Bio Data !!

19 October, 2026

குளத்தில் கல் எறியாதீர்.

குளத்தில் கல் எறியாதீர். யூட்யூப் பணம் கொடுக்க ஆரம்பித்த பிறகு வெகு சில பெண்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக ரொம்பவும் தரம் தாழ்ந்து வீடியோ போடுறாங்க. என் உடல் என் சுதந்திரம் என்ற அளவில் பெண் குழந்தைகளும் எவ்வளவு கவர்ச்சிகரமாகத் தூண்டும் விதத்தில் ஆடை அணிய முடியுமோ அவ்வளவு கவர்சிகரமாக ஆடை அணிகிறார்கள். இதற்கும் குளத்தில் கல் எறிவதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? ஆண் மனது ஒரு குளம் போலத் தான். வெளிப் பார்வைக்கு அமைதியாகத் தெரியும். ஆனால் கலங்கி விட்டால் குடும்பம் குழந்தை எதை இழந்தாவது அதை அடையத் துடிப்பார்கள். தான் ஆசைப்பட்டது கிடைக்கும் வரை இரை தேடும் புலியின் கண்களை ஒத்துத் தான் அவன் நிலை இருக்கும். கொதி நிலையில் இருக்கும் தன் உடம்பு குளிர கிடைப்பவரை, அது குழந்தைகளாக இருந்தால் கூட பலியாக்கி விடுகிறார்கள். குளத்தில் கல் எறிபவருக்குத் தண்டனை கிடைப்பதில்லை அதனாலேயே தன் தவறு புரியாமல் இருக்கிறார்கள். இயற்கையிலேயே கொடூர குணம் கொண்டவர்கள் இருப்பார்கள் . நான் சொல்வது அவர்களை அல்ல. தூண்டப்பட்டு தவறிழைப்பவர்கள். அந்த பாவத்துக்கு நாம் ஆளாக வேண்டாமே!!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!