த திசையில போகணுமோ அதுக்கு எதிர் திசையை காட்டுவே. பத்திரம். ஒவ்வொரு இடம் போய் சேர்ந்ததும் போன் பண்ணு " என்றாள்.  

சென்னையில் எனக்கு தெரிஞ்ச ஒரே இடம் (சந்தேகமில்லாமல் தெளிவாக) மீனம்பாக்கத்தில உள்ள BSNL ட்ரைனிங் சென்டர் தான். தாம்பரத்தில இறங்கி எலெக்ட்ரிக் ட்ரைன் பிடிச்சு சரியா போய் இறங்கிடுவேன். நான் முதல் முதலில் போக வேண்டிய இடம் அடையாரா இருந்ததால வெஸ்ட் மாம்பலத்தில இறங்கி ஆட்டோ பிடிச்சு வரச் சொல்லி இருந்தாள் தோழி. "அதெல்லாம் வந்திடுவேன்" என்று கெத்தாக சொல்லி விட்டேன். எனது 'செல்'லில் சிக்னல் வரும் இடத்தை சொல்லும் ஏற்பாடு செய்திருந்ததால்  மிகுந்த நம்பிக்கை எப்படியும் சரியாக போய் சேர்ந்திடுவோம் னு.  

ரயிலில் எனக்கு அருகில் தாம்பரம் தாண்டியதும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒரு பெண் ஏறியதில் இருந்தே அலட்டலாய் ஏதாவது செய்து கொண்டே இருந்தது. அதனால் அடுத்த  பெண்ணிடம் மாம்பலம் எத்தன ஸ்டேஷன் தாண்டி வரும்னு கேட்டேன். "நான் ஊருக்கு புதுசுங்க, "என்றது. வேறு வழியில்லாமல் மற்ற பெண்ணிடம் அதே கேள்வியை கேட்ட போது பிரகஸ்பதி அது எக்ஸ்பிரஸ் என்பதை நினைக்காமல் "நாலு ஸ்டேஷன் தாண்டி வரும்" என்று சொல்லி விட்டார்கள். நானும் சாவகாசமாக இருந்து விட்டேன். அடுத்த ஸ்டேஷன் மாம்பலம், ரொம்ப நேரம் நின்றதும் 'செல்'லை எடுத்துப் பார்த்தால் அது "துரைசாமி நகர்" என்று சொல்லி கழுத்தறுத்து விட்டது.  வண்டி புறப்பட்டு ஸ்டேஷன் கடக்கும் போது பார்த்தால் மஞ்சள் கலரில் மாம்பலம் பளபள வென்று இருக்கிறது. 

என் பதற்றத்தைக் கண்டதும் எங்கே கீழே குதித்து விடப் போகிறேனோ என்று பக்கத்தில் இருந்த பெண் என் கையை பிடித்த படி  "நீங்க எக்மோர் போய் அங்கே  இருந்து அடையார் போய்டுங்க " என்று சொன்னாள். "ஓகே!ஓகே! " என்றேன் "ம்க்கும் இதுக்கு மட்டும் குறைச்சலில்ல !" சரி எக்மோர் போய்க்லாம்னு சாவதானமா உட்கார்ந்தா மறுபடியும் ரயில் நிற்கிறது. பார்த்தால் "சேத்பட்" மற்றும் ஒருவரிடம் கொஞ்ச நேரம் நிற்குமா? இறங்கலாமா? என்பதை எல்லாம் தெளிவு படுத்தி இறங்கி டிக்கெட் எடுத்து எலெக்ட்ரிக் ட்ரைன் ஏறி, மாம்பலத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். 

டிஸ்கி: ஒரு பிளாட்போர்மில் இருந்து மறு பிளாட்பார்முக்கு ஏறி இறங்கும் வழியிலேயே  டிக்கெட் கவுன்ட்டர் வைத்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு நன்றி.   

2 )படாத பாடு பட்டு போய் சேரும் போது, வீட்டைக் கண்டு பிடிக்கும் சிரமம் இல்லாமல் 'செல்' லை முழு சார்ஜிலும், சைலென்ட் மோடில் போடாமல் இருந்து காப்பாற்றிய தோழிக்கு ஒரு நன்றி. 

