Bio Data !!

24 September, 2026

நூலின் பெயர் : நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம். ஆசிரியர் : நரசய்யா வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2023 கடலோடி நரசய்யா இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமையக் கூடிய எல்லாத் தகுதியும் உடையவர். டாக்டர் க.சுபாஷினி இந்த நூல் கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் வீடுகளில் அனைவரும் முடங் கிக் கிடந்த கால கட்டத்தில் ஸூம் இணையத் தொடர்பு வழியாகத் திரு நரசய்யா ஐந்து நாட்களாக வழங்கிய உரைகளின் எழுத்து வடிவம் என்கிறார். வரலாற்று ஆய்வறிஞர்களின் உரைகளிலிருந்து இவருடையது மாறுபட்டு ஆழமாக உணரக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் அவரது கடல் வழிப் பயணத்தின் வழியாகப் பெற்ற உலகளாவிய அனுபவங்கள் தான். கடலோடி நரசய்யாவுடனான சுபாஷினி அவர்களின் உரையாடல்கள் மூன்று முக்கிய விஷயங்களை மையப்படுத்தியதாக இருக்கும். பயணங்கள், நகரங்களின் வரலாறு , இருவரும் வாசித்து திறனாய்வு செய்த நூல்கள். திரு நரசய்யா பள்ளிக் காலங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் ஒருவர். இயல்பியல் பாடப் பிரிவில் திருச்சி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார். ஒருநாள் வகுப்பில் பட்டாளத்தில் சேர்வதற்கான சுற்றறிக்கையை வாசித்தனர். அந்தக் காலத்தில் ஏழை மாணவர்களே அதிகம் பட்டாளத்தில் சேருவார்கள். நரசய்யா தான் ஆயுதம் ஏந்திய படையில் கண்டிப்பாக சேர்ந்து காட்டுவேன் என்றார். பின்னாளில் அதையே ஒரு கதையாக எழுதி விகடனில் வெளி வந்தது. இவரது பதினாறாவது வயதில் கடற் படை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுப்பதில் நமது நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாகச் சொல்கிறார். இந்திய அதிகாரிகள் ஒருவருக்கு எவ்வளவு தெரியவில்லை எனப் பார்க்கிறார்கள். ஆனால் வெளிநாட்டினரோ வெட்டப்படாத வைரத்தை எடுத்து பட்டை தீட்டுகிறார்கள் என்கிறார். இவர் விகடனுக்கு அனுப்பிய முதல் சிறுகதை "தேய்பிறை" இந்த பெயரின் ராசி கதை தேர்ந்தெடுக்கப் படாது என நண்பர் சொல்ல அது முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. முதல் கதையே முத்திரைக் கதையானது முதன் முதலில் திரு ஜெயகாந்தனுடையது. இரண்டாவது திரு நரசய்யா உடையது தான். மூன்றாவதாக திரு இந்திரா பார்த்தசாரதி உடையதாம்். திரு நரசய்யா அவர்கள் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிலேயே செப்டம்பரில் இவருடையதும் அக்டோபரில் திரு இந்திரா பார்த்தசாரதி உடையதும் வெளியாகி இருக்கிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார் திரு நரசய்யா அவர்கள். இவரது மகனும் கப்பலில் பணி புரிந்திருக்கிறார். "சென்னை செல்வம்" என்ற அந்தக் கப்பல் தான் ஆசிரியர பணி புரிந்த கடைசி கப்பலும், இவர் மகன் பணி புரிந்த முதல் கப்பலுமாகும். இத்தகைய பல அறிய தகவல்களையும் வாழும் வாழ்க்கை முறைகளையும் இந்த புத்தகம் நமக்கு அறிமுகம் செய்வது சிறப்பு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!