Bio Data !!

04 August, 2026

# தாயின் வலி

என் தாயின் வலி தெரிந்து வளர்ந்ததால் என்னை நம்பி வந்தவர்களை கண்ணின் மணி போல் பார்த்தேன். நான் பெற்ற மக்களை உயிரினும் மேலாய் வளர்த்தேன். எனக்கென ஒரு தேவை இல்லையென்றே இருந்தேன். எதெல்லாம் நான் இயல்பென்று நினைத்தேனோ அதெல்லாம் அற்புதமென்றார்கள். நிர்மூலமாய் ஆக்கிய போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்த என்னை அதிசயமாய் வியந்தார்கள் என் அன்பு ஒன்றே என்னைக் காப்பதை அறியாமல். அன்பே செய்க அதை இன்றே செய்க. அதையும் நன்றே செய்க

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!