3 )சென்னை ரொம்ப மாறி இருக்கிறது. மரியாதையாக பேசி சரியான இடம் கொண்டு சேர்த்து, சரியான சார்ஜ் (!?!) வாங்கிய ஆடோக்காரருக்கு ஒரு நன்றி 

33 comments:

  1. மனிதம் தொலைந்து விட்டது அப்படி என்று நிறைய பேர் புலம்பி கொண்டு இருக்கிறார்கள்... அவர்களெல்லாம் உங்கள் பதிவில் உள்ள பின் குறிப்புகளை படித்தால் போதும்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நன்றி சூர்யா என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே !

    ReplyDelete
  5. தமிழ் தோட்டம் நன்றி தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக!

    ReplyDelete
  6. கும்மாச்சி நன்றி அது என்னங்க பேரு

    ReplyDelete
  7. டிஸ்கி: ஒரு பிளாட்போர்மில் இருந்து மறு பிளாட்பார்முக்கு ஏறி இறங்கும் வழியிலேயே டிக்கெட் கவுன்ட்டர் வைத்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு நன்றி.//

    மும்பையிலும் இப்பிடி இருந்தா நல்லா இருக்குமே...!

    ReplyDelete
  8. 3 )சென்னை ரொம்ப மாறி இருக்கிறது. மரியாதையாக பேசி சரியான இடம் கொண்டு சேர்த்து, சரியான சார்ஜ் (!?!) வாங்கிய ஆடோக்காரருக்கு ஒரு நன்றி //

    சிபி கண்ணாடி மேல சத்தியமா சான்ஸே இல்லை உங்களைப் பார்த்து "அம்மா"கட்சிகாரர்னு பயந்துருப்பான் ஹி ஹி...

    ReplyDelete
  9. ருபீ சென்னைல என்னை பொறுத்தவரைக்கும் எல்லா ஆட்டோக்காரங்களும் நல்லா பழகுறாங்க. போயிட்டிருக்கும் போதே அவங்க கதைலாம் சொல்லுவாங்க. சில நேரம் வேடிக்கையா இருக்கும். சில நேரம் பாவமா இருக்கும். சமீபத்துல சமச்சீர் கல்வி வழக்கினால் விடுமுறை அதிகரிப்பால் தன் பத்தாம் வகுப்பு மகன் படும் திண்டாட்டத்தை சொல்லும் போது வேதனையா இருந்துச்சு.

    சென்னை வந்த புதிதில் நானும் நிறையமுறை உங்கள போல பல்பு வாங்கியிருக்கேன். கிழக்கு தாம்பரம்,மேற்கு தாம்பரம்ன்னு நிறைய முறை தப்பா பஸ் ஏறி வாங்கியும் கட்டியிருக்கேன் :-))


    நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எப்படியோ சென்று விட்டீர்கள்..அப்படியே பீச் ஸ்டேஷன் போய் பாரிஸ் பார்த்து ஒரு பதிவு போட்டு இருக்கலாம் ...

    ReplyDelete
  11. நல்லா நகைச்சுவையுடன் உங்க அனுபவம் சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

    ReplyDelete
  12. சென்னை வந்து எனக்கு கால் செய்யாம போயிட்டீங்களே..

    ReplyDelete
  13. சகோ அனுபவப்பாடம் எப்போதுமே சுவையானது...நன்றி சென்னை மற்றும் உங்களுக்கும்!

    ReplyDelete
  14. கல கல விறு விறு பதிவு.

    ReplyDelete
  15. மாம்பலமா! நீங்க விஜயன் ப்ளாக்ல சொன்னதைப்பார்த்தவுடன், ஏதோ மாம்ப்ழத்தைப் பற்றி சொல்ல போறீங்களோன்னு நினைத்தேன். எனினும் அனுபவம் ஆயிரம் பாடம் கற்றுத்தரும்.

