01 October, 2025
நம்ம முக நூல்ல அடிக்கடி நண்பர்கள் வரிசையில ( frd list) இருக்கிறாங்க ஆனா லைக்கோ கமென்ட்டோ போடுறதில்லை. அதனால " களை எடுக்கப் போறேன் " னு அடிக்கடி சிலர் எழுதுறதப் பார்த்திருக்கிறேன். இது கூட 4000 நண்பர்கள் சேர்ரது வரை நாம கவலைப்பட வேண்டுவதில்லை. ஏன்னா இன்னும் ஆயிரம் நண்பர்கள் சேர்க்கலாம். அதில் கவனமா வடிகட்டிட்டா போதும்.
ஆனா நாம் களை எடுக்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடம் இருக்குது. அது நம்ம மெயில் ஐடி. எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மெயில் ID ஏற்படுத்தும் போது 15 GB free கொடுத்திருந்தாங்க. அப்போ அது அடேங்கப்பா என்று தோன்றியது.
இப்போ அதில் அதிக இடம் நாம் நிரப்பி விட்டோம் , கிட்டத்தட்ட 15 GB முடியப் போகுது என்பதால் கூடுதலா பணம் கட்டி இடம் (space) வாங்கிக்கோங்கன்னு வருது. Drive இல் நாம் சேர்த்திருக்கும் விஷயம், மெயிலில் உள்ளவை எல்லாம் அடங்கும். மெயிலை ஒரு குறிப்பிட்ட காலத்தில் google ஏ டெலிட் செய்யும். இருந்தாலும் அதில் இணைப்புகள் இருந்தால் மெயில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். உள்ளே போய் பார்த்தா வேண்டாத குப்பை எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. வேலையில் இருந்தப்போ இடையிடையே மெயில் சுத்தம் செய்யும் பணி செய்வேன். இப்போ பத்து வருஷமா அதைச் செய்யல.
நீங்கள் பணம் கட்டி space பெற்றுக் கொள்ளா விட்டால் அந்த மெயில் ஐடி இனி வேலை செய்யாது என்று வந்த உடன் தான் ஆபத்து புரிந்தது. அத்தனை அலுவலகங்களிலும் கொடுத்து வைக்கப்பட்டுள்ள மெயில் ஐடி வேலை செய்யவில்லை என்றால் பேராபத்தாச்சே.
உடனே உட்கார்ந்து stock clearance மாதிரி mail clearance வேலை செய்தால் உடனே 3 GB free space கிடைத்து விட்டது. உடனடி ஆபத்து தவிர்க்கப்பட்டது. அதனால் களை எடுக்கும் வேலையை இங்கே தொடங்குங்கள். நமக்கு தேவைப்படாத பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதை அப்போ அப்போ டெலிட் செய்திடணும்.
சொல்லணும்னு தோணுச்சு. ஏற்கனவே தெரிஞ்சவங்க வேற பதிவுகளை பார்க்க போயிடலாம். தெரியாதவங்க பயற்படுத்திக் கோங்க. வரட்டா!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!