Bio Data !!

27 December, 2024

முத்தச்சன் பாகம் 1

முத்துவுக்கு காலை யிலிருந்தே மனது நிலை க ொள்ளாமல் தவித்துக் க ொண்டிருந்தது. அந்த சாவுச் செ ய்தியை கே ட்காமலே இருந்திருக்கலாம். கே ட்டாகி விட்டது. ப ோய் அவன் முகத்தில் கடை சி முழி முழித்திருக்கலாம். அதுவும் க ொர ோனா சாவு என்பதால் முடியாமல் ப ோய் விட்டது. மெ ல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் துக்கம் நெ ஞ்சுக் குழியை அடை த்துக் கிடக்கிறது. ராபர்ட் அரசுப் பள்ளியில் முத்துவ ோடு படித்தவர். பள்ளி கல்லூரி என இருவரும் ஒன்றாகவே பயணம் செ ய்தார்கள். இருவருமே ல ோயர் மிடில் கிளாஸ் வகுப்பை சே ர்ந்தவர்கள் ஆதலால் ஈக ோ இல்லாமல் பழக முடிந்தது. ராபர்ட்க்கு ஸ்ப ோர்ட்ஸ் பாடி. வாட்ட சாட்டம். வகுப்பில் மாணவர்களை உயர வரிசை யில் நிறுத்தினால் முத்து முதல் மாணவன் ராபர்ட் கடை சி மாணவன். ஆனால் எப்படிய ோ இருவருக்கும் நெ ருக்கமான நட்பு. ராபர்ட்டுக்கு உடல் வலு இருந்தாலும் மனம் பலவனீ மாயிருந்தது. அதுவே அவருக்கு க ொர ோனா வந்து விட்டது என்று தெ ரிந்ததும் சாவின் விளிம்பில் க ொண்டு ப ோய் நிறுத்தி விட்டிருக்கலாம். ஆனால் இரும்பு மனம் படை த்த முத்துவ ோ காலை யிலிருந்து ஆடிப் ப ோய் தான் இருக்கிறார். இருவருக்கும் வயது எழுபதை நெ ருங்கி விட்டிருந்தது. அல்ப ஆயுசில் ப ோகவில்லை . ஆனாலும் மனம் ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது. அடுத்து தன் மரணம் தான ோ? தான் தயாராகிக் க ொள்ள வே ண்டும ோ? மனை வி என்ற ோ அவரை நிர்கதியாக்கிப் ப ோயிருந்தாள். நடு வயதில் மனை வியை இழந்த அவரை மறுமணம் செ ய்யச் ச ொல்லி பலரும் வற்புறுத்தினாலும் தன் ஒரே மகனை நல்லபடியாக வளர்க்க தான் தனியாய் இருப்பதே சிறந்தது என்று முடிவெ டுத்து இருந்தார். அந்த மகனும் அப்பாவின் சம்மதம் இன்றியே ஒரு மலை யாளப் பெ ண்ணை திருமணம் செ ய்து பாம்பே ப ோய் பத்த ொன்பது ஆண்டுகளாகிறது. அதன் பின் தனி மனித வாழ்க்கை தான். காலை யிலே யே தனக்கு தயாரிக்கும் ப ோதே ராபர்ட்டுக்கும் சே ர்த்து ஒரு காஃபி கலந்து விடுவார். ராபர்ட் வரும் வழியில் என்ன கிடை க்கிறத ோ அதை வாங்கி வருவார். ரெ ண்டு பே ரும் காஃபி குடித்தபடியே நாட்டு நிலவரம் நகர நிலவரங்களை அலசுவார்கள். அவர் கிளம்பிய பின் அன்று தான் சாப்பிடுவதற்கு தே வை யானதை தயார் செ ய்து விடுவார். பின் பகல் முழுவதும் தனக்கு பிடித்த காரியங்களை செ ய்வதால் அவருக்கு அந்த ஒற்றை வாழ்க்கை சலிக்கவே இல்லை . இன்று தான் ஏன ோ எதை ப் பார்த்தாலும் யாரை ப் பார்த்தாலும் சலிப்பாகவே வருகிறது. டீவி செ ய்திகளும் சலிப்பை அதிகரித்ததால் டீவியை ஆஃப் செ ய்து கண்களை மூடி தன் கை யை நெ ற்றியில் வை த்தபடி சாய்ந்தார். நினை வு ராபர்ட்டை சுற்றியே ஓடியது. அன்பாகக் கவனித்துக் க ொள்ளும் மனை வி, திருமணமான மகன் அவன் மனை வி குழந்தை , திருமணமே வே ண்டாமெ ன இருக்கும் மகள், ஒரு விதவை த் தங்கை என வடுீ நிறை ந்து மனிதர்கள். மனிதர்கள் நிறை ந்த வடுீ . அத்தனை பே ரும் பாதுகாப்பாக இருக்க வே ண்டுமே என்ற நினை ப்பில் எல்லா காரியங்களுக்கும் அவரே வெ ளியே ப ோய் ப ோய் வந்ததில் தான் இந்த நிலை மை . அலை பே சி ஒலிக்க திடுக்கிட்டு எழுந்தார். பதிவு செ ய்யாத எண்ணிலிருந்து அழை ப்பு. ஒரு ந ொடி எடுக்க வே ண்டுமா என்று ய ோசித்தவர் காதில் அலை பே சியை வை த்து "ஹல ோ" என்றார். மறு முனை யில் பதிலில்லை . தன் குரலில் க ொஞ்சம் கடுமை கூட்டி மறுபடியும் "ஹல ோ" என்றார். ஆழ்கிணற்றிலிருந்து எழுந்தது ப ோல் மெ ல்லிய விம்மல் ஒலி. அமை தியாய் இருந்தார். பயமாக இருந்தது. "முத்தச்சா!" என்றது ஒரு மலை யாள மணத்த ோடு ஒரு பெ ண் குரல். கை நடுங்கியது. தந்தை யும் மகனும் வை ராக்கியத்த ோடு எத்தனை ஆண்டுகள் பே சாமல் இருந்து விட்டார்கள். பிறந்த குழந்தை யை தூக்கிக் க ொண்டு வந்தவர்களை வட்ீ டுக்குள்ளே யே வர விடாமல் விரட்டி அடிப்பதுக்கு முன்னாலாவது சில முறை ப ோனில் பே ச முயற்சி செ ய்தான். அதன் பின் அவனும் தந்தை என்ற ஒருவர் தன் வாழ்வில் இருந்ததை யே மறந்து ப ோனான். இப்ப ோ மனை வியை விட்டு பே ச முயற்சிக்கிறான ோ? அதுவும் ஏன் இந்த இரவு வே ளை யில்? இந்த கை வே று ஏன் இப்படி நடுங்கித் த ொலை கிறது? மறுபடியும் பெ ண் குரல் "முத்தச்சா உங்க ம ோன் க ொர ோனா வந்து மரிச்சுப் ப ோயி. மூணு திவசம் ஆஸ்பத்திரியில இருந்துச்சு. நிங்கள்ட பறை யே ண்டானு கரை ஞ்சு." அழுது க ொண்டே தமிழும் மலை யாளமும் கலந்து ஒரு துக்க சே தியை ச ொல்லி முடித்தாள். ஒரே நாளில் இரண்டாவது இடி. ஒன்றும் ச ொல்லாமல் காலை கட் செ ய்தார். கண்களிலிருந்து கண்ணர்ீஊறி ஓடத் த ொடங்கியது. அந்த எண்ணை மருமகள் என்று சே வ் செ ய்தார். என்ன ஒரு மடத்தனம் செ ய்திருக்கிற ோம். "இழந்து விடுவ ோம் என்பது தெ ரிந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் வை ராக்கியமாக பே சாதிருந்திருப்ப ோமா? என் கண்ணிலே யே முழிக்காதே !" என்றது அப்படியே பலித்து விட்டதே . நெ ஞ்சுக் குழியில் அடை த்துக் கிடந்த துக்கம் ராபர்ட்டின் மரணத்தால் என்று நினை த்த ோமே . என் மகன் இறக்கும் நே ரத்தில் அவலமாய் அபயமாய் க ொடுத்த குரலல்லவா என் நெ ஞ்சுக் கூட்டில் இடியாய் இறங்கி இருக்கிறது. என்ன செ ய்யப் ப ோகிறே ன்" என்று. அலமந்து ப ோனார். ஒரு துக்கத்தால் வலுவிழந்த மனம் அடுத்த துக்கத்தில் இறுகிப் ப ோனது. எந்த ந ொடியில் யாருக்கு மரணம் என்பது அறிய முடியாத ரகசியமாய் இருக்கிறது. இருக்கும் வரை என்னை ச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை மட்டுமே காட்ட வே ண்டும். தான் என்னும் அகந்தை யை தலை யை ச் சுற்றி எறிய வே ண்டும் என முடிவெ டுத்தார்.

24 December, 2024

சதியின் கோரிக்கை. ***** வேறெதுவும் தேவையில்லை. வேலைக் கனமென்னை வெலவெலக்க வைக்கும் போதோ கற்பனையாய் வியாதி எதுவும் கதறி அழ வைக்கும் போதோ, உறக்கம் வராமல் நான் உருண்டு புரண்டு வரும் போது, இறுக்கமாய் அணைத்து நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை தானமாய் தந்து விடு. அன்னை மடி கதகதப்பை அள்ளி நீயும் தந்து விட்டால் ஆயுளுக்கும் நீங்க மாட்டேன். கொஞ்சம் நான் பிழைத்தும் போவேன்.

23 December, 2024

நாவலின் பெயர் : உடைந்த நிழல். ஆசிரியர் : பாரதி பாலன். சந்தியா பதிப்பகம். விலை. : ரூ. 120. முதல் பதிப்பு : 2005. இந்த ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நாவல். தினமணி கதிரில் தொடராக வந்து பின் புத்தகமாகி இருக்கிறது. " மாம்பூவும் , வேப்பம்பூவும் , தும்பைப் பூவும் பூவிலா சேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அடுக்கடுக்கான அதன் கட்டுடலும் நெகிழ்வும் வளவளப்பும் எத்தனை அழகு!! இதையெல்லாம் பார்க்கத் தனி கண் வேண்டும். மனது வேண்டும். என்று ஒரு முறை நரேஷ் முத்தையா சொன்னது இப்போது மனதில் படுகிறது." இது ஆசிரியர் பாரதிபாலன் தன் உரையில் கூறியிருப்பது. இத்தகைய பூக்களைப் போன்றவர்களே கதையின் மாந்தர்கள். கதை நண்பர்களான இரு இளைஞர்களைப் பற்றிய கதை. ஒருவன் காந்தி ராஜன். நேர்மை, உண்மை, போன்ற எதைப்பற்றியும் நினைக்காமல் லௌகீக வெற்றிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்பவன். ஆனால் நண்பனுக்கு உதவத் தன்னாலானதைச் செய்யத் தயங்காதவன். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை மிக முக்கியமானவனாகக் கருதக் கூடிய அளவில் பேசத் தெரிந்தவன். அவன் வாழ்வில் நடப்பவை எல்லாம் சிறந்தனவாகவே இருக்கிறது. அடுத்தவன் நரேஷ் முத்தையா. வேலை தேடி மாநகரம் வந்து காந்தியோடு இணைந்தவன். சரி, தவறு என்ற இரண்டுக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டு இருப்பவன். நியாயமற்று காந்தி செய்யும் பல காரியங்களில் தன்னை இணைத்துக் கொள்வதை விரும்பா விட்டாலும் வேறு வழியின்றி இணைந்து செல்பவன். தூசி படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? நாம் தோற்றுப் போய் விட்டோமோ? காந்தி தான் புத்திசாலியோ என்ற குழப்பத்துடனே தனது வாழ்வைக் கழிப்பவன். காந்தியிடம் சிரித்துப் பேசும் பெண்களைப் பரிதாபமாகப் பார்ப்பான். "சாக்கடையில் விழப் போகிறது . அதற்கு ஏன் இத்தனை அலங்காரம் " என்று நினைப்பான். காந்தி ராஜன் தொடர்பு வைத்திருக்கும் பெண் ஜெயந்தி அவருடைய அலுவலகத்திலேயே பணிபுரிபவள். பணக்காரப் பெண்ணை திருமணம் செய்த பின்னும் அந்தத் தொடர்பை மிக தந்திரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறான். பல இடங்களில் தமிழ் மிக அழகாக நடமிடுகிறது. நரேஷ் ஜெயந்தியின் புருஷன் மீது பரிதாபம் கொள்கிறான். அதைச் சொல்லும் போது " திருட்டு போனது தெரியாமல், திருடியவன் யார் என்று அறியாமல், அந்த ஆத்மா அலையப் போகிறது. பல நேரங்களில் அந்த ஆத்மாக்கள் எரிந்து சாம்பலான பின்னும் அறியப்படாமலே சாம்பலோடு சாம்பலாக கரைந்து விடுகிறது. " ஒரு பெண் செய்யும் தவறு பற்றி கடைசியாக அறிந்து கொள்பவன் அவளுடைய கணவனாகவே இருக்கிறான் என்று சொல்லப்படுவது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது ஊரில் லதா என்னும் தன் உறவுக்கார பெண்ணை காதலிக்கிறான் நரேஷ் . ஆனால் அந்த காதலை அந்தப் பெண்ணிடமே கூட வெளிப்படுத்தும் துணிவு இல்லை. ஆனால் அந்த காதல் அவனை நேர்மையாளனாக வார்த்து எடுக்கிறது. அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்து விட்ட பிறகும், அவளைத் தூக்கி எறிந்து விடவும் முடியாமல், சேர்த்து வைத்துக் கொள்ளவும் முடியாமல் மூச்சு திணறுகிறது அவனுக்கு. இவ்விதம் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு அழகாகப் பின்னித் தாழம்பூ தைத்தது போல் "உடைந்த நிழல்" கதை நமக்கு குளிர்ச்சியை தருகிறது. நல்லதோர் அறிமுகம்.