    ReplyDelete
  16. சென்னை பயணம் அவ்வளவு எளிதானது அல்ல. மக்கள் நெருக்கம். வேகம். ஏமாற்று பேர்வழிகள் இதையெல்லாம் தாண்டி நாம் பத்திரமான செல்வது உண்மையிலேயே பெரிய சாதனையாகத்தான் கருத்ப்பட வேண்டும். லோக்கல் சென்னை வாசிகளுக்கு பிரச்சனையில்லை. வெளியூர் காரர்களுக்குத்தான் பிரச்சனை. நன்றி மேடம்.

    ReplyDelete
  17. என்னுடைய எழுத்தில் !,? கூட பேசும் மனோ - கௌசல்யா எனக்கு கொடுத்த புகழாரம்

    ReplyDelete
  18. எப்படியோ பத்திரமாக வந்துவிட்டீர்கள்.”மொபைலில் துரைசாமி நகர் என காட்டியது”.சிக்னல் ஓவர் சின்சியரா வேலபாக்குது மேடம்.

    ReplyDelete
  19. நன்றி ஆமீனா ரொம்ப சோகமான விஷயம் என்னன்னா உங்க எல்லோரையும் பதிவர் சந்திப்பில் பார்க்க மிகுந்த முயற்சி செய்தேன் சரியான தகவல் கிடைக்கவில்லை
    அதுக்கென்ன அடுத்த தடவை சந்திச்சிடுவோம்

    ReplyDelete
  20. நீங்க ஜோசியரா கோவை நேரம்? அதுவும் நடந்துச்சு தொடர்ந்து வருது

    ReplyDelete
  21. நன்றி லக்ஷ்மி அம்மா எல்லாம் "இடுக்கண் வருங்கால் நகுக" தான்.

    ReplyDelete
  22. sorry பார்வையாளன் ரொம்ப டைட் schedule அடுத்த தடவை நிச்சயம் பார்க்கிறேன். முதல் பரிசு பெறப் போவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  23. நன்றி விக்கியுலகம். நல்ல வேளை என் கணவர் என் ப்ளாக் படிப்பதில்லை. படித்தால் இனி தனியாக எங்கேயும் அனுப்ப மாட்டார்

    ReplyDelete
  24. அப்படி ஏதாவது டகால்டி வேலை பண்ணினா தானே வரீங்க FOOD

    ReplyDelete
  25. நன்றி விஜயன். ஒரு நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது." ஒருத்தன் ஓடுவான். பின்னாடியே இன்னொருவன் ஓடுவான். ஏன் ஓடுறாங்கன்னு தெரியாமலே நாமும் பின்னாடியே ஓடுவோம் அது தான் சென்னை." சரியென்று தான் நினைக்கிறேன்

    ReplyDelete
  26. thirumathi bs sridhar நன்றி. இதில் வேடிக்கை என்னவென்றால் இதற்கு முன் இந்த டெக்னிக்கில் தான் சென்னையில் பத்திரமாக சென்று வந்தேன். ஆனால் இந்த நான்கு ஆண்டுகள் இடைவெளியில் மூலை முடுக்கெல்லாம் டவர் போட்டதன் விளைவு தான் இது

    ReplyDelete
  27. please visit and encourage my one more blog address given below. thank u
    http://blossom111111.blogspot.com

    ReplyDelete
  28. 2 )படாத பாடு பட்டு போய் சேரும் போது, வீட்டைக் கண்டு பிடிக்கும் சிரமம் இல்லாமல் 'செல்' லை முழு சார்ஜிலும், சைலென்ட் மோடில் போடாமல் இருந்து காப்பாற்றிய தோழிக்கு ஒரு நன்றி.// இத இத ரொம்ப ரசிச்சேன் ரூஃபினா.. :)

    ReplyDelete
  29. அதில ஒரு விஷயம் இருக்கு போனில் சொல்கிறேன் தேனம்மை

    ReplyDelete
  30. >>சொல்ல கொஞ்சம் வெட்கமா தான் இருக்குது

    அடடா.. அப்போ சொல்லாதீங்க

    ReplyDelete
  31. >> Your comment will be visible after approval.

    ஹா ஹா நடக்கட்டும்

    ReplyDelete
  32. Your comment will be visible after approval. //

    நீங்க போஸ்ட் போட்டு ஏழு நாள் கழித்து வந்தா அப்படித்தான்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!