எந்த ராசா ஆரம்பித்து வைத்தாரோ லட்சம் கோடிகளை? அதை தொடர்ந்து பல லட்சம்
கோடிகள். தற்போதைய லேட்டஸ்ட் லட்சம் கோடி திருவனந்தபுரத்தில் இருக்கும்
பத்மனாபசாமி கோயிலில் இருக்கும், ஐந்து லட்சம் கோடிகளுக்கும் மேலான அரச
நகைகள், வைரம், வைடூரியக் கற்கள். கூகிள் எர்த் இல் கடந்த ஒரு வாரமாக
அதிகமாக பார்க்கப்பட்ட இடம் இது தானாம். தகவல் அறியும் சட்டம் என்பது ஒரு
பாமரனுக்கு கிடைத்துள்ள புதையல். அதன் கீழ் தான் முதலில் இந்த பணி
தொடங்கியது. ஆரம்பிக்கும் போது யாருமே இந்த அளவுக்கு விஷயம் தீவிரமானதாக
இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை
கோவிலில் மொத்தம் ஆறு அறைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் திறக்கப்படாமல்
இருந்திருக்கின்றன. ஒவ்வொரு அறையாக திறக்கத் திறக்க நகைக் குவியல்கள்.
ஐந்து அறைகளை திறந்து விட்டார்கள். இன்னும் ஒன்று பாக்கி. அதை திறந்தால்
நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம். ஆனால் அதுவும்
திறக்கப்பட்டு விடும். அந்த அறையின் கதவில் பாம்பு படம்
வரைந்திருப்பதாகவும், அங்குள்ள நகைகளை அந்த பாம்பு காவல் காக்கலாம் என்றும்
ஒரு செய்தி பரவி வருகிறது.
இன்னும் மூன்று அறைகள் குளத்தினுள் இருக்கும் கிணறுகளாய் இருக்கலாம் என்று அரச குடும்பத்தின் வாரிசுகள் தகவல் தந்திருக்கிறார்கள்.
அரசருக்கு இத்தனை நகைகள் எங்கிருந்து கிடைக்கும்?
நாட்டு மக்கள் வரிப்பணமாக செலுத்தியதாக இருக்கும்.
ஆனந்த சயனத்தில் இருக்கும் அனந்த பத்மனாபருக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் நாய் உருட்டும் தெங்கம்பழமாக யாருக்கும் உதவாமல் இருப்பது சரியல்ல என்று காசர்கோடில் இருந்து ஒரு இயக்கம் இந்த செல்வங்கள் ஏழை மக்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் திருப்பதி சாமியை விட பணக்கார சாமியாகி விட்டார் பத்மநாபர். வயிற்றுக்கே எதுவும் இல்லை என்றாலும் கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் நம் மக்களின் பாவப்பட்ட மனதின் மற்றுமொரு தரிசனம் இது

சாயிபாபா இறந்த பின் அங்கே இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள், ஸ்விஸ்
வங்கியில் இருப்பதாக சொல்லப்படும் பணம், தற்போது திருவனந்தபுரத்தில் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கும் புதையல் இவ்வளவுக்குப் பின்னும் நிலவலாமா நம்
நாட்டில் வறுமை? இன்னும் ஹோட்டல் வாசல்களில் ஒட்டிய வயிறுடன், கையில்
குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டின்
வறுமையை போக்க, வேலைக்குப் போய், கிடைத்த ஒரு விடுமுறை நாளில் வாதாம்
பருப்புக்காக உயிரை விடும் பாலகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வயதின் காரணமாக தோன்றும் நோய்களோடு மட்டுமல்லாமல் வறுமையோடும் போராடும் வயோதிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்று மாறும் இந்த நிலைமை?
வயதின் காரணமாக தோன்றும் நோய்களோடு மட்டுமல்லாமல் வறுமையோடும் போராடும் வயோதிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்று மாறும் இந்த நிலைமை?
ஆழ்ந்து சிந்தித்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. ஏழை நாடாக இருக்கலாம்,
பணக்கார நாடாக இருக்கலாம். இப்படி ஏழைக்கும் பணத்தில் மிதப்பவருக்கும்
இடையில் இப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா? சிந்தியுங்கள் தோழர்களே?