07 November, 2024

ஒரு குடும்ப விவகாரம் யூட்யூபில் நாம் அனேகர் அடிக்கடி பார்த்திருக்கலாம். அது எனக்கு ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்னையாகத் தோன்றாததால் தான் இந்தப் பதிவு. கணவன் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாகத் தேறி இருக்கிறான். ஏழை மாணவன். நாட்டுப்புறக் கலைஞன். பல வெளிநாட்டு விருதுகள் வாங்கி இருக்கிறார். பல பட்டங்கள் பெற்றவர். பத்தொன்பது வயதில் தான் காதலித்த பெண்ணை நான்கே மணி நேரங்களில் திருமணம் செய்கிறான். இவ்வளவு நன்றாகப் படிக்கும் மாணவன் வாழ்வில் ஒரு உயர்ந்த குறிக்கோளைக் கொள்ளாமல் அவசரப்பட்டு திருமணம் செய்தது. முதல் தவறு. அந்த பெண் அறிமுகம் ஆன நான்கு மணி நேரத்தில் ஒரு பூங்காவில் வைத்து அந்த பெண்ணுக்கு தாலி கட்டுகிறான். இதுவே அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நிதானமற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. முறையில்லாத இடத்தில் திருமணம். இரண்டாவது தவறு. திருமணமான ஐந்து வருடங்களில் அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இரண்டு அபார்ஷன்கள். திருமணம், வாழ்க்கை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாகவே ஐந்து கருக்கள் உருக் கொள்கின்றன. மூன்று உயிரோடு பிழைக்க, இரண்டு கலைந்து போக, அந்த கணவனைப் பற்றிய தவறான தகவல் வர வர, அந்த பெண் நிதானமிழக்கிறாள். அதன் பின் தவறான முடிவெடுப்பதில் போட்டி போட்டு இருவரும் முன்னேறுகிறார்கள். ஊடகங்கள் கொஞ்சம் அக்கரையோடும் கொஞ்சம் சுயநலத்தோடும் , அவர்கள் இருவரின் பேட்டிகளைப் போடப் போட விரிசல் இன்னும் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. இன்று அந்த கணவன் இனி அவளோடு வாழ முடியாது, தான் படித்து கலெக்டர் ஆகப் போவதாகச் சொல்கிறார். எல்லாம் தலை கீழ். படித்து கலெக்டராகி , அதன் பின் காதலித்து திருமணம் செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும். ஆரம்ப காலங்களில் இந்த இருவரும் பறை எடுத்து ஆடுவதும், வீடியோக்கள் போடுவதும் அவ்வளவு அழகாக இருக்கும். இன்று இவர்கள் குடும்ப விஷயம் நடுத் தெருவில் நின்று தலை விரித்து ஆடுகிறது. திறமைசாலிகளாக இருப்பவர்கள் காதலில் விழுவது சகஜம். அதில் ஒருவர் துணிவற்றவராய் இருந்தாலே அடுத்த கட்டத்திற்கு நகராது. இருவரும் துணிச்சலோடு இருக்கும் போது அடுத்தடுத்து நகரும். அதே துணிச்சல் தான் அவர்கள் எதையும் செய்து விடுவார்கள் என்ற சந்தேகத்தையும் கொடுக்கும். அந்த சந்தேகம் தான் மொத்த வாழ்க்கையையும் கலைத்து போடும். ஒரு பெண் கடுமையாக நடந்து கொள்கிறாள் என ஆழ அகலமாக அலசி ஆராயும் சமூகம் அதற்கு அடிக் காரணமாக ஆண் செய்யும் தவறை எளிதாகக் கடந்து விடுகிறது. கணவன் மனைவி இருவர் செய்த அடுக்கடுக்கான தவறுகளுக்கு பலிகடா ஆவது குழந்தைகள். திறமையானவர்களாய் இருப்பது பெரிய விஷயமல்ல. தீர்க்கமாய் முடிவெடுப்பதே முக்கியம்.

16 October, 2024

திரைப்படம் பெயர் : நந்தன் இயக்குநர் : இரா சரவணன் முக்கிய காதாபாத்திரங்கள் : பாலாஜி சக்திவேல், சசி குமார், ஸ்ருதி பெரியசாமி. "இந்த நாட்டுக்கு வேணா யார்னாலும் ப்ரசிடென்ட்டா வரலாம். ( நான் கொஞ்சம் மாத்தி இருக்கிறேன்) ஆனா நம்ம ஊருக்கு நம்ம ஜாதி ஆளுங்க தான் ப்ரசிடென்ட்டா வரணும். " படத்தின் முதல் வசனமே இது தான். நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனம். பழைய ப்ரசிடென்ட்டின் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கு சேவகம் செய்யும் அம்பேத் குமாரை (சசிகுமார்) வணங்காமுடி என்றொரு கிராமம் ரிசர்வ் தொகுதியானதும் ப்ரசிடென்ட் ஆக்குகிறார்கள் பெயரளவில். தான் என்ன சொன்னாலும் கேட்பான் என்ற நம்பிக்கையில். வெள்ளை சட்டை வேட்டியுடன் கிளம்பும் அவரை , அவரை அன்பு செய்பவர்கள் தூக்கிச் செல்லத் தொடங்க , அவர் பையன் என்னவோ ஏதோவென்று பயந்து அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு " எங்க அப்பா வாங்கின பணத்தைக் கொடுத்திடுவாரு. விட்டிடுங்க" என்று அழுகிறான். பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் தேவைக்கு பணம் வாங்குவதும் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானப்படுவதும் குழந்தைகளை எவ்வளவு பதற்றப்படுத்தும் என்பதைச் சொல்லும் காட்சி. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. தான் ப்ரசிடென்ட் என்பதையே மறந்து முந்தைய ப்ரசிடென்ட்டையே " ப்ரசிடென்ட் ஐயாட்ட கேட்டுட்டு் வரேன்" னு சொல்வதும், அவரை முழுவதுமாக நம்புவதும் , அம்பேத்குமாரின் வெள்ளந்தியான போக்கும் அந்தப் பாத்திரத்துக்கு உரமூட்டுகிறது. BDO வாக நல்ல ஒரு அரசாங்க அதிகாரியாக வரும் சமுத்திர கனி உள்ளபடி பணத்துக்கு விலை போகாமல் நேர்மையான அதிகாரிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வருகிறார். படத்தின் இறுதியில் ஒரு சஸ்பென்சும் தருகிறார். ஸ்ருதி பெரியசாமி . மேக்கப் போட்டு கருப்பாக்கி அம்பேத் குமாரின் மனைவியாக ஆக்கி இருக்கிறார்கள். நகரப் பெண்கள் மட்டுமல்ல கிராமப் புரத்தைச் சேர்ந்த பெண்களும் கணவருக்கு எவ்வளவு பக்க பலமாக இருக்க முடியும் என்பதை இந்தக் கதா பாத்திரம் மூலம் சொல்கிறார்கள். பல இடங்களில் அம்பேத் குமார் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளுக்குப் பின்னால் அவர் மனைவி இருக்கிறார். ரிசர்வ் தொகுதி ஆவதற்கு முன்னால் உள்ள ப்ரசிடென்ட்டாக வரும் பாலாஜி சக்திவேல் அந்த பாத்திரத்துக்கு அட்டகாசமாகப் பொருந்தி இருக்கிறார். எல்லோரும் இருக்கும் இடத்தில் பெருந்தன்மை உள்ளவராகவும், தனிமையில் பழி வாங்கும் குணத்தை வெளிப்படுத்துபவராகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். "பாடல் எக்கி எக்கி பார்க்கிற பூன போல உக்கி உக்கி பார்க்கிற யானை போல. " பாட்டு ரொம்ப நல்லா இருக்குது. இசை ஜிப்ரான். ரசித்த வசனம். "வாழ வழியில்லாம போராடலாம் நாங்க சாக வழியில்லாம போராடுறோம்" இது இப்படி இருந்திருக்கலாமோ என எனக்குத் தோன்றியது. " செத்த பிறகும் வழியில்லாம போராட வேண்டி இருக்குது" அடித்து பெய்யும் மழையூடே அம்பேத் குமாரின் இறந்த பாட்டியை மாற்று சாதியினர் அவர்கள் இடத்தில் எரிக்க விடாததால், குழி தோண்டி தண்ணீருக்குள் பிணம் மிதக்க மிதக்க மண்ணை அள்ளிப் போட்டு மூடும் இடம் கண்ணில் நீரை வரவழைக்கும். என்றோ நடந்ததை இன்று ஏன் படமாக எடுக்கணும் என்று வழக்கம் போல கேள்வி உயர்த்த வேண்டாம். பாப்பாக்குடி நிகழ்வு சமீபத்தில் நடந்தது தானே. முற்றுமாய் தீண்டாமை அழிக்கப்படும் வரை இத்தகைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

04 October, 2024

நட்பென்பது!!

ஒன்று பணம்/ அழகைக் காட்டி நட்பாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அல்லது நட்பாக்கிக் கொண்டு பணம்/ அழகைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இந்த இரண்டைத் தாண்டி சிந்திக்கும் போது தான் நல்ல நட்பு கிடைக்கும். யாருக்கு வேணும் நல்ல நட்பு என்றும் ஒரு குரல் கேட்கிறது. முன்பெல்லாம் நண்பனைக் காதல் கவிதை எழுத வைத்து, காதலை கட்டி எழுப்ப முயன்றார்கள். இப்பொழுதோ யாரோ எழுதி 6k like வாங்கிய கவிதையை, ரீல்ஸில் திருடி, மெசென்ஜரில் அனுப்பி , காதல் கோட்டையை கட்டி எழுப்ப முயல்கிறார்கள். மொத்தத்தில் நாம தான் கோளாறாய் போனோமோ என எண்ண வைத்து விடுகிறார்கள். உணர்வுகளோடு விளையாடித் தான் செய்யும் தவறு புரியாமல். கோளாறாய் போனது நாமல்ல மொத்த காதல் உலகமே என்பது மெள்ளத் தான் புரிகிறது. விரல் நுனி மரத்துப் போகிறது தேவையற்றதை நீக்கி நீக்கி. தம் எல்லை தெரிந்து பயணிப்பவர்கள் உடன் வரலாம் பல காலம். கடல் மணலில் தேடி முத்துள்ள சிப்பியைக் கண்டடைவது போல் கடின வேலை நல்ல நட்பை அடைவது. ஆனால் கிடைக்கும்.

