Bio Data !!

24 November, 2026

அன்பில் அவன் Sony Liv

Sony Liv ல "அன்பில் அவன் " னு ஒரு படம் பார்த்தேன். இயக்குநர் : R கார்த்திகேயன். முக்கிய கதாபாத்திரங்கள் : ரேவதி, அசோக் செல்வன் , ப்ரீத்தி முகுந்தன். படத்தில் இவர் பெயர் இயல். அழகா இருக்குதுல்ல. என்னைப் பொருத்த வரை ஒரு புத்தகத்தை வாசித்தாலோ திரைப்படம் பார்த்தாலோ , ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாலோ , ஒரு நண்பரோடு பேசினாலோ ஏன் பிக் பாஸ் பார்த்தால் கூட அதிலிருந்து ஒரு பாடம் படிக்கணும்னு நினைப்பேன். இந்தப் படத்தைப் பார்த்ததும் தோணியது. பெண்கள் ஆசைப்படுவதெல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிறதோ பெண்கள் ஆசைப்படுவதை "எல்லாம் " நடத்திக் கொடுக்கணும்னு ஆண்கள் நினைக்கிறதோ மஹா தப்பு. திரு. ஆவுடையப்பன் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் ஐந்து லட்சத்துக்கு ஒரு புத்தர் சிலை வாங்கி வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னார். அது அவர்கள் குடும்ப கௌரவத்தை உயர்த்தவாம். அவர் கணவனின் மாசச் சம்பளம் இரண்டு லட்சம். மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் ஏழைகள். வரவுக்குள் செலவை முடிக்கத் தெரியாதவர்கள் ஏழைகள் தானே. இந்தப் படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் மறக்க முடியாத தவறு செய்தால் மன்னித்திடணும். மன்னிக்க முடியாத தவறு செய்தால் மறந்துடணும். எவ்வளவு அருமையான அறிவுரை. பெண் எளிய உடல் வாகு உடையவளாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவள் ஒரு குழந்தையைத் தாங்கிப் பெற்றெடுக்க ஒரு flexible ஆன உடல் வாகு தேவை என்பதால் தான். ஆண் வலிமை மிகுந்தவனாக இருக்கக் காரணம் தன்னைச் சேர்ந்த அத்தனை பேரையும் காக்க வேண்டும் என்பதற்காக. இது தான் கடவுளோ பிரபஞ்சமோ என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள் . அதன் குறிக்கோளாய் இருக்கும். ஆனால் ஆண் தன் உடல் வலிமையை தன்னைச் சேர்ந்த பெண்களிடம் காட்டுவது என்ன வகையில் நியாயம். படம் என்ன சொல்லுதுன்னு நீங்கள் முணுமுணுப்பது கேட்குது. ஒரு பணக்கார வீட்டுப் பெண் தன் குடும்பம் வசதிகளை விட்டு காதலனுடன் தனித்து வாழ்கிறாள். ஓடி ஓடி உழைத்து அவர்களுக்கென நேரம் இல்லாததால் மாற்று வழி தேடுகிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள். கடைசி இருபது நிமிடம் இன்றைய கட்டாயமான ரத்த களரியான காட்சிகள். ஆனாலும் படம் ரசிக்கும் விதமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னன்னு தெரியல எல்லா படங்களிலும் வில்லன்கள் நடிப்பில் தூள் கிளப்புகிறார்கள். இளம் தம்பதிகள் பார்த்தால் தம் வாழ்க்கையை திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!