14 November, 2026
நூலக புத்தக ஊழல்
இது வரை பல வகையான ஊழல்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.
அவற்றில் முக்கியமானது கட்டிடப் பகுதி. ( construction area) பஞ்சாயத்து தொடங்கி பெரு நகரங்கள் வரை போடப்படும் சாலைகளை மக்களாகிய நாம் எவ்வளவு விமர்சித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதைத் தாண்டி எதையும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை.
ஆனால் இப்போது தொட்டிருப்பது தேன்கூடு. எழுத்துக்காகவே வாழும் எத்தனையோ பேர் கடும் முயற்சி எடுத்து எழுதுவது, அதை வாசிக்கும் வாசகர்களாகிய நாங்கள் பல செலவுகளைச் சுருக்கியாவது அந்த புத்தகங்களை வாங்குவது அதையெல்லாம் தாண்டி நாம் கட்டும் வீட்டுத் தீர்வையில் ஒரு பகுதி நூலகங்களுக்காக செலவழிக்கப்படுவது என மக்கள் பணம் , உழைப்பு ஆகியவற்றையும் பாதிப்பது இந்த ஊழல்.
ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதோடு முடிந்து விடாமல் தவறு செய்தவர் யாராய், ஆம் யாராய் இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். அது வரை முன்னெடுத்தவர்கள் எல்லோரும் பின் வாங்காது மாற்று விஷயங்களுக்குப் போய் விடாது தொடர்ந்து கவனிக்க வேண்டும். பார்ப்போம். என்ன தான் நடக்கப் போகிறது என.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!