03 October, 2024

#நாவல் விமர்சனம் நாவலின் பெயர் : நீர்ப்பரணி ஆசிரியர் : எம் .எம். தீன் "படைப்பு" பதிப்பகம். விலை : 300 ரூபாய் முதல் பதிப்பு 2024 . ****** பொதிகையில் பிறந்து ஓடிவரும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் முன்னர் வருடத்திற்கு இருமுறை வெள்ளம் வந்து பேரழிவு நேர்ந்திருக்கிறது. அதன்பின் பல நீர்த் தேக்கங்களும் தடுப்பணைகளும் கட்டி அதைக் கட்டுப்படுத்தி இருந்திருக்கின்றனர். அந்த காலத்தில் வெள்ளம் பாதிக்காத இடங்களில் குடியேற்ற பேட் மாநகரம் , கேம்பலாபாத், பர்கிட் மாநகரம் இவற்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அதில் கேம்பலாபாத் என்ற ஊரின் வெள்ளக் கதையை "நீர்ப்பரணி" என்ற பெயரில் நாவலாக்கி இருக்கிறார் . தலைகுனிந்து வயதுக்கு வந்த பெண்ணைப் போலச் சென்று கொண்டிருந்த தாமிரபரணி சமீப காலமாக தன் குழந்தைப் பருவ சேட்டைகளைத் தொடங்கி இருப்பது இவரை இந்த நாவல் எழுதத் தூண்டி இருக்கலாம் என்பது என் யூகம். பதிப்பாளர் ஜின்னா அஸ்மி மிக அழகாக சொல்லி இருக்கிறார். "மனிதனுக்குப் பிறந்த மண் என்பது ஆயுள் ரேகையின் ஆரம்பப் புள்ளி" இந்த நாவல் மறைந்து போன வாழ்வின் வரலாற்றைப் புரிய வைக்கும். கொஞ்சம் உருக வைக்கும். நிறைய உறைய வைக்கும். நாவல் பகுதி பகுதியாக பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது. 1850 இல் தொடங்கி 1933 வரை 83 வருடங்களின் கதையை ஆறு பகுதிகளாகச் சொல்கிறது. கதையின் ஆரம்பமே நம்மை உறைய வைக்கும். பொருள்களோடு, உறவுகளோடு மகிழ்ச்சியோடும் தோணியில் ஏறிய புதிதாகத் திருமணமான பெண்ணும் மாப்பிள்ளையும் வெள்ளத்தில் மாட்டி இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் பெண்ணின் கனத்தப் பட்டுச் சேலை மாப்பிள்ளையின் உடலை சேர்த்துச் சுற்றி, இறப்பிலும் பிணைத்தே வைத்திருப்பதோடு தொடங்குகிறது. இடையிடையே தரமான விஷயங்களை அழுத்தமாகச் சொல்வது ஆசிரியரின் பாணி. " எப்போதும் மனிதன் நடந்த கதையை சந்தேகித்து விட்டு, பொய்யான சம்பவத்தை முழுமையாக நம்புவான். உண்மையற்ற கற்பனை போட்ட பொய்க் குட்டிகளை நம்புவதில் வாழ்வு சுவைக்கிறது." சவராமங்கலம் என்னும் ஊரில் வாழும் மக்கள் சந்தித்த வெள்ளத்தின் அவலம் உள்ளம் உருக்கும் வண்ணம் சொல்லப்பட்டு இருக்கிறது. பல வகை மரங்கள், பறவைகள் என தான் ரசித்தவற்றை கதையின் நடுவே ஊடுபாவாக சொல்லிவிடுவார். உதாரணமாக "இலவ மரத்தின் பூக்கள் கருப்பாய் உதிர்ந்து கிடந்தன. கருப்புப் பூ, உலகில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தார் . அது தப்பு என்று சொன்னது இலவ மரம். சவராமங்கலம் குட்டி கொழும்பு போல மாறிக்கொண்டிருந்தது. கொழும்புவில் விற்கும் பொருட்கள் அடுத்த நாள் ஊரில் கிடைக்கும் என்றானது. ஒழுக்கரைப்பெட்டி என்றொரு வார்த்தை எனக்கு அறிமுகமானது. மிகவும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட பெட்டி . அதை நகர்த்த பல பேர் தேவைப்படும் நிலையில் அந்த வெள்ளம் ஒரு வீட்டில் இருந்து, மூன்று பெட்டிகளை அடித்துச் சென்றதை சொல்லும்போதே , நமக்கு வெள்ளத்தின் வீரியம் புரிகிறது. வட்டலப்பம் செய்முறையை விளக்கும் போது நாவில் நீரூறுவதை நிறுத்த முடியாது. ஒழுக்கரைப் பெட்டி போலவே நான் தெரிந்து கொண்ட இன்னொரு வார்த்தை ஹூருளீன் கன்னிகள். இதற்கு சொர்க்கத்தில் இருக்கும் கற்பழியா கன்னிகள் என்று அர்த்தமாம். மோகனா என்றொரு பாத்திரம், பூனைப் பெத்தா என்று ஒரு கதாபாத்திரம் இவை எல்லாம் காலத்தால் நம் மனதில் நின்று என்றும் அழியாதவை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உயர்ந்த பகுதியில் இடம் வாங்கித் தர ஏற்பாடு செய்த சாய்பு வக்கீலைப் பற்றி சொல்லும் போது " சில முகங்கள் எப்போதும் எல்லோரையும் கவர்ந்து விடுகிறது அந்த முகத்தின் அடையாளங்களுக்குள் ஒரு கல்மிசம் அற்ற ஜொலிப்பு இருக்கும். ஈர்ப்பு இருக்கும்" என்கிறார். அப்படி கேம்பெல் துரையிடம் இருந்து வாங்கிக் கொடுத்த இடம்தான் அவர் பெயரால் கேம்பலாபாத் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாவல் எழுத ஆசிரியர் மேற்கொண்ட மெனக்கிடல் நாவல் நெடுகத் தெரிகிறது. கண்டிப்பாக நமது நூலகத்திலிருந்து நம் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்ல கூடிய ஒரு நாவல் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. ரசித்தது: " நதியோடு கலப்பவனுக்கு நதியைப் போல வயதில்லாமல் போகிறது" " வெள்ளம் என்பது எல்லா மழை நீரும் சேர்ந்து என்னை ஆவி சேர்த்துக் கொள்கிறது. அப்போது நான் என்னை மறந்து போகிறேன். என்னைத் தாண்டி என் மேல் சைத்தான் போல ஏறிக் கொள்கிறது. அது செய்யும் கொடுமைக்கு துணையாகிப் போகிறேன்" என்று தாமிரபரணி சொல்வது போல எழுதி இருப்பது.
#திரைப்படம் JUNA FURNITURE நேற்று "உலக முதியவர்கள் தினம்" அதை முன்னிட்டு எழுத வேண்டிய பதிவு கொஞ்சம் தாமதமாக. மலையாளப் படங்களைப் போலவே மராத்தி படங்களும் விரிந்த கதைக்களம் கொண்டவை. சமீபத்தில் அமேசான் ப்ரைமில் நான் பார்த்த " JUNA FURNITURE" முதியவர்களிடம் , நாம் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர்களாக நடப்பதைக் கண்டிக்கும், கடிந்து காட்டும் படமாக இருந்தது. இயக்குநர் : மகேஷ் மஞ்சுரேக்கர். கோவிந்த் பதக் ( மகேஷ் மஞ்சுரேக்கர்) அறிமுகமாகும் போதே அவர் குண நலன், நமக்கு தெரிந்து விடுகிறது. சந்தையில் துணிச்சலாக ஒரு ரௌடியை எதிர்க்கிறார். வீட்டில் மனைவியுடன் ( மனைவியாக மேத்தா மஞ்சுரேக்கர்) அந்நியோன்யமாக குடும்பம் நடத்துகிறார். தன் ஒரே மகனை பலவித சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து ஐஏஎஸ் அதிகாரி ஆக்குகிறார். மகனோ ஒரு பணக்கார வீட்டிப் பெண்ணை திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடுகிறான். திடீரென்று மனைவி உடல் நலமில்லாமல் போக, தன் திருமண நாள் பார்ட்டியை, தன் பெற்றோரை அழைக்காமல் பெரிய பெரிய விஐபிக்களோடு கொண்டாடிக் கொண்டு இருக்கும் மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. அன்றே மனைவி இறந்து விடுகிறார்கள். தன் மகனின் அலட்சியத்தால் தான் தன் மனைவி இறந்து விட்டார்கள் , தொடர்பு கொண்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கோர்ட்டில் ஒரு பெரிய தொகை ( பெரிய தொகைன்னா அப்படி இப்படி இல்லை ஜென்டில்மென் நாலே முக்கால் சொச்சம் கோடி) கேட்டு வாதாடுகிறார். அதன் பின் தான் விறுவிறுப்பான கோர்ட் காட்சிகள். எல்லா பெற்றோரும் தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று சுலபமாக கடந்து போக முடியாது.எல்லாவற்றிற்கும் மேலானதாக top most priority குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கிறார்கள். பதிலாக தன்னைச் சார்ந்து இருக்கும் பெற்றோருக்கு least most priority தான் தருகிறார்கள். எவ்வளவு வேதனை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நெருப்பாற்றில் நீந்தித் தான் தன் பிள்ளைகளை கரை சேர்க்கிறார்கள். ஆனால் கரை சேர்ந்த பிள்ளைகள் தமக்குப் பின்னால் கரை சேர எத்தனிக்கும் பெற்றோருக்கு கை கொடுப்பதில்லை. காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டு அடுக்கப்பட்டு இருக்கின்றன. இசைக்கு அதிகம் வேலை இல்லை. அப்படியே நடனத்துக்கும். ஸ்டன்ட்டுக்கும். இதனாலேயே நம் மொழியில் இது போன்ற கதைக் களன்களை சிந்திக்கத் தயங்குகிறார்களோ. படத்தை முழுவதும் சொல்லிட்டீங்களேன்னு சொல்லாதீங்க. கோர்ட் நிகழ்வுகளும், கடைசியில் வரும் திருப்பமும் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒன்று. தவறாமல் பார்க்க வேண்டிய படம். ( பதிவு கொஞ்சம் நீளம் தான். ஆனால் வாசிக்க எளிதாக் தான் இருக்கும். கண்டிப்பாக தவற விடாதீர்கள்)

