01 October, 2025
#நேரம் தவறாமை
# நேரம் தவறாமை
ஒருவரிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்தால் எவ்வளவு பெரிய தவறோ அதை விடப் பெரிய தவறு பிறருடைய நேரத்தைக் கொள்ளை அடித்தல். ஆனால் முன்னதற்கு தண்டனை உண்டு. பின்னதற்கு இல்லை.
நாம் சாதாரணமாகவே பார்க்கிறோம். எந்த ஒரு கூட்டமும் சொன்ன நேரத்துக்கு தொடங்குவதில்லை. இன்னும் கொஞ்சம் ஆட்கள் வரட்டும்னு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து கூட தொடங்குவதுண்டு. நான் சொன்னது சாதாரணக் கூட்டங்கள். சிறப்புக் கூட்டங்கள் இன்னும் கூட நேரமாகலாம்.
அதிலும் சிறப்புப் பேச்சாளரை கடைசியாகத் தான் பேசச் சொல்வார்கள். அவர்களுக்காகத் தான் மக்கள் இருப்பார்களாம்.
புத்தக கண்காட்சிகளிலும் சில புத்தக வெளியீடுகளிலும் இதனாலேயே எனக்கு நல்ல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் போனதுண்டு. நான் நிகழ்ச்சி தொடங்குவதாகச் சொன்ன நேரத்துக்கு போயிருப்பேன். எனக்கு attoted time ஆன இரண்டு மணி நேரம் முடிந்திருக்கும். கிளம்பி விடுவேன். இதனால் உனக்குத் தானே பாதிப்பு என்றால் பரவாயில்லை அந்த பேச்சைக் கேட்க யூட்யூப் போல இப்போ எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
என்னிடம் ஒரு சிலர் கேட்பதுண்டு. உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களில் செயல்பட முடிகிறது என. அதற்கு முக்கிய காரணம் நேரப் பங்கீடு தான். இதற்கு பழகி விட்டால் நம் உடலே ஒரு கடிகாரமாகி இந்த காரியத்துக்கான நேரம் முடிந்து விட்டது என சொல்லி விடும். நான் ஒரு புத்தகம் அரை மணி நேரம் படிக்க வேண்டும் என்றோ, ஒரு திரைப்படம் OTT இல் அரை மணி நேரம் பார்க்க வேண்டும் என்றோ நினைத்திருப்பேன். போதுமே முடிச்சிடுவோமான்னு தோணும் போது கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருக்கும். இதற்கு Biological clock என்போம்.
எனவே இனி ஒரு முடிவெடுப்போம் . எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்தில் செல்வோம். அதை விட முக்கியம் நிகழ்வுகளை குறித்த நேரத்தில் தொடங்குவோம். ஒரு முறை ஒரே ஒரு முறை குறித்த நேரத்தில் தொடங்குங்கள் வந்தவர்கள் குறைவாக இருந்தாலும். அடுத்த கூட்டத்துக்கு அத்தனை பேரும் சரியான நேரத்தில் வந்து இருப்பார்கள். சரியான நேரத்தில் தொடங்கவில்லையா பங்கு கொள்ள வந்தவர்கள் கிளம்பி விடுங்கள். கொஞ்சம் வேணுமானால் க்ரேஸ் டைம் கொடுக்கலாம். அடுத்த கூட்டம் சரியான நேரத்தில் நடக்கும்.
நேரம் தவறாமைக்கு மிகச் சரியான உதாரணம் எங்க ஊரைச் சேர்ந்த "மேலும் " சிவசு ஐயா. இவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். "மேலும்" என்ற அமைப்பு மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறார். சரியான நேரத்தில் தொடங்கி விடுவார். எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பது தொடங்கும் நேரத்தை பாதிப்பதில்லை.
இதை அத்தனை பேரும் கடைப்பிடிக்கலாமே. ஒரு காலத்தில் "நேரமே போக மாட்டேங்கிது" ன்னு சொல்லக் கேட்டிருப்போம். இப்போ யாராவது சொல்றாங்களா? அப்போ நேரம் என்பது எவ்வளவு முக்கியமானது் அதை அநாவசியமாக செலவிடலாமா? செலவிட வைக்கலாமா?
சிந்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!