14 November, 2026
அக்டோபர் 2026 மத்யமரின் "மாதத்து முத்து" நான்
அட! அட! தூள் மாமே!! என என்னை நானே பாராட்டிக் கொண்ட தருணமிது.
மத்யமர் குழுவில் POTW , JUMI இவை மட்டுமே வாங்கி பழக்கப்பட்டு இருக்கிறேன். மற்றவற்றிற்கு ஆசைப்பட்டதுமில்லை. கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டதுமில்லை.
இன்று இந்த அழகான "மாதத்து முத்துகள் " என்ற சான்று அக்டோபர் மாதத்துக்கானது எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு வரும் 10000+ பதிவுகளில் ஐந்துள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது மிகச் சிறப்பு. இந்தக் குழுவின் ஆகச் சிறந்த விஷயமே திறமையுள்ளவர்களை நன்கு ஊக்குவித்து மேலும் மேலும் பட்டை தீட்டுவது.
நான் நெடுங்காலமாக இந்தக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். முதன் முதலில் zoom meeting பற்றி சொல்லிக் கொடுத்தவர்கள் இவர்கள் தான். 67000+ உறுப்பினர்களைக் கொண்ட குழு.
அரசியல் ரீதியா அடி பிடி சண்டை வருதுன்னு "மத்யமர் அரசியல் " எனத் தனித் தளம் அமைத்து அங்கே குத்திக்கோ உருண்டுக்கோ ன்னு வழி விட்டு இருக்கிறார். முக்கியமாக முதியவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு தளம்.
தேர்ந்தெடுத்த அனைவருக்கும் குழுத் தலைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!