30 August, 2024

vvஒரு வாரம் முன்ன, வீட்டின் பின்னாடி உட்கார்ந்து என் மகளுடன் போனில் பேசிக்கிட்டு இருக்கிறேன். கால்ல வழு வழுன்னு ஏதோ பட காலைச் சட்னு தூக்கிட்டேன். பார்த்தா நல்ல ஆரஞ்சு நிறம் வால் பக்கம் சிவப்பாக அரணை. ஒரு நிமிஷம் பயந்திட்டேன். அரணை பற்றி நான் அறிந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வருது. நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் ப்ரௌஃபசரின் மகன் அரணை கடித்து இறந்த்து. எதையும் மறந்து போனால் எங்க அப்பா அரணை புத்தின்னு திட்டினது. கொஞ்ச நேரம் கழித்து அப்பாவிடமே போய் "அரணை புத்தின்னா என்னப்பா கேட்டது. " அது கடிக்க வருமாம். பக்கத்தில வர்ரதுக்குள்ள எதுக்கு வந்தோம்னு மறந்து வேற பக்கம் போயிடுமாம். அது தான் அரணை புத்தின்னு" சொன்னது. இன்னும் என்னவெல்லாமோ நினைவுக்கு வருது. பயந்து போய் என் வீட்டுக்காரரிடம் சொன்னால் அவர் வழக்கம் போல் " நல்லா பார்த்தியா. பல்லியா இருக்கப் போகுது" என்கிறார். நான் பக்கத்து வீட்டுக்குப் போனேன். அவங்க "அரணை கடிக்காது. நக்கத் தான் செய்யும். நக்குச்சா?" ங்கிறாங்க. அது எப்படித் தெரியும்னு நான் கேட்டதும் புழுப் போல் என்னைப் பார்த்து " காலில் எச்சில் மாதிரி பட்டுச்சா" ங்கிறாங்க. அப்படி பட்ட மாதிரி தெரியல. ஆனாலும் உள்ளூர சங்கு சத்தம் கேட்குது. எங்க வீட்டுக்காரர் டெட்டாலை தண்ணியில கலந்து கால்ல ஊத்துறார். அவருக்கு தெரிஞ்சதை செய்றார். பக்கத்து வீட்டு அம்மா வெத்தலையில இருபது மிளகு பக்கம் வைத்து மெல்லுங்கன்றாங்க. உறைப்பு தெரியுதான்னாங்க. எனக்குத் தெரியலையே ன்னு சொல்லி அவங்க சத்தமா " தெரியலயா" ன்னு கேட்கிறதுக்குள்ள தொண்டையில காரம் சுள்ளுனு இறங்குது. " உறைக்குது" ன்னு சொன்னதும் ஒண்ணும் இருக்காதுக்கான்னுட்டாங்க. ஒரு நிமிஷம் ஒண்ணும் ஆகாதுன்னு தோணுது. அடுத்த நிமிஷம் அப்படியே செத்துட்டாலும் என்ன நடந்ததுன்னு தெரியும் அதனால பரவாயில்லைன்னு தோணுது ( தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?) நல்ல வேளை அமெரிக்காவில இருக்கிற மகள்ட கடைசியா ஒரு தடவ வீடியோ கால்ல பேசிட்டோம் திருப்தி ஆகுது. "அடச்சீ! நீயெல்லாம் ஒரு மனுஷியா? ஒரு அரணை கால்ல பட்டதுக்கு இவ்வளவு யோசிக்கிற" அப்படியும் தோணுது. இரண்டு மணி நேரம் இதையெல்லாம் யோசிச்சுகிட்டே வீட்டு வேலை பார்த்ததுல அரணை மறந்து போச்சு. இப்போ வனநீலி பதிவை பார்த்ததும் ஞாமகம் வந்துட்டுது. நன்றி வனநீலி ஒரு பதிவு எழுத உதவியதற்கு

19 August, 2024

நாவலின் பெயர் அர்த்தநாரி. ஆசிரியர் பெருமாள் முருகன் . காலச்சுவடு பதிப்பகம் . விலை 240 ரூபாய். முதல் பதிப்பு டிசம்பர் 2014 . பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . அவரை இனி எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளியது. அதிலிருந்து மீண்டு வந்ததோடு அதற்கு தொடர்ச்சியாக ஆலவாயன், அர்த்தநாரி என்ற இரண்டு நாவல்களை எழுதினார். சீராயி என்ற தாயின் மகன் காளி. மருமகள் பொன்னா. இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாததால், அந்தக் கால வழக்கப்படி கோவில் திருவிழாவில் மற்றொரு ஆணுடன் இணைந்து விடுகிறாள் பொன்னா. காளியின் சம்மதத்தை பெற்று விட்டதாகச் சொல்லி ஏமாற்றித்தான் அழைத்துச் செல்கிறார்கள். தான் உருகி உருகிக் காதலித்த பொன்னா கரட்டூர் நோம்பியில் கலந்து கொண்டு இன்னொருவனோடு உறவு கொண்டு விட்டாள் என்பதை அறிந்து காளி தூக்கிட்டுக்கொள்ள, பொன்னா தன் வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றாள் என்று சொல்வது ஆலவாயன். காளி தூக்கிடப் போவதை தற்செயலாகக் கண்டு சீராயி தடுத்து வாழும் காளியின் கதையைச் சொல்வது அர்த்தநாரி. வித்தியாசமான சிந்தனை. பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத குழநகதையை, நோன்பிக்குப் போய் வந்தபின் உண்டானால் தான் வரடன் என்று பொன்னா தன்னை மதிக்க மாட்டாள் என்பது காளியின் எண்ணம். அது மட்டுமல்லாமல் சீராயி தன் மகனிடம் நீ பெரு நோம்பிக்கு போய் வருவது எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் தன் மனைவி , குழந்தைக்காக இன்னொரு ஆணுடன் இணைந்து விட்டாள் என்ற எண்ணத்தை தாங்க முடியாமல் தற்கொலை வரை போகும் காளி நோம்பியில் கலந்து கொள்ளாதவன் இல்லை. அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை இது. ஆனால் ரொம்ப முந்தைய காலம் என்பதை காளி கட்டிலில் படுத்து கிடந்த போது அவன் முடி படர்ந்து விரிந்து கிடந்ததை சொல்லி உணர்த்தி விடுகிறார் ஆசிரியர். அதோடு காளியை கருங்கல் சிலையை நிமிர்த்தி வைத்தது போல் இருப்பதாக சொல்லும்போது , உடல் அமைப்புக்கும் குழந்தை கொடுக்க முடியாமைக்கும் சம்பந்தமில்லை, என்ற பெரிய உண்மையை சுலபமாக புரிய வைக்கிறார் . அதுவும் அல்லாமல் காளி நோன்பிக்கு போவது திருமணத்துக்கு முன்பு தான். தனது எல்லா பழக்க வழக்கங்களையும் அறிந்த பொன்னாவின் அண்ணனும் தன் நண்பனுமான முத்து தன்னை நம்பி, தன் தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்த பின் அவன் பொன்னாவைத் தவிர வேறு பெண்ணை எண்ணியும் பார்த்ததில்லை. " நீயா ஒரு நாளும் என்னை கூப்பிட மாட்டியா" என்று கேட்கும் காளி ஒரு நாள் அவள் ஆசையாக முன்னேறும் போது "தே..... " என்று கொஞ்சுகிறான். ஆண்களின் நுண் உணர்வுகளை கதைக்கு நடுவே சொல்லி விடுகிறார் ஆசிரியர். காளியின் சித்தப்பா ஒருவர் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். அவர் பெயர் நல்லான். ஆனால் பெண் துணை வேண்டும் போது அனுபவித்துக் கொள்வார். ஒரு இடமும் தங்க மாட்டார். அவர் சொல்லும் கதைகள் காளிக்கு மட்டுமல்ல நமக்கும் கேட்கச் சுவையாகவும், நம்புவதற்கு முடியாததாகவும் , அதே நேரம் நம்புவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. இந்த சித்தப்பா இவரது மூன்று கதைகளிலும், அதாவது மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி இவற்றில் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படுகிறார். நகைச்சுவை உணர்வும் பாசமும் மிக்கவர். ஒரு இடத்தில் "மண்ணார்" வீட்டில் இருந்து பெரிய மண் விளக்கு மூன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, கம்பு வாங்கிப் போனார்கள் என்று வருகிறது. இதில் " மண்ணார் "என்ற பதம் புரியவில்லை . ஏதும் தொழில் சார்ந்த பெயராக இருக்கலாம். ( மட் பாண்டம் செய்பவர்களாய் நாம் குயவர் என்போமே அவர்களாய் இருக்குமோ?) கிட்டத்தட்ட காளியைப் போலவே உடம்பும் உருவமும் இருப்பவனை தான் பொன்னா நோம்பியில் தேர்ந்தெடுத்து இருந்தாள். அதன் மூலம் காளி மேல் அவளுக்கான அன்பை அழுத்தமாகச் சொல்லி இருப்பார் ஆசிரியர். காளியின் உதாசீனத்தால் பொன்னா காளியை விட்டு போய்விடுவோமா? நோம்பியில் தனக்கு குழந்தை கொடுத்த மாச்சாமியிடம் போய்விடுவோமா? இல்லை குழந்தையோடு தண்ணீருக்குள் இறங்கி விடுவோமா? இல்லை தனக்கு நெய்ப் பந்தம் பிடிக்க பேரன் வேண்டும் என சீராயி பண்ணிய ஏற்பாடு தானே இது. நீயே உன் பேரனைப் பார்த்துக்கொள் என்று பேரனை அவளிடம் விட்டுவிட்டுத் தாம் எங்கேயாவது பரதேசம் போய்விடுவோமா என தவிக்கும் பொன்னா நமக்கும் அதே தவிப்பை தருகிறாள். முடிவு என்னானது? நாவல் நம்மை முழுவதுமாக தமக்குள் இழுத்துக்கொள்கிறது. ரசித்தது "முண்டச்சி கதைய முழுசா சொன்னா கல்லும் கரையும் காக்காயும் அழுவும். "சீராயி கதைய மாறாத சொன்னா மண்ணும் கரையும் மரமும் அழுவும்" இந்த வகை சீராயியின் புலம்பலும் ஒப்பாரியும் கதை நெடுக வருகிறது தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றிய ஒன்று. ஒரு சில அடல்ஸ் ஒன்லி சிறுகதைகள் ஊடே வருகின்றன. அவை கிராமங்களில் வழக்கில் இருக்கும் கதைகள் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது . புத்தகங்கள் எல்லா வயதினரும் வாசிப்பதற்கு ஆனதல்லவா? அதனால் அது ஒன்று இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

