28 March, 2026
கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
அதிகம் கேள்விப்பட்டு நான் இது வரை வாசிக்காமலிருந்த நாவல் மூத்த தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கரிப்பு மணிகள்" தற்போது ஊரக நூலகத்தில் கிடைத்து வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
முதல் அதிகாரத்தில் நான் பார்த்த சிறப்பு அம்சம் வட்டார மொழியில் கதை எழுதுபவர்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றியதால் உடனே குறிக்கிறேன். வட்டார மொழி வார்த்தைகளின் அர்த்தம் புரியாமலே வாசிப்பது ஒரு குறையாகவே என் மனதில் இருந்தது.
அவர்கள் கதையில் அதிகம் புழங்கப்படாததாக வரும் வட்டார மொழிச் சொல் வரும் இடத்தில் பக்கத்திலேயே அதன் அர்த்தத்தை அடைப்புக் குறிக்குள் போட்டு இருக்கிறார்கள். அது அர்த்தம் புரிவதாக மட்டுமல்லாமல் அது பயன்படுத்தப்படும் வேறு இடங்களிலும் நாம் புரிந்து கொள்ள உதவுகிறது.
மொத்தமாக இறுதியில் வட்டார மொழிச் சொற்களும் அதன் அர்த்தங்களும் இருப்பதை விட இது நல்லா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது. வாசிப்பாளர்கள் தங்கள் கருத்தை பகிரவும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!