Bio Data !!

26 September, 2026

#நிகழ்ச்சியை கலவரமில்லாமல் நடத்துவதெப்படி

ஒரு நிகழ்வு வெற்றி பெறுவது என்பது வெறும் ஏற்பாடுகளால் மட்டும் வருவது அன்று. அதற்கு அழைப்பவர்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. உதாரணமாக புத்தகக் கண்காட்சியில் பேச வருபவர் வாசிப்பில் ஆர்வமுள்ளவராய் இருத்தல் அவசியம். ஒரு திருமணத்தில் ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்துப் பார்த்துச் செய்து பின் வந்த இடத்தில் ஏதாவது ரகளை செய்து அத்தனை பேர் கவனத்தையும் தன் பால் திருப்பி மொத்த ஏற்பாட்டின் சிறப்பையும் சிதறடிக்கும் வழக்கத்தைக் கொண்ட ஒருவரையும் அழைத்து விட்டால் நம்முடைய மொத்த முயற்சியும் பாழ். நாம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தன் agenda வை நிறைவேற்றிக் கொள்பவர்களையும் அழைக்கக் கூடாது. நான் கலந்து கொண்ட ஒரு சிறு கூட்டத்தில் முன்னேற்பாடாக அமைப்பாளர் சொன்னது "யார் வேண்டுமானாலும் சில நிமிடங்கள் பேசலாம். ஆனால் அரசியல் பற்றி பேசக் கூடாது. தன்னை முன்னிலைப்படுத்தி தன் செயல்கள் பற்றி பெருமையாகப் பேசக் கூடாது. தனிப்பட்ட மனிதரையோ ஒரு குழுவையோ தாக்கித் தவறான வார்த்தைகளில் பேசக்கூடாது . " இப்படி ஒரு முன்னுரை கொடுத்து விட்டுப் பேச அனுமதித்தால் அதை மீறிப் பேசுபவர்களை அங்கேயே நிறுத்த முடியும். நிகழ்வும் வெற்றி பெறும். ஒரு நிகழ்ச்சிக்குப் பேசத் தேர்ந்தெடுக்கும் போது திறமையானவர்கள் பிரபலமானவர்கள் என்பதைக் கருத்தில் கொள்வதோடு , அதன் கருப் பொருளுக்கு சம்பந்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேச வருபவர்களும் அதற்கு உடன்பாடு இல்லாதவர்களாக இருந்தால் பேசத் தான் வரவில்லை என்பதை நாசுக்காகச் சொல்லி மறுத்து விடலாம். மேடையில் வந்து நிகழ்ச்சிக்கு இழிவாய் உரை கொடுப்பதும் சரியல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு வந்து அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மீதி எல்லா விஷயங்களையும் பேசிச் செல்வது உச்ச பச்ச அவமரியாதை. ஒரு நிகழ்வை வெற்றிகரமாக எடுத்து நடத்துவது என்பது சுலபமான விஷயமல்ல. நடந்து முடிந்த பின்னும் திசை திரும்பி விட வாய்ப்புண்டு. வரும் விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் சார்ந்தவைகளை துச்சமென ஒதுக்கி ஆக்கபூர்வமானவைகளை கவனத்தில் கொண்டு முன்னேற வேண்டும். துணிந்து நிகழ்வுகளை முன்னின்று எடுத்து நடத்தும் பெண்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!