Bio Data !!

29 April, 2025

#குழந்தை ஓவியர்கள்

"இன்று பல குழந்தைகள் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக ஓவியத் திறமை. ஆனால் பெற்றோர்கள் உடனே ஒரு வகுப்பில் கொண்டு சேர்க்கத் துடிக்கிறோம். அதனால் இயல்பான கற்பனை வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதே குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவது தான். பூ தன் சந்தோஷத்துக்காகப் பூப்பது போல " என்றார் குழந்தைகள் புத்தகங்களில் ஓவியம் வரையும் தோழர் கார்த்திகா. ஓவியர் கார்த்திகா " குழந்தை வரைவது முதலில் தன் சொந்த சந்தோஷத்துக்காக. பத்து வயது வரையில் தன் போக்கில் வரைய விட்டு விட வேண்டும். பின் டெக்னிக் பழகிக் கொள்ளும். வண்ணங்கள் கொடுக்கும் அதே மகிழ்வை கருப்பு வெள்ளையும் குழந்தைகளுக்கு கொடுக்கும். ஓவியங்கள் தொடங்குவது கிறுக்கல்களில். " என்றார். " குழந்தைகளுக்கான சங்கம் ஒரு காலத்தில் பொது சமூகத்தில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டு இருந்தன. இப்பொழுது தொய்வடைந்துள்ளன. குழந்தை இலக்கியம் எழுதுபவர்கள் பெரும் பொறுப்புணர்ச்சியோடு எழுதணும். தவறான தகவல்களைச் சொல்லி விடக் கூடாது. குழந்தைகளை விமர்சிக்கப் பழக்கணும். அந்த விமர்சனங்களை பெரியவர்கள் பொறுணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்றார் எழுத்தாளர் உதய ஷங்கர். (தொடரும்)

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!