08 August, 2024

நாவலின் பெயர் : நெடு நேரம். ஆசிரியர் : பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம். விலை : ரூ 390/- முதல் பதிப்பு : டிசம்பர் 2022 கொரோன காலத்து “ பொது முடக்கம்” என்னும் தற்காலிக நிகழ்வு பல திரைப் படங்களுக்கு கருவானது போலவே இந்த நாவலுக்கும் ஆகி இருக்கிறது. இது இரண்டு பயணங்களைப் பேசுகிறது. ஒன்று சாலைகளினூடே மேற் கொள்ளும் பயணம். மற்றது வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். வாழ்வுக்காக் விழுமியங்களா விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. கதையின் ஆரம்பமே ஒரு திடுக்கிடல் தான். அப்பா , அம்மாவைக் காணோம் என்னும் உண்மையை ஆறு மாதங்களாகத் தன் பிள்ளைகளிடம் மறைத்து வைத்திருக்கிறார். மூத்த மகனின் காதல் திருமணத்தை தான் நடத்தி வைக்க மறுத்தால் என்ன் செய்வாய் என அவனிடம் கேட்க “காத்திருப்போம் நீங்கள் ஒத்துக் கொண்டால் தான் திருமணம். அது வரை வெளி நாட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்போம் “ என்கிறான். திடுக்கிட்ட தந்தை திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார் அடுத்த மகள் காதலித்து விடக் கூடாது என்பதற்காக் படிப்பை முடிக்கும் முன்னே தன் இனத்தைச் சேர்ந்த பையனுக்கு படு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார். வீட்டுக்கு வந்த மூன்றாவது மகனிடம் மறைக்க முடியாமல் தன் மனைவியை ஆறு மாதமாக காணவில்லை என்ற உண்மையை சொல்லி விடுகிறார். தான் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த போது தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்ட செய்தியை தாங்கிய கடிதம் தான் வரவேற்றது என்ற துயரத்தையும் அவள் ஏன் பிரிந்தாள் எங்கு போனாள் என்று எதையும் புரிந்து கொள்ள முடியாத வருத்ததையும் பகிர்ந்து கொள்கிறார். அவர் தன் மனைவியைப் புரிந்து கொள்ளாததைப் போலவே தானு தன் தந்தை குமராசுரனின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதில்லையே என்ற ஆதங்கத்தில் மூன்றாவது மகன் முருகாசு கேட்க சொல்லத் தொடங்குகிறார். தன் தந்தை குப்பாசுரன் வயலுக்கு தண்ணீர் விடும் போது ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையில் கொலை செய்யப் பட்டு இறந்த்ததையும் தன் தாய் குப்பாசுரியின் அண்ணன் தன் படிப்புக்கான பொறுப்பை ஏற்று வேலையில் அமர்த்தியதையும் அவர் மகளையே தனக்கு மணமுடித்துக் கொடுத்ததையும் சொன்னார். அப்பாவுக்கு பள்ளியும் வீடும் அம்மாவுக்கு வீடு மட்டும் என்று நினைத்துக் கொண்டான். கோபப்பட்டு கத்தி சண்டையிட்டு மட்டுமல்ல மௌனமாய் இருந்தே ஒரு பெண்ணால் கணவனை உச்ச பட்ச கோபத்துக்கு ஆளாக்க முடியும் என்பதைக் குமராசுரனின் மனைவி மங்காசுரியின் மூலம் காட்டி இருக்கிறார் ஆசிரியர். இருவரையும் ஜோடியாக ஊருக்குள் அழைத்துச் செல்லவே இல்லை குமராசுரனின் தாய் மாமன். அவளை மணமுடிக்க ஆசைப்பட்ட ஏமாந்த சிலர் ஊருக்குள் இருப்பதால் அவர்களை எரிச்சலூட்டக் கூடும் என்று காரணம் சொல்லி விட்டார். தன் மாமன் சொல்லைத் தட்டாத குமராசுரனும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இப்போது அதற்கும் மங்காசுரியின் மௌனத்துக்கும் வீட்டை விட்டு சென்றதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது என்கிறார் தன் மகனிடம். படிப்பில் சிறந்து விளங்கும் குமராசுரன் பசியின் கொடுமையால் தன் வாழ்ந்தாள் சாதனையாக பள்ளியில் வாங்கிய பரிசுப் பொருளான பேனாவை அடமானம் வைத்து பணம் பெற்று சாப்பிட்டதாகச் சொல்வது கொடுமை. இதைப் போலவே என் நண்பர் ஒருவர் தன் பள்ளிக் காலத்தில் பரிசாகப் பெற்ற புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் விற்று சாப்பிட்டதாகச் சொன்னது வலியோடு நினைவுக்கு வந்தது. முருகாசு தன் நண்பன் மேகாசுவுடன் அவனுடைய விலையுயர்ந்த பைக்கில் தன் தாயைத் தேடிச் செல்வதும் ஒரு கிராமத்தில் ஒரு பெண் இளம் காலையில் பறவைகளுக்குத் தானியங்கள் விசிறுவதை அறிந்து பறவைகள் மிருகங்கள் மேல் பற்றுக் கொண்ட தன் தாயாக இருக்குமோ என்ற ஆசையில் செல்வதை விவரிக்கும் இடம் மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கும். மேகாசு தன் நண்பனிடம் கொஞ்சம் விரசம் கலந்தே பேசுவான். தேனாசிரத்தாங்கல் கிராமத்தில் இவர்கள் ஆலமரத்தடி மேடையில் படுத்திருக்கும் போது அங்கே எல்லோருமே ஒருவரை ஒருவர் வயசு வித்தியாசமில்லாமல் இவ்விதமே சீண்டிக் கொள்கிறார்கள். இது கிராமங்களில் வாழ்பவர்களின் இயல்பாய் இருக்கிறது. பள்ளிக் காலத்தின் மூன்று நண்பர்களும் இணந்து இருக்கும் போது அவரவரின் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டுப் புறாவாய், கூண்டுக் கிளியாய் வளர்ந்து வந்த முருகாசுவுக்கு இப்படி ஒரு அழகான காதல் அனுபவம் உண்டு என்பது அவன் நண்பர்களை மட்டுமல்ல நம்மையுமே ஆச்சர்யப்பட வைக்கிறது. எல்லோரையும் மிஞ்சும் விதமாக நகரத்தில் ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதராக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொள்கிறார். பலவீனப்பட்ட ஒரு நொடி இவன் உள் மனதைக் காட்டி விட்டதால் அவள் கோபப்பட மனம் வெறுத்து ஊருக்கு வந்தான் முருகாசு. ஆனால் இங்கோ பேரிடி. அம்மாவை ஆறு மாதமாக காணவில்லை. அம்மா ஏன் வீட்டை விட்டு போனார்கள் . முருகாசு கண்டு பிடித்து தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று விட வேண்டும் என்று நினைத்தது நடந்த்தா. சுவாரஸ்யத்தைத் தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். நான் ரசித்த ஒரு சில வரிகள்: “ஒரு நொடியில் கிடைக்கிறது பேரன்பு. ஒரு நிமிஷத்தில் கிடைக்கிறது அன்பு. அவ்வளவு தான். ஒரு நிமிஷத்துக்கு மேல் அன்புக்கு ஆயுள் கிடையாது. (ஆணென்பதால் இப்படி உணர்ந்திருப்பாரோ. எனக்கு இதோடு உடன்பாடில்லை ஆனாலும் வரிகளின் அழகு ஈர்த்தது. “ அதீதச் சுத்தம் கொண்டிருக்கும் வீடு ஆட்களை விரட்டி விடுகிறது. சுத்தத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்று எச்சரிக்கையாய் புழங்க வேண்டி இருக்கிறது. ( வந்த விருந்தினர் போய் தெரு திரும்பு முன்னமே வீட்டைச் சுத்தம் செய்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்) “கைகளை விரித்திருந்த அவர் தலை மேல் , தோள்களில் , கைகளில், பாதங்களில் பறவைகள் அமர் இலைகளை உதிர்த்து விட்டு பறவைகள் முளைத்த மரம் அங்கே உதித்தது. தலைக்கு மேல் பறக்கும் பறவைக் காட்சியும் சேர்ந்து மரம் வானை நோக்கி உயர்ந்து உயர்ந்து சென்றது. அதிசயப் பறவை மரத்தைப் பார்த்த படி அவர்கள் உறைந்தார்கள்” ( இந்த அழகிய கற்[பனை நம்மையும் உறைய வைக்கிறது) “பொதுவாக தான் காதலித்த பெண்ணுக்கு அமையும் கணவன் கொடுமைக்காரனாக இருப்பான் என்னும் கற்பிதம் மேகாசுக்கும் வந்திருக்கும் ( யதார்த்தமான மன உணர்வுகளை கதை நெடுக சொல்லிச் செல்வது கதையின் வெற்றிக்கு காரணமாய் இருக்கலாம்)

31 July, 2024

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த உறுப்புகளின் இருப்பே நமக்குத் தெரியாது. அது செயல்படுவதில் சுணக்கம் ஏற்படும் போது தான் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே உணர்வோம். அதே போல பூமித் தாய், பொறுமையின் சிகரமாய், நாம் அவளைச் சீரழிப்பதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் போது நமக்கு அவள் அருமை தெரிவதே இல்லை. ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளை நாம் எவ்வளவு சீரழித்துக் கொண்டு இருக்கிறோம். கழிவுகளின் புகலிடமா நீர் நிலைகள். கடலினடியில் அத்தனை கழிவுப் பொருட்களின் குவியலாம். சீற்றம் கொண்ட அந்தப் பூமிப் பெண் தன் மேல் கொண்ட அருவருப்பில் தன்னைச் சுத்தம் செய்து கொள்ள வருவித்தது போல் இருக்கின்றது இந்த மழைச் சீற்றம். கண்டதையும் தின்று வயிற்றைக் கெடுத்தால் தலையில் வலி எடுக்கும். அதைப் போலவே இயற்கையும் தன்னைக் கெடுப்பவர் யார் என்று தேர்ந்து அழிப்பதில்லை. நாட்டின் சில இடங்களில் பேரழிவைப் போல சுணக்கம் ஏற்படும் போதாவது நாம் சுதாரித்து நம் தாய்க்கு செய்யும் தீங்குகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரவில் உறங்கச் சென்ற அந்த அன்பு உள்ளங்கள் நினைத்திருக்குமா நாம் அப்படியே புதைந்து போவோம் என. இவ்வளவு காலமாய் மொத்தம் மொத்தமாய் உயிர்களின் இழப்பை பார்க்காத நாம் சமீப காலமாய் அடிக்கடி எதிர் கொள்வதை உணர்கிறோமா? எனக்கு பக்தி உண்டு. அதனால் " மக்கள் மேல் உள்ள கோபம் தணிந்து இந்த பிரபஞ்சத்தை காப்பாற்று" என என் இஷ்ட தெய்வத்திடம் விடாமல் வேண்டுகிறேன். நீங்களும் உங்கள் விருப்ப தெய்வத்திடம் வேண்டுகோள் வையுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாம் ரசித்து வாழும் இந்த உலகம் அழிந்து விடக் கூடாது என்றாவது மனதார நினையுங்கள். நம் அனைவரின் நேர் மறையான எண்ணம் இந்த பூமியைக் காக்கட்டும். # thought from vaya nadu disaster 😭

