Bio Data !!

22 April, 2025

அனைவருக்கும் இனிய புத்தக தின நல் வாழ்த்துகள்.!! என்னைப் பொறுத்த வரை இது என் பிறந்த நாளை ஒத்தது. இன்று ஒரு நல்ல விஷயம் ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பல நாள் தொடர்பவர்களுக்கு என் தோழி சுபாவை நன்குத் தெரிந்திருக்கும். நெல்லையைச் சேர்ந்தவர். நான் படித்த பள்ளியிலேயே எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் படித்தவர். ஹலோ FM எனக்கு ஒரு சில கண் பார்வை அற்றவர்களை அறிமுகம் செய்தது. அதில் நிலைத்து இருக்கும் நட்பு இவர்களுடையது மட்டுமே. பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். அன்றைய நாட்டு நிலவரம் அவர்களுக்கு அத்துபடி. பல நேரங்களில் எனக்கு ஒரு இயல்பான தோழியிடம் பேசும் உணர்வே இருக்கும். அவர்களிடம் ஒரு சிறந்த பழக்கம் இருந்தது. தனக்கு தோன்றும் பல கருத்துகளை சிலவற்றை உரை நடையிலும் சிலவற்றை கவிதை நடையிலும் சிந்தித்து யாரோடய உதவியோடாவது அதை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இது பல வருடப் பழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதைகளை புத்தக வடிவில் கொண்டு வந்த போது அவர்களுக்கும் அதை செய்யலாமே என்று தோன்றியது. ஆனால் ISBN எல்லாம் இல்லாத ஒருவர் என் சொந்த தேவைக்காக போட்டுக் கொடுத்ததால் , இன்னும் சிறப்பாக செய்யலாம் என யோசித்தார்கள். அது இப்போது ஒரு பதிப்பகம் மூலம் நிறைவேறி இருக்கிறது. முதலில் E- book ஆக வந்தப்போ நான் முக நூலில் தெரிவித்தேன். இப்போ hard copy ஆக புத்தக வடிவில் வந்து விட்டது. இதில் வெள்ளுவன் அவர்கள் அணிந்துரை எழுத நான் முன்னுரை எழுதி இருக்கிறேன். பின் பக்க அட்டையில் பதிய சுபாவைப் பற்றியும், இந்த புத்தகத்தைப் பற்றியும் எழுதிக் கொடுத்து இருக்கிறேன். இவர்கள் இரண்டாவது மகன் பிறந்த பிறகு கண் பார்வை இழந்ததால் ப்ரெயிலி முறை அறியாதவர்கள். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் புத்தகம் போடுவது இன்னும் கொஞ்சம் சுலபமாகலாம். தொடர்ந்து எழுதுங்கள். என்னால் முயன்ற உதவி செய்கிறேன் என்று ஊக்குவித்திருக்கிறேன். "எனக்குத் தெரிந்ததெல்லாம் இருட்டு மட்டும் தான். நான் புரிந்மு கொண்ட அளவில் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன்" என்று சொன்னார்கள்.்இவர்கள் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. இந்த செய்தியை " உலக புத்தக தினமான" இன்று உங்களுக்குச் சொல்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. உலக புத்தக தின நல் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!