08 October, 2025
#விழித்தெழு இளைஞனே!!
இளைஞனே!!
விழித்தெழு!!
உன் வயதில்
விவேகானந்தர்
என்னவெல்லாம்
செய்திருந்தார்
எண்ணிப் பார்.
கண் சிமிட்டும்
விளக்கின் ஒளியில்
நீ ரசிக்கும் முகம்
நாயகனாக
இருக்கும் வரை சரி.
தலைவனாக
இருக்கும் போதுமா?
ஆணானாலும்
பெண்ணானாலும்
அழகுக்கு ஏன்
இப்படி
அடிமைப் பட்டு
கிடக்கிறாய்.
உன் குருதியில்
உருப்பெற்று
கண்கள் ஒளிர
சிரிக்கும்
உன் மழலைகளை
விட அழகு
உலகில் எவருக்குண்டு.
கண்ணுக்குத்
தொலைவிலிருக்கும்
அழகில் மயங்காதே!!
அருகில் போனால் தான்
அந்த நிலவின்
மேடு பள்ளங்கள்
புலப்படும்.
அறிவை மயக்கும்
காந்தத்திலிருந்து
எட்டியே நில்.
புத்தியோடு
பிழைத்துக் கொள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!