16 March, 2026
மான் குட்டிகளும் பருந்துகளும்.
மான்குட்டிகளும் பருந்துகளும்
தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபா.
உலகின் பல பகுதிகளிலிருந்து 21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து உருவான புத்தகம்.
நான் அதிலுள்ள ஒரு சில கதைகளைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகள் தருகிறேன்.
வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கு கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
சுவாசம் பதிப்பகம்
ஹரன் பிரசன்னா.
அலைபேசி எண் 8148066645
கோவையைச் சேர்ந்த அகிலாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் "காயம்" என்ற அவர்களின் சிறுகதையை முதலில் எடுத்து வாசித்தேன். ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள்.
அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம்.
ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம்.
"கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை.
திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார்.
சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு்
புத்தகத்தை வாங்கி வாசித்து இன்புறுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!