Bio Data !!

27 November, 2011

சுவாமி ராமாவின் "இமயத்து ஆசான்கள்"


நம்ம ரஜினி அடிக்கடி போறதாலேயே இமய மலை மேல ஒரு கவர்ச்சி எப்போவுமே உண்டு. அதுவும் சென்னை போயிருந்தப்போ வேடியப்பன் பரிசளிக்க சிறந்த புத்தகம் என சுவாமி ராமா எழுதிய "இமயத்து ஆசான்கள்"  ஐ சொன்னதும் வாங்கினேன். அந்த புத்தகத்தில் என் பெயர் எழுதி இருந்தது போல எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆன்மிகம் சம்பந்தமான புத்தகம் போல தோன்றினாலும் வாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்த சிறந்த புத்தகம். நான் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவள் ஆதலால் முதலில் "உயர்ந்த மதங்களுக்கு அப்பால் ...." என்ற பகுதியை முதலில் தொடங்கினேன்.
                       " உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் ஒரே ஒரு மெய்ப்பொருளில் இருந்து தோன்றியவை தான். நாம் உண்மையை பயிற்சி செய்யாது மதத்தைப் பின்பற்றினால், அது ஒரு குருடனை, மற்றொரு கண் பார்வையற்றவன் வழி நடத்துவதைப் போலாகும். இறைவனுக்கு சொந்தமானவர்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவார்கள். ......"

"அன்பு " என்னும் பயிற்சியை பழகி விட்டால் மற்ற எல்லா பயிற்சிகளும் சுலபமாக படிந்து விடும். "அன்பு" என்பது வார்ம் அப் செய்வது போல. தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் சாது சுந்தர்சிங் இமயமலை வந்து பெற்ற அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

பைபளில் ஏசுநாதர் பற்றி பதிமூணு வயதில் இருந்து முப்பது வயது வரையில் தகவல்கள் இல்லை. அந்த கால கட்டத்தில் இமய மலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பிரபலமான யோகாதிசயங்கள் என்கிறார்கள். நம்பவும் முடியவில்லை. புறக்கணிக்கவும் முடியவில்லை.

இந்த  புத்தகத்தில் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தில் இருந்து தான் வாசித்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அனைத்து தலைப்புகளும் முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. நம் மன நிலைக்கு ஏற்ற பகுதியை எடுத்து வாசிக்கலாம். அது ஒரு கூடுதல் சிறப்பு. 
"இங்கும்-அங்கும் , இகமும்-பரமும் " என்றொரு பகுதி. அறுபது அடி ஆழமான கிணற்றுக்குள் குதித்து ஒருவர் நீராடிக் கொண்டிருக்கிறார். "பரவச நிலையில் இருக்கும் பொது ஒருவர் இயற்கையின் குழந்தையாக கருதி ஆதரவு அள்ளிக்கப் படுகிறார் " என்கிறார் ஆசிரியர். நாம் இன்று இயற்கையை விட்டு ரொம்ப தொலைவு வந்து விட்ட நிலையில் நாம் திரும்பி செல்ல இது சரியான வழிகாட்டியாக இருக்கும். 
நல்ல புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 
புத்தகத்தின் பெயர்                   :இமயத்து ஆசான்கள் 
ஆசிரியர் பெயர்                        : சுவாமி ராமா 
பதிப்பாசிரியர்                           : காந்தி கண்ணதாசன் 
விலை                                         : RS .260 /-
ஆங்கிலப் புத்தகத்தின் பெயர்: LIVING WITH THE HIMALAYAN MASTERS
தமிழில் மொழி பெயர்த்தவர்:    புவனா பாலு
ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்திய சந்தோஷத்துடன் விடை பெறுகிறேன்

16 comments:

  1. அட புத்தகம் நல்லா இருக்கும் போல நன்றிங்க சகோ!

    ReplyDelete
  2. ஆஹா படிக்கணும் போல இருக்கே, ஊர் வந்தா உங்ககிட்டே இருந்து சுட்டுற வேண்டியதுதான் ஹி ஹி...

    ReplyDelete
  3. பைபளில் ஏசுநாதர் பற்றி பதிமூணு வயதில் இருந்து முப்பது வயது வரையில் தகவல்கள் இல்லை. அந்த கால கட்டத்தில் இமய மலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.//

    இமயமலையில் ஏசுநாதர், நம்பமுடியவில்லை....!!!

    ReplyDelete
  4. படிக்க நல்லா இருக்கும் போல. புத்தக பகிர்வுக்கு நன்றி...


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  5. புத்தக அறிமுகத்திற்கு நன்றி சகோதரி...

    ReplyDelete
  6. கொடுத்துட்டாப் போச்சு மனோ

    ReplyDelete
  7. ஏசு நாதர் பற்றிய தகவல்கள் எனக்கும் தான் நம்ப முடியவில்லை. ஆனால் என் அந்த இடைக்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை தெரியவில்லை

    ReplyDelete
  8. நன்றி தமிழ்வாசி .வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் பதவி ஏற்றதற்கு

    ReplyDelete
  9. நன்றி FOOD . பதிவர்கள் தங்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கம் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டால் அவர்கள் அவர்கள் நண்பர்களிடம் சொல்லி அப்படியே பரவும்.

    ReplyDelete
  10. புத்தக விமர்சனம் போடற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ் வாழ்த்துகள் ஹி ஹி

    ReplyDelete
  11. >>பைபளில் ஏசுநாதர் பற்றி பதிமூணு வயதில் இருந்து முப்பது வயது வரையில் தகவல்கள் இல்லை. அந்த கால கட்டத்தில் இமய மலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பிரபலமான யோகாதிசயங்கள் என்கிறார்கள். நம்பவும் முடியவில்லை. புறக்கணிக்கவும் முடியவில்லை.

    ஓ! மைண்ட்ல ஏத்திக்கிட்டேன்

    ReplyDelete
  12. நன்றி சிபி எப்படியோ பெரிய ஆள்னு ஒத்துக்கிட்டீங்களே! புத்தக விமர்சனம் எப்பவோ போட்டு இருக்கேன்

    ReplyDelete
  13. மாரியாயிDecember 6, 2011 at 11:52 PM

    Pdf பதிவிறக்கம் எங்கே கிடைக்கும்? நான் மலேசிய பிரஜை. இங்கே இந்த புத்தகம் கிடைக்கவில்லை. நன்றி!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!