Bio Data !!

14 November, 2026

குறுஞ்செய்தி குழப்படி

சிலர் நெருக்கமாக தெரியாத பெண்களுக்கும் குறுஞ்செய்தி, (அது "நீங்க அழகா இருக்கிறீங்க" என்ற "சாதாரண" செய்தியாகக் கூட இருக்கலாம். ) அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து அடி எடுத்து வைப்பதற்கான முன்னோட்டமது. அப்படி அடுத்த அடி வைக்காத பட்சத்தில் அது சாதாரண செய்தி தான். வாட்ஸ் அப், மெசென்ஜர், இன்ஸ்டா அல்லது வெறும் SMS ஆகக் கூட இருக்கும். அது தவறு. அந்த உரிமை அவர்களுக்கில்லை என்பதை உணர்த்த வேண்டும். ஏனென்றால் ஒரு பாமரப் பெண் இதைச் செய்தியாக்கினால் "நீயெல்லாம் இருக்கிறதுக்கு உன்னை அழகா இருக்கேன்னு சொன்னதே தப்பு" என்று எள்ளி நகையாடி நகர்வார்கள். ஒரு மாவட்ட உயர் அதிகாரிக்கும் நடக்கும் போது அதை தவறு என்று அழுத்திச் சொல்ல வேண்டிய தருணம் இது. செய்வா்கள் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!