Bio Data !!

18 April, 2025

# நேசக் கூட்டின் திறவுகோல். எழுதத்தூண்டிய தலைப்பைத் தந்த நண்பர் நவாஸுக்கு நன்றி. எனக்கு கல்லூரி நாட்களில் வாசித்த ஆட்டோகிராஃப் ஒன்று ஞாபகம் வருகிறது. அட்சர சுத்தமாய் வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கருத்து நினைவில் உண்டு. "என் இதயக் கதவை உனக்காகத் திறந்து வைத்தேன். உன் வரவுக்காகக் காத்திருந்தேன். நீ நுழைந்ததும் கதவைப் பூட்டி சாவியை ஜன்னல் வழியே கடலில் எறிந்தேன். இனி வெளியேறுதல் என்பது உனக்குமில்லை. எனக்குமில்லை. " இது தான் ஆட்டோகிராபின் சாராம்சம். இது அந்த வயதில் இருக்கும் அதிகப்படியான பொஸசிவ்நெஸ் . ஒருவர் கிடைத்து விட்டால் அவரை முழுவதுமாக தமக்கே என வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தின் உச்ச பட்ச வெளிப்பாடு. ஆனால் வயது அதிகமான பின் எனக்குத் தோன்றுவது அந்த நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைத்து உனக்கு எப்போது என்னை விட்டு விலகத் தோன்றுகிறதோ அப்போது கதவைத் திறந்து நீ போகலாம் . என்ற உரிமையைக் கொடுத்து வைத்தால் நாமும் நாம் நேசிப்பவரும் சுதந்திரமாக சுவாசிக்கலாம். அழுத்தமற்ற அன்பை அனுபவிக்கலாம். நம் நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைப்போம். இது அனேகமாக நேசிப்பவரை நம்மிடமே இருத்தி வைக்கும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!