25 July, 2024

நாவலின் பெயர் : கூகை ஆசிரியர் : சோ. தர்மன். காலச்சுவடு பதிப்பகம். விலை : ரூ. 175/- முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2005 கூகை என்பதற்கு இன்னொரு பெயர் கோட்டான் ( எங்க அப்பா என்னை சிறு வயதில் கோட்டான் மாதிரி முழிக்காதேன்னு திட்டினது ஞாபகம் வருது. சரியா தெரியல)இடப் பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை உடையது. ஆனால் அவசியப்பட்டால் மட்டுமே பயன்படுத்தும். கூகையைக் காண்பதையும் அதன் குரல் கேட்பதையும் பாரம்பரியமாக அபசகுனமாக கருதுவதுண்டு. கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி பலரின் குணங்களை பறவைகள் விலங்குகளுடன் ஒப்பிட்டு சமகால தலித் வாழ்க்கையை படைப்பாக்கி வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர். சோ. தர்மன் அவர்களின் முதல் நாவல் “தூர்வை” இது ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் சிறு பறவை கூட பகலில் அதை கொத்தி துன்புறுத்தும். இரவில் அருகில் அண்டாது. அந்தக் காலத்தில் பெண்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை, ஜாதிப்படியில் தாழ்த்தி வைக்கப்பட்டவர்களை என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் என்று நாவலில் வாசிக்க வாசிக்க நெஞ்சு பதறுகிறது. இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால். (ஒரு கிழ அரசன் 1700+ களில் இறத்த போது அவரோடு சதியில் இறங்கியவர்கள் 45 பெண்களாம். ) கணவனை ஏதாவது வாங்கி வரச் சொல்லி விட்டு மனைவியுடன் சல்லாபம் செய்யும் so called மேல் வர்க்கம் , அந்தப் பெண் பெற்ற பெண் குழந்தை தன் முகத்தை முட்டிகளில் புதைத்துக் கொண்டு அழும் கொடூரம். இந்த அவமானங்கள் அனைத்தும் தமக்கானதே என்று ஏற்றுக் கொள்ளும் அப்பாவி பொது ஜனம். இவர்களுக்கு நடுவில் காலம் காலமாய் தனக்கு உழைத்த அப்பாவி மக்களுக்கு தன் நிலத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு பட்டணம் போக முடிவெடுக்கும் நல்லவர் நடராஜய்யரும் அங்கே தான் வாழ்கிறார். அவருக்கு எதிராய் கிளம்பியவர்கள் அவரோடு மோதி முடியாமல் ஜமீனிடம் சென்று புகார் கொடுக்க அவர் மிகப் பெரிய வில்லனாய் முடிவு எடுக்கிறார். “நடராஜய்யர் பகிர்ந்து கொடுக்கட்டும். அவர்கள் உழைக்கட்டும். விளைவிக்கட்டும். அறுவடை மட்டும் நாம் செய்து கொள்வோம் “ என்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். அதைப் போலவே பாவப்பட்ட ஜனங்கள் பாடுபட்டு நெல் விளைந்து வரும் போது ஜமீன் தன் ஆட்களை வைத்து அறுவடை செய்கிறார். சீனிக்கிழவன் என்னும் அவர்களின் தலைவன் எவ்வளவோ முறையிட்டும் ஏதும் நடக்காததால் நடராஜய்யரின் வயலில் ரத்தம் சிந்தியது. மோதல் வலுத்துக் கொண்டே போகும் போது தாழ்ந்த இனப் பெண்களுக்கு நீர் இறைத்து ஊற்ற மேல் ஜாதி எனப்படும் பெண்கள் மறுத்ததும் தாமே கிணறு தோண்டினார்கள். கடைகளில் சாமான் தர மறுத்ததும் தாமே கடை திறந்தார்கள். ஆனால் அதைப் போல் சுளுவாக அவர்கள் செய்ய மறுத்த சாவுச் சடங்குகளை மேல் சமூகம் எனப்படுபவர்கள் தாமே செய்யத் திணறினார்கள். பேச்சி என்றொரு சிறப்பான கதா பாத்திரம். அவள் விருப்பமில்லாமலே அவளை அடைந்த காளித்தேவர் விஷயம் தெரிந்து குடும்பம் எதிர்த்ததும் பேச்சியுடனே வாழப் புறப்பட்டு போராட்ட வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போகிறார். அந்த வாழ்க்கையை பேச்சி அப்புச்சுப்பனிடம் விளக்கும் இடம் ரசிக்கத் தக்கதாய் இருக்கும். இந்தக் கதையின் சிறப்பு அதிகாரங்கள் பிரிக்காமலே மொத்தமாக எழுதி இருந்தாலும் அதன் சுவை குன்றாமல் இருப்பது தான். எந்த இடத்திலும் தயங்கி நிற்காமல் சிற்றோடை போல் செல்கிறது இந்தப் பெருங்கதை.மொத்த நாவலையும் இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். இரண்டாவது பாகத்தில் ஒரு கற்பனையான வனப் பகுதியை சித்தரித்து அதில் அரசரை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை கற்பனையை விரித்து புனைந்திருக்கிறார். ரசனை மிகுந்த பகுதி அது. ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம், ஈயம் பூசறது போல அழிந்து போன தொழில்களில் ஒன்று தங்கத் துகள் சலித்து எடுக்கும் வேலை. அதைப் பற்றி எழுதி இருக்கிறார். நகைக் கடைகள் நிறைய வந்த பின் இந்தத் தொழில் அழிந்து விட்டது. எனக்கு நினைவு இருக்கிறது. முன்பு தங்க ஆசாரிகளிடம் கொடுத்து நகை செய்யச் சொல்வார்கள். அப்பொழுது சிதறும் கண்ணுக்குத் தெரியாத மென் பொன் துகள்கள் கடைக்கு அருகில் உள்ள சாக்கடை மண் தெருமண் போன்றவற்றில் கலந்து இருக்கும். அதை பெருக்கி சேர்த்து சலித்து கிடைக்கும் தங்கத் துளிகளை ஆசாரிகளிடம் விற்பார்கள். மிகவும் கடினமான வேலை அது. இன்று வழக்கொழிந்து போய் விட்டது. கதை நெடுக பல இடங்களில் வரும் அழகு தமிழ் நடையை ரசித்தேன். உதாரணத்துக்கு ஒரு சில. ****ஒதுங்க நினைத்தாலும் உள்ளிழுக்கும் அலை. இழுப்பதும் அலை . தள்ளுவதும் அலை. அலை ஓய்ந்து குளிக்கக் காத்திருக்காது கடல் பறவை. நிலையற்ற சுழற்சியால் வதைபடும் வாழ்வு. நிலை தேடியலைந்து சிதையில் எரியும் உடல்: ***** கூகை ஒரே நொடியில் கடல் தண்ணீர் அத்தனையும் உறிஞ்சிக் கொண்டது. கடல் வற்றிய தரையிலிருந்து வெண் சங்குகள் கூட்டமாய் பறந்து வந்தன. அண்ணாந்து துப்பியது உறிஞ்சிய கடல் நீரை. பறந்து திரிந்த வெண் சங்குகளும் உதிர்ந்த அத்தனை நட்சத்திரங்களும் கொக்குக் கூட்டங்களாக மாறின. *****ஜமீன் கூப்பாடு போட்டான் கும்பிட்டே நின்ற கைகளின் முன்னால் முதன் முறையாக கும்பிட்டு நின்றான். கதை முடியும் போது அடித் தட்டு மக்கள் மீது நமக்கு இரக்கம் பிறப்பது நிச்சயம். நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவல் கூகை. ********************************************************************************************

05 July, 2024

நாவலின் பெயர் : ஆலவாயன். ஆசிரியர் : பெருமாள் முருகன் . காலச் சுவடு பதிப்பகம். விலை. : ரூபாய் 240 முதல் பதிப்பு : டிசம்பர் 2014 இவர் எழுதி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான மாதொருபாகனின் இரு வெவ்வேறு கோணங்களை அர்த்தநாரி, ஆலவாயன், என இரு நாவல்களாக உருவாக்கியுள்ளார். இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்கும். மாதொருபாகன் வாசிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரை. காளியும் பொன்னாவும் கணவன் மனைவி. அந்நியோன்னிய தம்பதி. ஆனால் குழந்தை இல்லை. பெரு நோம்பி அன்று நடக்கும் ஒரு நிகழ்வை எழுதியதால் தான் மாதொருபாகன் மாபெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . குழந்தை இல்லாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அது. கொஞ்சம் அதிர்ச்சி தரும் நிகழ்வு தான். காளிக்கு சம்மதம் என்று பொய்யைச் சொல்லி பொன்னாவின் அண்ணன் முத்து இந்த நிகழ்வுக்கு அவளை அழைத்துச் சென்று விடுகிறான். தனக்கே தனக்கென நம்பி இருக்கும் பொன்னா இன்னொருவனோடு இணைந்து விட்டதை தாங்க முடியாமல் , காளி நாண்டு கொண்டான். காளியின் அம்மா சீராயி கணவனையும் இழந்து , தன் ஒரே மகனையும் இழந்து, கண்முன்னே பிணமாய் நடமாடும் தன் மருமகளின் நிலைக்கு, தானும் ஒரு காரணமாய் ஆகிப்போன துயரத்தில் , சிறுக சிறுக செத்துக் கொண்டிருக்கிறாள். சீராயியின் மாமியார் வகையில் சொந்தமான பவுனாயிப் பாட்டி " அடிப்புள்ள பொன்னா, நம்ம உசுரு அந்த சாமி கொடுத்தது. அது அவனுக்கு வேணுங்குறப்போ அவனே எடுத்துக்குவான். வலுவந்தத்தில் போக்கிக்க நம்மளுக்கு ஆக்கின இல்லை " என்று சொல்வது தற்கொலை எண்ணம் வரும் யாரானாலும் சிந்திக்க வேண்டியது. ஆசை ஆசையாகக் காத்திருந்த நிகழ்வும் பொன்னாவுக்கு நேர்ந்து விட்டது. ஆனால் காளிதான் இல்லை. கிராமமாகவே இருந்தாலும், குழந்தை தங்கின சமயம் தகப்பன் இல்லை என்பதால் தவறாக ஒரு சொல் யாரிடம் இருந்தும் வெளிப்படாதது மகிழ்வாய் இருந்தது. பிறக்கும் முன்னே அப்பனை முழுங்கியவள்/ ன் என்று கரித்துக் கொட்டுதல் அங்கு இல்லை. பண்டிதக்காரிச்சி என்றொரு புது வார்த்தை எனக்கு அறிமுகமானது. கிராமங்களில் சவரம் செய்வதற்கென்று ஒருவர் இருப்பார். அவர் மனைவிதான் பண்டிதக்காரிச்சி. அவள் பெயர் தங்காயி. பெண் பிள்ளைகளுக்கு அவள் வைத்தியம் பார்ப்பாள். பொன்னாவின் கையை எடுத்து, நாடி பார்த்து உறுதி சொல்லி திரும்பும் போது, அங்கே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் வயதானவர்களின் கேலிப் பேச்சும், இரட்டை அர்த்த நக்கலும் அந்தக் காலப் பெண்கள் தங்கள் மன உளைச்சலை இப்படித்தானே தணித்துக் கொண்டார்கள் என்று தோன்றியது. அருவருக்க வைக்காத மெல்லிய நகைச்சுவை. தொரட்டுப்பாட்டி" ஊருக்கு சொல்லியிருங்காயா" என்று நமக்கு ஊர் வழக்கத்தை புரிய வைக்கிறார். கணவன் இறந்த நேரம் மனைவி குழந்தை உண்டாகி இருந்தால் வீட்டுப் பெரியவர்களை வைத்து அறிவித்து விடுவார்கள். இல்லை என்றால் குழந்தை பிறந்ததும் தாயை ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள் . ரொம்ப காலமாக இந்நிகழ்ச்சி ஊருக்குள் நடக்காமல் இருந்ததால் எல்லோரும் மறந்து இருந்த விஷயத்தைப் பாட்டி நினைவூட்டுகிறார்கள் . செங்கான் என்னும் பாத்திரத்தின் மூலம் பொன்னாவுக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை, தளர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆனது . " இப்படி எந்திரிச்சு வந்து காட்டு காரியத்தை பாராயா. எல்லா கஷ்டமும் பால மரத்து பஞ்சாட்டம் பறந்து போயிடும்.." சிறந்த எழுத்தாளர்கள் தம் கதைப் பாத்திரங்கள் மூலம் நல்ல கருத்துக்களை விதைத்து கொண்டே இருக்க வேண்டும் . இந்த கதையிலும் ஒரு controversial character உண்டு. திருமணம் ஆகாத, ஆனால் பெண் பலவீனம் உள்ள, தன் அண்ணனின் சொத்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக, தன் மனைவியையே அண்ணனிடம் அனுப்பி வைக்கும் தம்பி. ஆனால் தன்னை மதிக்காத கணவனை விட அவருடைய அண்ணன் எவ்வளவோ மேல் என்று தம்பி மனைவி முடிவு எடுக்கும் போது அவளுக்கு குடும்பத்தார் இழைக்கும் கொடுமை பரிதாபத்தை வரவழைக்கும். அண்ணன் பெயர் நல்லான். அவர் தன்னை " போற இடத்துல எர பொறுக்கிக்கிட்டு, கிடைச்ச இடத்தில தண்ணி குடிச்சிட்டு இருக்கிற புத்தி. அதனால எனக்கு குடும்பம் எல்லாம் ஒத்து வராது" என்கிறார். கதையின் முடிவு நாவலின் பெயருக்கான காரணம் வரும் பகுதி நெஞ்சோடு உறைந்து போகும் . இதை முடித்த கையோடு அர்த்தநாரி வாசிக்கும் ஆவலும் எழுந்தது.

