Bio Data !!

16 August, 2026

என் சிறு வயசுல தினம் காலையில இட்லி, தண்ணியா தேங்காய் சட்னி தான். தேங்காய் கூட ஓடிப் போய் பக்கத்துல உள்ள ரெட்டியார் கடையில சில்லு வாங்கி வந்து தான் சமையல் நடக்கும். நம்ம யோகம் போற நேரம் புதுத் தேங்காய் உடைக்கணும்னா உடைச்சு அப்படியே தண்ணியை நம்ம வாயில விடுவார். சின்ன பிள்ளைக்கு வாய் சின்னதா தானே இருக்கும். அது வாய்க்கு அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ஓடி சட்டையை எல்லாம் நனைக்கும். வித்தியாசமான பலகாரம்னா ஞாயிற்றுக் கிழமை தான். அப்போ எங்க வீட்டுல வேலை செய்து கொண்டிருந்தவள் வள்ளியம்மா தாட்டியமான ஆளு. வகை வகையா செஞ்சு கொடுப்பாங்க. அப்போ கூட பண்டிகை நாட்கள்ல மட்டும் பலகாரமா இட்லி சாப்பிட்ட குடும்பங்கள் பல இருந்தன. அதுக்கும் கீழா வெங்காயத்தையோ பச்ச மிளகாயையோ கடிச்சுகிட்டு கஞ்சி குடிச்சுகிட்டு பள்ளி வந்ம பிள்ளைகளும் இருந்தாங்க. ஆனால் இப்போ புரோட்டீன் எவ்வளவு இருக்கணும். கொழுப்பு சத்து எவ்வளவு இருக்கணு்னு பார்த்து பார்த்து சாப்பாடு கொடுக்கிறாங்க. அதிலயும் good cholesterol Bad cholesterol Good colostral ல Soluble cholesterol Insoluble cholesterol அடேங்கப்பா இப்படி பார்த்து பார்த்து கொடுக்கும் போது நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளா இருக்கணும்ல அது தான் இல்ல. "ச்" என்றால் சளி. "ம்" என்றால் காய்ச்சல். நாம ரொம்ப நொர்நாட்டியமா பார்க்கிறோமா இல்ல இப்படித்தான் இப்போ இருக்கணுமா? ஒண்ணுமே புரியல உலகத்துல . என்னவோ நடக்குது மர்ம்மா இருக்குது. ஒண்ணுமே புரியல உலகத்துல.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!