Bio Data !!

21 September, 2026

Nellai reads experience

பெங்களூரில் இருந்த போது ஒரு தோழி போனில் சொன்னார்கள். Nellai reads னு ஒண்ணு தொடங்குறாங்க. வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இணைகிறாங்க. எனக்கு உங்க நினைவு வந்தது. சேர்ந்துக்கிறீங்களான்னு கேட்டாங்க. விவரம் கேட்டப்போ. ஞாயிறு அதிகாலை ஆறரை மணிக்கு சரோஜினி பார்க்கில் சந்திக்கிறாங்க என்றார்கள். அப்போ வீட்டிலிருந்து ஆறுக்கு கிளம்பணும். சாத்தியப்படாதேன்னு விட்டுட்டேன். அது நேற்று நிறைவேறியது. பொருநை அரங்கத்தில் காலை பத்து மணிக்கு கூடுவதாகத் தெரிந்ததும் போனேன். சதக் அப்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் குரேஷி கான் முன்னெடுத்துச் செய்கிறார். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இத்தனை பேரா? அதுவும் இளைஞர்கள்......வாழ்வில் நம்பிக்கை ஏறுகிறது. நாம் அறியாமல் அங்கங்கே அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பத்து மணிக்கு தொடங்கினோம். ஒன்றரை மணி நேரம் பொருநை அரங்கத்தில் வசதியான இடங்களில் அமர்ந்து அவரவர் கொண்டு வந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினோம். அது கொஞ்ச நேரத்திலேயே நூலகமாகிப் போனது. கட்டுப்படுத்துவார் யாருமில்லாமலே அமைதியாக வாசிக்கத் தொடங்கினார்கள். எனக்குப் பெரிய ஆச்சர்யம். அந்ம இளங்காற்று சூழ்ந்த சூழலில் கண்கள் கிறங்காமல் ஒன்றரை மணி நேரம் வாசித்து முடித்தேன். அதன் பின் அவரவர் வாசித்த புத்தகங்களைப் பற்றி சுருக்கமாகப் பேசி முடித்தார்கள். இளைஞர்கள் அதிகம் ஆங்கில நாவல் வாசித்திருந்தார்கள். நானே நாற்பது வயது வரை ஆங்கிலம் மட்டுமே வாசித்து அதன் பின் தமிழின் இனிமையை அறிந்தவள் தானே. ஒரு பெண் archiyalogy படிப்பதாகச் சொன்னாள். பணம் கொழிக்க சம்பாதிக்கப் படிப்பைத் தேடும் இந்த காலத்தில் , ஒரு பெண் தொல் பொருட்களைத் தேடி ஓடுகிறாள். ஆச்சர்யம். ஒரு மருத்துவரும் கலந்து கொண்டார். அவரும் இள வயதுக்காரரே. வாசிப்பிற்கான புதிய வகை சாதனத்தை அறிமுகப்படுத்தினார். ரூபாய் 6000 ஏ மதிப்பு கொண்ட ETK Link ( சரி தானா?) வைத்திருப்பதால் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களெல்லாம் வாசிப்பேன் என்றார். ஒரு எட்டு வயதுப் பையன் சுதா மூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினான். இவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது மிகச்சிறப்பு. என் ஆதர்ஸ எழுத்தாளர் பெருமாள் முருகனின் "கூள மாதாரி" பற்றி ஒருவர் பேசினார். இறுதியில் அனைவரும் வாசித்த புத்தகங்களை புல்லிலமர்த்தி சுற்றி நின்று புகைப்படமெடுத்து ஆவணப்படுத்திக் கொண்டோம். மிகச் சிறந்த முன்னெடுப்பு வாழ்த்துகள் குரேஷி கான். வாழ்க வளர்க!!!!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!