25 June, 2024

நான் சொல்ல வருவதை நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சாதாரணர் கூட பிரபலமே. ஒரு அகால மரணம். கட்டடத்தில் தீப்பிடித்து கருகிப் போய் மரணித்த உடல் நாடு கடந்து வரும் போது அங்கு உறவுகளின் துயரம் எந்நிலையில் இருக்கும். அங்கே போய் ஆளாளுக்கு வீடியோ எடுக்கிறீர்களே!! அங்கு துயரத்தின் உச்சத்தில் முகம் கோணி அழுவது படமாகும். பெண் பிள்ளைகளின் உடைகள் விலகலாம். செய்திக்கு பசித்திருக்கும் பலர் ஆர்வக் கோளாறால் படம் எடுத்து வெளியிடுவது குடும்பத்தினரின் துயரை அதிகரிக்காதா? இதில் கண்டபடி விமர்சனம் வேறு. சிலரின் வழக்கப்படி இறந்தவரின் மனைவிக்கு பூ வைத்து கண்ணாடி வளையல் போட்டு அருகில் அமர்த்தி வைத்திருப்பார்கள். இதற்கொரு விமர்சனம். கணவனைப் பறி கொடுத்தவளின் அலங்காரத்தைப் பாருங்கள் என்று. பணம் சம்பாதிக்கத் தானே வெளிநாடு போனீர்களென்று ஒரு சிலரின் கேள்வி. ஏன் அவரவர் நாட்டிலேயே இருந்தால் விபத்து நடப்பதில்லையா?? "வாரேன் வாரேன்னு சொன்னியே இப்படி வந்திட்டியே" என்று இறந்த மகனின் உடலைப் பார்த்து ஒரு தாயின் கதறல். "அப்பா பார்சல் அனுப்பறேன்னு சொல்லிட்டு நீயே பார்சலா வந்து இருக்கியே" என்று ஒரு மகளின் அலறல். கிடைத்த இடைவெளியில் தன் கணவனின் முகத்தை அடையாளம் கண்டு " பார்த்திட்டேன். நான் பார்த்திட்டேன். அவர் தான்" என்றொரு மனைவியின் ஓலம். துயரமனைத்தையும் ஆழ அழுத்தி சத்தமில்லாமல் கண்ணீர் விட்டு ஆண் உறவுகளின், நட்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நகர்வு. இத்தனையும் கலங்க வைக்காமல் எதிர் மறை விமர்சனத்தை தூவி விட்டு அடுத்த பதிவை நோக்கி நகரும் அறிவிலிக் கூட்டம். மாறுங்க மக்களே!!

24 June, 2024

சாகித்ய அகடமியின் “இந்திய இலக்கிய சிற்பிகள்”வரிசையில் கு.ப.ராஜ கோபாலனைப் பற்றி இரா. மோகன் எழுதிய புத்தகம். விலை ரூ 50/- தி. ஜானகிராமன் கு.ப.ரா பற்றி இப்படிச் சொல்கிறார். “ நல்ல சிவப்பு. குள்ளம், மெலிந்த பூஞ்சை உடல், பூ மாதிரி இருப்பார். சாப்பாடு கூட கொறிப்புத் தான்.. பல பெரியவர்களுக்கு கிடைக்கக் கூடிய தனிப்பட்ட முக அமைப்பு. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்குத் தடிக் கண்ணாடி. சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். “ இதை வாசித்து முடிக்கும் போது கு.ப..ரா நம் உள்ளத்தில் ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார். கு.ப்.ராவையும் ந. பிச்ச மூர்த்தியையும் இரட்டையர்கள் என்று குறிப்பிடுவார்களாம். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். கு.ப்.ரா வானொலியில் சில சொற் பொழிவுகளும் நிகழ்த்தினார். இறுதி வரை தன் எழுத்தையே நம்பி வாழ்வது என்று முடிவு செய்து வானொலி வேலையையும் விட்டு விட்டார். இவரது 42 ஆவது வயதில் காலின் சதைகள் உயிரர்றுப் போய் இரண்டு கால்களையும் எடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது தடுத்து ஒரு தம்ளர் காவேரி தீர்த்தம் வாங்கிக் குடித்து 27.4.1944 இல் அமைதியாக உயிர் துறந்தார். 1933 இலிருந்து 1944 வரை மட்டுமே பதினொரு ஆண்டுகள் எழுத்துலகில் இயங்கி இருக்கிறார். இரண்டு நாவல்கள் எழுத முயற்சித்து முற்றுப் பெறாமலே இறந்து விட்டார். இவர் எழுதிய யவ்வனக் கலக்கம் என்னும் நாவலில் தமக்கு முன் வாழ்ந்த சமுதாயம் மூன்றையும் இந்நாவலில் காட்டி உள்ளார். கு.ப..ரா படைத்துள்ள பெண்கள் எதற்கும் தயங்காமல் யாருக்கும் அஞ்சாமல் தம் உள்ளத்து உணர்வுகளை வெளியிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். கனகாம்பரம் என்னும் கதையில் கணவன் வீட்டுக்கு வந்த மனைவியின் தோழியைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்ததை குத்திக் காட்டும் வகையில் “ என் தோழி என்னிடம் கேட்டே விட்டாள். உன் ஆம்படடயான் என்ன அப்படி வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறார்னு “ என்று மனைவி கேட்பதாக எழுதி இருக்கிறார். இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதில் உண்மையான அக்கரை கொண்டவர். அவர்கள் எழுதியதை படித்துத் திருத்தி இப்படி எழுத வேண்டும் என்று வழி காட்டியவர். எங்கு நல்ல எழுத்தைக் கண்டாலும் பொறாமையோ இதனால் என்ன விளையுமோ என்று எண்ணாமல் பாராட்டுவார்.. இது தமிழில் மற்றவர்களிடம் இல்லாத குணம் என்று க.நா.சு பாராட்டுகிறார். கு.ப.ரா தன் வாழ்விலும் சரி எழுத்திலும் சரி வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி மனோரத சூரியனிடம் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடனே இயங்கினார். ஒரு பிரமாதமான விஷயத்தை இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். “ உண்மைக் கலைஞனுக்கும் வறுமைக்கும் இடையே நிகழும் போரில் இறுதியில் தோற்பது வறுமை தான். ஏனெனில் வறுமை கலைஞனின் மறைவோடு செத்தொழிகிறது. இல்லாமல் போகிறது. கலைஞனோ தன் உயர்ந்த எழுத்தால் என்றென்றும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இரவீந்திர நாத் டாகுர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டவர் கு.ப.ரா “ தவசிகள் சந்ததியின் தவத் தோன்றல்” என்றும் டாகுர் முனிவர் என்றும் அத்வைதத்தின் அடிப்படையே உருண்டு திரண்டு உருப் பெற்றவர்” என்றும் புகழ்கின்றார். கவிதையின் மேல் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவரைப் பொறுத்த வரையில் கவிதை எழுதுவது என்பது யோகத்தில் ஈடுபடுவதற்கு சமம். கவிதையின் சன்னிதானத்தில் கு.ப.ரா காவலனாய் பணியாற்ற விரும்பினார். ஆனால் கவிதைப் பெண்ணோ அவரை தன் காதலனாகவே ஆக்கிக் கொண்டாள்.. சிறுகதை உலகில் இருப்பது போலவே அவருக்கு கவிதை உலகிலும் ஒரு சிறந்த இடம் உண்டு. பல வகையான பரிணாமங்களும் பரிமாணங்களும் கொண்ட மகா கவி பாரதியை ஒரு சிறு முத்திரை குத்தி புத்தக அலமாரியில் வைத்து விட்டது திறனாய்வாளர்கள் செய்த தவறு என்பதை கு.ப.ரா சுட்டிக் காட்டினார். திக்குகளையே எல்லையாகக் கொண்ட ஆகாய விமானமும் கடலைக் களமாகக் கொண்ட கப்பலும் நிலப்பரப்பையே அளந்து விட்ட ரயிலும் தேசிய சுவர்களை இடித்துத் தள்ளி விட்ட இந்த பொழுதில் கு.ப.ரா உலக சாம்ராஜ்ஜியம் என்ற அரசியல் திட்டம் குறித்து விளக்குகிறார். புதுத் தமிழ் இலக்கியத்தில் கு.ப்.ரா என்றும் மணம் மிகுந்த மலராக நினைவு கூறப் படுவார் என்பதில் ஐயமில்லை.

 நாவலின் பெயர் : நெஞ்சறுப்பு. ஆசிரியர்     : இமயம்

 க்ரியா பதிப்பகம் .

விலை.       :  ரூ275 

முதல் பதிப்பு. :  ஜனவரி 2024 

கதை தன்னிலையில் ஒரு ஆண் சொல்வது போல் இருக்கிறது.  அவர் மனைவி பெயர் காமாட்சி . ஒரு நாள் அவரிடம் தான் கேட்பதற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறார்  காமாட்சி. என்ன கேட்க போகிறாளோ என்று நினைக்கும் போதே. "சசிகலாங்கிறது  யாரு? "  என்கிறாள். " கதக்"  என்று ஆகிறது இவருக்கு . சமாளிக்க முயலும் போதே சாட்சியத்தை அவர் முன் வைக்கிறாள் . ஒரு நோட்டில்,  என்று மெசேஜ் வந்தது , என்று போன் வந்தது,  என்றெல்லாம் இவர் அழைத்திருக்கிறார் , எவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் , என அத்தனை தகவலும் குறிக்கப்பட்டிருந்தது .

 திட்டுறது அடிக்கிறது எல்லாம் கோவத்துல சட்டுனு செய்றது . ஆனா ஏமாத்துறது திட்டம் போட்டு,  நல்லா யோசித்து,  சந்தர்ப்பம் பார்த்து செய்றது . புரியுதா ?" என தலையில் அடிப்பது போல் கேட்கிறாள்.  

காமாட்சியும் கல்லூரி பேராசிரியை என்றாலும் இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து,  அவள் கணவனையும் சசிகலாவையும் திட்டுவது ஒரு படித்த பெண் போலவே இருக்காது.  இன்று ஆணானாலும் பெண்ணானாலும் அவர்கள் சம்பந்தப்படாமல் இருந்தால் கூட அவர்கள் குடும்பத்தில் ஒருவரால் குழப்பத்தை உண்டாக்க முடியும்.  இன்று விவாகரத்துகள் அதிகரித்ததற்கு பல காரணங்கள் சொல்கிறோம்.  இணையம் ஒரு முக்கியமான காரணம் . 

காமாட்சி ஒரு கல்லூரி பேராசிரியை. தன் கணவனை மாமானு கூப்பிட்டது கிடையாது . அதனாலேயே சசிகலா வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றதும் அவரை நெருங்க காரணமாகி போனது . ரொம்ப நெருங்கினதும் செல்லமாக "கிழவா, கிழவா " என்பாள் . அது அவரை உயிர் நிலையில் உதைத்தது போல் இருக்கிறது. 

 சந்தேகம் என்பது இருபுறம் கூர்மையான கத்தி போன்றது.  காமாட்சி அதனால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டு , மறுபுறம் தன் கணவனான ஸ்ரீரங்க பெருமாளையும்  குதறி எடுக்கிறார். 

 கத்தியில் முளைத்த மூன்றாவது திசையாக சசிகலாவும் அவர்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை கூட்டிக் கொண்டே போகிறாள்.

விரக்தியின் எல்லையில் சொல்வார் "உலகத்திலேயே பெரிய கொடுமை,  நாடு கடத்துவதோ , தூக்கில் போடுவதோ இல்லை . புருஷனும் பொண்டாட்டியும் ஒரே இடத்தில் வேலை செய்வது தான் " இதை எத்தனை பேர் ஒத்துக்குவீங்க. 

  வளர்ந்த குழந்தைகளுக்கு முன்னால் தன்னை  மாமியார் கேள்வி கேட்டு மிரட்டும் போது , தன் தாயின் முன்னால் காமாட்சி தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குதறிய போதும்,  தான் போனில் பேசியது தவிர பெருசாய் என்ன செய்து விட்டோம் என்று நெஞ்சை  சமாதானப் படுத்தும்  நல்லவர் படும் பாடு அந்தோ பரிதாபம்தான். 

 பழைய காலமா இருந்தா நான் லெட்டர் போட்டு சசிகலா லெட்டர் போட்டுன்னு விஷயம் கொஞ்சம் இழுத்திருக்கும்.  இவ்வளவு வேகமா சேர்ந்து இருக்கவும் முடியாது.  பிரிஞ்சிருக்கவும் முடியாது.  செல்போன் வந்து காலத்தை,  தூரத்தை இல்லாமல் ஆக்கிடுச்சு.  இதுதான் இன்றைய எதார்த்தம். 

