11 October, 2025
படம் பெயர் : Hrithayapoorvam
OTT : Hotstar.
இயக்குநர் : சத்யன் அந்திகாடு.
முக்கிய கதாபாத்திரங்கள் : மோகன் லால், சங்கீதா, மாளவிகா மோஹனன், சித்திக் , லாலு அலெக்ஸ், சங்கீத் ப்ரதாப்.
மோகன்லால் பெயர் சந்தீப் பாலகிருஷ்ணன். அவருடைய இதயம் பழுதடைந்ததால் , இறந்த ஒருவருடைய இதயம் சந்தீப்புக்கு பொருத்தப்படுகிறது. "சென்னையில் ஒரு நாள்" படத்தில் அந்த இதயம் குறைந்த நேரத்துக்குள் எப்படி அடுத்தவருக்கு வைக்கப் பட்டது என்பதை தமிழில் படமாக்கி இருந்ததைப் பார்த்திருக்கிறோம்.
தன் தந்தையை அன்பு செய்யும் மகள் அந்த இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தன் தந்தையை சந்தீப்பிடம் கண்டால் என்ன நடக்கும் என்பதை மலையாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். மனித மனத்தின் மெல்லிய உணர்வுகள் , தான் அன்பு செய்த ஒருவரின் இதயத்தை சுமந்து இருப்பதே அடுத்தவரையும் அன்பு செய்ய போதுமானது என்பதைக் காட்டும் காட்சிகள் படத்துக்கு இனிமை சேர்க்கின்றன.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் படத்தின் ஹீரோவாக இருக்கிற காரணத்தாலேயே எல்லோரையும் அடித்து துவம்சம் செய்வது, ரொம்ப இயல்பாக எடுக்கப்படும் மலையாளப் படங்களுக்கு முரணாகத் தெரிகிறது.
இறந்தவரின் மனைவியாக சங்கீதா நடித்திருக்கிறார். அட! நம்ம சங்கீதாங்க. நடிகர் விஜய்யின் ஆரம்ப காலப் படங்களில் ஜோடியாக நடித்தாரே அவரே தான்.
சந்தீப் ஒரு cloud kitchen நடத்துகிறார். Cloud kitchen என்னும் கான்செப்ட் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறது.
தான் மிகவும் நேசித்த தந்தையின் இதயத்தை தாங்கி நிற்கும் சந்தீப் தன் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறாள் மகள். அவளின் வற்புறுத்தலால் செல்லும் இடத்தில் அடிபட்டு அங்கே அதிக நாள் இருக்க நேர்கிறது. சந்தீப்பை முழு நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு ஆண் அட்டன்டட்டும் கூடவே இருக்கிறார். அவர் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் சந்தீப்புக்கு கோபத்தை வரவழைத்தாலும் போகப் போக நண்பர்களாகிறார்கள்.
மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் அலையாடுவது. நிச்சயதார்த்த நிகழ்வு கோலாகலமான ஆட்டம் பாட்டம்களுக்கு இடம் கொடுப்பது. எல்லாம் சேர்ந்து கதையின் கனத்தைக் கொஞ்சம் நிரவி இடுகிறது.
சுயநலம் நிறைந்த மனிதர்களுக்கு நடுவே , இரத்த தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன. இறந்தவர்களை எரித்து , ஒரு பிடி சாம்பலாய் கரைத்து விடாமல் தானம் கொடுத்து இன்னொரு உயிரை வாழ வைக்க உதவலாம் என்ற நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் இந்த படத்துக்கு வாழ்த்துச் சொல்லலாம் பார்ப்பதன் மூலமாக.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!