Bio Data !!

25 November, 2026

ஆண்கள் தினப் பதிவு

ஆண்கள் தினத்தன்று நான் எழுதிய பதிவு. என் இனிய தோழர்களுக்கு ஆண்கள் தின நல் வாழ்த்துகள். நான் ரசிக்கும் ஆண்கள் எப்படி இருக்கிறார்கள் சொல்கிறேன். மனைவி தன்னை விட புத்திசாலியாக உயர்ந்த பதவியில் இருப்பவளாக இருந்தாலும் எந்த வித ஈகோவும் துளியும் இல்லாமல் அவளை நேசிக்கும் ஆண். தான் எத்தனை உயரத்துக்குச் சென்றாலும், எத்தனை அழகுப் பெண்கள் தன்னைச் சுற்றி இருந்தாலும் குடும்பம் என்னும் அகல் விளக்கு அணையாமல் காக்க மற்ற எல்லா ஆசைகளையும் புறம் தள்ளும் ஆண். தான் நேசிக்கும் பெண்ணை ஒரு பிரச்னை என்று வரும் போது குற்றவாளியாக்கித் தான் உத்தமன் போல் ஒதுங்காத ஆண். தன்னை விரும்பி அழகு படுத்திக் கொள்ளும் பெண்ணை சந்தேகிக்காத ஆண். இப்படி எத்தனையோ இருந்தாலும் இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை கற்பனையில் மிதக்காதே என அலட்சியப்படுத்தாத ஆண்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!