22 October, 2026
வாசித்த போது வந்த இந்த ஒரு வரி நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தியது.
"படத்தைப் போடுங்கைய்யா" என்று மொத்த கொட்டாயே கத்தியது."
இது தான் வந்த வரி.
டென்ட் கொட்டாய்ல மட்டுமல்ல தியேட்டர்லயுமே அந்த நாட்கள்ல நிறைய விளம்பரங்கள் வரும். அது போர் அடிச்சு போகும் போது இப்படிக் கத்துவாங்க.
எங்க ஊர் மக்கள் ரொம்ப குசும்புக் காரங்களா?
ஒரு நாள் தியேட்டர்ல ( எந்த படம்னு ஞாபகம் இல்ல. இருந்தாலுமே எதுக்கு வம்பு) படம் தொடங்கி அரைமணி நேரம் ஓடிடுச்சு. படு மொக்கை படம். போர் அடிச்சாலே தியேட்டரின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து சலசலப்பு உருவாகும். அங்கங்கே பெருமூச்சு பேரலையாய் எழும்.
அந்த நேரத்தில யாரோ ஒருவர் "படத்தைப் போடுங்கய்யா" என்று கத்தினார். படம் போட்டு அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சுது. அவர் அப்படி சொன்னதும் மொத்த தியேட்டரும் "கொல்" லெனச் சிரித்தது.
அதன் பிறகு மக்கள் எரிச்சலோட படம் பார்க்காம ஜாலியா சிரிச்சு கமென்ட் அடிச்சுகிட்டே பார்த்து முடிச்சாங்க.
ஜாலியான உங்கள் சினிமா அனுபவங்களையும் பகிருங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!