31 January, 2026
திருச்சியில் திருமணம் முடித்த கையோடு வேர்களைத் தேடிப் புறப்பட்டோம்.
என் கணவரோட சித்தப்பா இருப்பது காரைக்குடி அருகே பொய்யா வயல் என்னும் கிராமம். அவர் அப்பா கூடப் பிறந்தவர்களில் எஞ்சி இருப்பவர் இந்த சித்தப்பா மட்டுமே. அங்கே தான் என் மாமனாரோட கல்லறையும் அவங்க அம்மாவோட கல்லறையும் இருக்கின்றன.
அனைவரையும் சந்திக்க காரைக்குடி சென்றோம். மறு நாள் பொய்யா வயல் செல்வதாக ஏற்பாடு. காரைக்குடியில் எங்கே தங்கலாம் என விசாரிக்க தெரிந்தவர்களை அழைத்தேன். தெரியவில்லை என்றாலும் "காரைக்குடி" யைத் தன் பெயரில் இணைத்திருந்தவர்களையும் அழைத்துப் பார்த்தேன். ஒருவரும் போனை எடுக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக பேசி விட்டார்கள். அதற்குள் அறை முடிவாகி விட்டது.
அருகிலுள்ள கடையில் விசாரித்து "சத்குரு" என்னும் லாட்ஜ்க்கு சென்றோம். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 2300/- Double bed room. பக்கா ஏற்பாட்டுடன் வாசலில் தண்ணீர் தொட்டியில் தங்க மீன்கள் விரைவாக நீந்திக் கொண்டு இருக்க, செம வைப்பாக இருந்தது.
அவர்களே cab book பண்ணுவதற்கான செல் எண்ணையும் கொடுத்து விட , நாங்க பேசி பத்து மணிக்கு வரச் சொன்னோம். மறு நாள் காலை சரியா 9.45 க்கு வந்து தான் வந்து விட்டதைத் தெரிவித்தார் ஓட்டுநர். அப்போதே ஒரு சிறப்பான ஓட்டுநரோடு தான் பயணிக்கப் போகிறோம் என்பது நிச்சயமாகி விட்டது.
அடுத்து காரைக்குடி பற்றி பதிவுகள் வருகின்றன. அதையும் தவறாமல் பார்த்திடுங்க.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!