Bio Data !!

18 August, 2026

#இடி தாங்கி

ஒரு பதிவு பார்த்தேன் அவர்கள் இருந்த அடுக்ககத்தின் மொட்டை மாடியில் இடி விழுந்து நெருப்பு பிடித்ததாகவும். ஒவ்வொரு வீடாக வந்து அவர்களை வெளியேற்றியதாகவும் சொன்னார்கள். எனக்கு நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து ஒரு எண்ணம் கீறிக் கிளம்பியது. எங்க வீடு சர்ச்சுக்கு அருகில் தான். இப்போ இருக்குற அளவுக்கு பெரிய சர்ச் கிடையாது ஆனாலாம் கோபுரம் உயரமாக இருக்கும். அதன் உச்சியில் திரிசூலத்தின் அமைப்பில் ஒரு இரும்புத் தண்டு வைக்கப் பட்டிருக்கும். அதன் பெயர் இடிதாங்கி. எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தா அந்த இடி தாங்கி நல்லாத் தெரியும். அப்போ எங்க அப்பா சொல்வாங்க. இடி ஒஇழுந்தா சுற்று வட்டாரத்துல ரொம்பத் தூரத்துக்கு பாதிப்பு இருக்கும். அதனால தான் உயரமான இடத்துல அந்த இடிதாங்கிய வைப்பாங்க. இடி விழுந்தா அந்த இரும்புக் கம்பி இடியின் சக்தியை இழுத்து மண்ணுக்குள் அனுப்பி விடும். பக்கத்தில உள்ள வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இராது. Shock obsorber னு இப்போ புரியுது. அப்போ நாம பாதுகாப்பா இருக்கிறோம்னு மட்டும் தான் தோணுச்சுது. இப்போ பெருநகரங்களில் உயர உயரமா கட்டிடங்களைக் கட்டுறாங்களே அங்கே எல்லாம் இந்த இடி தாங்கிகள் வைக்கிறாங்களா? எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே? இடி தாங்கிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கீங்களா இப்போ அவை இருக்கின்றனவா? கமென்ட்டுல சொல்லுங்களேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!