 கதையை வாசிக்கும் போது சசிகலா ஏன் விடாது தொந்தரவு கொடுக்கிறாள் என்று தோன்றினாலும்,  ஒரு இடத்தில் என் மனம் மாறினது,  மூணு நாலு மாசத்துல நானும் அவளும் ஏழு கடல் அளவு , ஏழுமலை அளவு பேசி இருப்போம் . எனக்கு எப்போ ஃப்ரீ பீரியட் என்கிறது கூட அவளுக்குத் தெரியும் . இந்த இடத்தில் தான் ஒரு பெண்  ஏமாந்து போகிறாள் . ஆண் கொடுக்கும் முக்கியத்துவம் காலா காலத்துக்குமானது என நம்புகிறாள்.  ஆனால் ஆணுக்கு பிரச்சனை வரும் வரை இருக்கும் ஜோர்,  அதன் பின் இருப்பதில்லை.  அதுவரை தேவதையாய் தெரிபவள்,  பிரச்சனைக்கு பின் பிசாசாக தெரிகிறார். அதனாலயே பிரிவு பெண் அளவுக்கு ஆணை வாட்டுவதில்லை. " என்கூட படுத்துக்கிட்டே அவ கூட பேசிகிட்டு இருக்கீங்களா " என்று காமாட்சி கேட்பது தன் கணவனிடம் மட்டுமல்ல,  இன்று பலரையும் நோக்கி , ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி. 

எனக்கு ஒரே ஒரு  விஷயம் தான் தோன்றியது.  போலீஸ் அதிகாரி "காற்று ஒருவருக்கு மட்டுமா வீசுது. அதெல்லாம் சுலபமா சரி பண்ணிடலாம் " என்று சொல்கிறார். அந்த அளவுக்கு சசிகலாவை கதையில் காட்டாததால் என் சார்பு சசிகலா பக்கமே சார்ந்தது. 

 சில விஷயங்களை பெரிது படுத்தாமல் விட்டால் நாளடைவில் அடுத்தவர் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடும். காமாட்சியும் அவளைச் சார்ந்தவர்களும் பெரிதுபடுத்தி விட்டார்களோன்னும் தோணுச்சு.

 இன்றைய சூழலில் கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு கருவை கதையாக்கி இருக்கிறார் இமயம்.  இதுவரை வந்த இவரது எல்லா நாவல்களிலும் இது வேறுபட்டது.

21 May, 2024

 அதிர வைத்த மரணம்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை அத்தனை பேர் கையிலும் செல் இருக்கிறது. அன்று பாப்பாக்கள் சோறு உண்ண நிலவைக் காட்டினோம் . இன்று அந்ம நிலவைக் கூட  செல்லில்  காட்டுகிறோம். அதிலும் மற்ற எல்லாவற்றையும் விட அதற்குப் பிடித்தது ரீல்ஸ் தான். 

என்ன நடந்தாலும் கை , உதவ உயர்வதற்கு முன்,  படம் பிடிக்கத் தான் உயர்கிறது. முதலில் படம் பிடிப்பவர் தனக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்தாலும் சில வீடியோக்கள் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுகின்றன. 

அப்படிப் பரவிய ஒரு வீடியோ தான் ஒரு தாய் தவற விட்ட  குழந்தையை மீட்ட வீடியோ.  

 எவ்வளவு நேரம் அந்த குழந்தை தனக்குக் கிடைத்த பிடியை பிடித்துக் கொண்டிருந்ததோ? அதற்கு ஆயுசு கெட்டி தான் காப்பாற்றப்பட்டு விட்டது. ஆனால் அதைக் காக்க வேண்டிய தாய் தற்கொலை செய்து இறந்து போனதாகச் செய்தி.

 காரணம் :  இந்த செய்திக்கு சோஷியல் மீடியாவில்  வந்த எதிர்வினையாக இருக்கலாம். இல்லை வீட்டில் உள்ளவர்களின் எதிர்வினையாக இருக்கலாம். இல்லை தனக்குத் தானே இப்படிக் குழந்தையை விட்டு விட்டோமே காப்பாற்ற முடியாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் என திரும்பத் திரும்ப நினைத்துப்  பார்த்து தன் மீதே ஏற்பட்ட கோபம் காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு உயிர் பறந்து விட்டது. இனி அந்த குழந்தை, பெற்ற தாய் இல்லாத குழந்தை. 

பல செய்திகள் செல்லில் வேகமாய் பரவுகின்றன. அதற்கு கமென்ட் பண்ணும் போது நாகரீகமாகச் செய்வோம். நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டாம். உடனே நாம் ஏதோ தவறே செய்யாத  உத்தமர் வேடம் தரித்துக் கொள்ள வேண்டாம். நமது கமென்ட்டுகள் ஒரு உயிரை எடுக்கும் வலிமை வாய்ந்தது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்ம இறப்பு செய்தி எனக்குச் சொன்னது இது தான்.

20 May, 2024

 பக்கத்து காலி ப்ளாட்டில் அடிக்கும் வெயில் அப்படியே வீட்டுக்குள் கடத்தப்பட அதைக் குறைக்கும் எண்ணத்தோடு ஜன்னலை ஒட்டி  வளர்க்கப்பட்ட வாதாம் மரம் இன்று வளர்ந்து படர்ந்து, குடை போல் விரிந்து பரப்பிய நிழலில்,  அடர் கருப்பு நிறத்தொரு பசு படுத்துக் கொண்டிருந்தது. 


அது எழுந்து நின்ற போது தான் தெரிந்தது அது வயிற்றில் கன்றின் சுமை தாளாது தான் படுத்துக் கிடந்திருக்கிறது. வலியில் கால் மாற்றி கால்  தடம் பதிக்கவில்லை. "அம்மா"  என்றொரு அலறல் இல்லை. அமைதியாக நின்றிருந்தது. 

கொஞ்ச நேரம் காத்து நின்று படுக்கச் சென்ற நான் விடிகாலை எழுந்ததும்  அதைத் தேடிச் சென்றேன். மடியின் பாரம் இறக்கி,  அங்கே மின்சாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் போட்டிருந்த கிளைகளில் இருந்து இலை தழைகளை தின்று கொண்டு இருந்தது. கன்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது. 

இவ்வளவு பாரமா சுமந்து கொண்டிருந்தாய்?? ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் எப்படி பெற்றெடுத்தாய்?? இந்தப் பசுவுக்கு உடைமைக்காரர்கள் என்ன இப்படி தேடாமல் இருக்கிறார்கள் என பலவிதமாக  வியந்து கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை பார்த்து வந்தேன். 

அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. என் பள்ளிக் காலங்களில் ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள மரத்தில் ஓலைப் பெட்டியில் கட்டி அங்கங்கே தொங்கிக் கொண்டிருக்கும். கன்று ஈனும் பசு வெளியே தள்ளும் கழிவுகள் தான் அது. அதைக் கவனிக்கவில்லை என்றால் பசு தின்று விடும். ஆபத்து . அதனால் அதை ஓலைப் பெட்டியில் வைத்து ஒதுக்குப் புறமாய் உள்ள மரத்தில் கட்டி விடுவார்கள் என்று வளர்ந்த பின் புரிந்து கொண்டிருந்திருக்கிறேன். 

இந்த பசு ஈன்ற இடத்தில் அப்படி ஏதும் இல்லையே?? பசுவுக்கு ஏதும் ஆகி விடுமா?? என் கவலைகளுக்கு நடுவே உடைமைக்காரர்கள் தகவல் கிடைத்து வந்து விட்டார்கள். வந்து ஓய்ந்து கிடந்த கன்றைத் தூக்கி பைக்கின் முன் பகுதியில் வைத்து லேசாக நகரத் தொடங்கியதும் அந்த கரிய நிறப் அம்மாப் பசு "அம்மா" என்று சத்தமிட்ட படி அந்த பைக்கை தொடர்ந்து தன் கனத்த மடி அசைய ஓடத் தொடங்கியது. 

தாய்மை. ஐந்தறிவு உடைய மிருகங்களிடமே தானாய் கனியும் போது, 

இயற்கையான ஒன்றிற்கு

நாம் , பெண்கள்  பெருமைப்பட எதுவுமே இல்லை என்று தோன்றியது.

21 April, 2024

 அமேசான் ப்ரைமில் JBABY என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இயக்குநர் சுரேஷ் மாரி. முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன். தயாரிப்பு பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர். OTT வந்த பிறகு நல்ல நல்ல கருத்துகளில் படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது  அதிகரித்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. இது பாராட்டுக்குரியது

இசை டோனி பிரிட்டோ. ப்ரதீப் குமார் அன்னி  ஜே பாடிய "நெடுமரம் தொலைந்ததே" என்னும் இப் படப் பாடல் அன்னையர் தினத்தை ஒட்டி வெளியிடப் பட்டு இருக்கிறது. சூப்பர் மெலடி. 

மனித மனம் என்பது கண்ணாடி போன்றது. அது Glass, Handle with care என்று அறிவுறுத்த எடுத்த படம் போல் உள்ளது.

JBABY ஆக ஊர்வசி . இது அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரம் என்பதால் ஜொலிக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் பெற்ற தாய்,  கணவனையும் இழந்த நிலையில் , வாழ்க்கையின் வலிகளை தாங்க முடியாத ஒரு கட்டத்தில் புத்தி பேதலித்து , பல செயல்களைச் செய்து விடுகிறார். 

கதவிலேயே பூட்டு மாட்டி இருந்தால் அடுத்த வீடுகளில் இருப்பவர்களை உள்ளேயே வைத்து பூட்டி சாவியை எடுத்து வந்து விடுவது, வீட்டில் உள்ள சின்ன சின்ன நகைகளை கொண்டு போய் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக கொடுத்து விடுவது, பிற வீடுகளின் லெட்டர் பாக்சில் உள்ள கடிதங்களை எடுத்து வந்து விடுவது, பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளும் போது நான் ஸ்டாலினின் தோழி, ஜெயலலிதாவின் தோழி என புருடா  அடித்து விடுவது என ரகளை  பண்ணி வரும் ஒரு முதிய பெண் கோபத்தில் வீட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். அவர் கல்கத்தாவில் இருப்பதாக அதிகார பூர்வ தகவல் கிடைத்து போய் அழைத்து வருவதற்குள் அந்த நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகள் படும் துயரம் நம்மை நெகிழ வைத்து விடுகிறது. 

பொதுவாகவே வயதானவர்களை பெண் பிள்ளைகள் அளவு ஆண் பிள்ளைகள் கவனித்துக் கொள்வதில்லை என்ற கருத்தை இந்த படத்தில் முறித்திருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளுமே அம்மா மேல் அனுசரணையோடு தான் இருக்கிறார்கள். 

சில இடங்களில் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார் இயக்குநர். உதாரணமாக அம்மா மேல் கோபத்தில் கை ஓங்கி விடும் தினேஷ் அம்மா திரும்பி வந்ததும் 

 சாப்பிடச் சொன்னதும் , அம்மா முதல் வாயை மகனுக்கு ஊட்டி விட,  அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " ஏம்மா என்னை பாவம் பண்ண வைக்கிற " என்று தினேஷ் கண் கலங்குவதும். அதற்கு அம்மா "நீ ஏன்ப்பா அழுற நானா உன்னை அடிச்சேன். நீ தான என்னை அடிச்ச" என்று கேட்கும் போது நாமும் பதறி விடுகிறோம். 

ஒரு விஷயம் எனக்கு நெருடலாய் இருந்தது. வயதின் முதிர்ச்சியும் பிரச்னைகளின் அழுத்தமும் காரணமாகி வரும் மெல்லிய மன நோயை குணப்படுத்த வைத்திருக்கும் மருத்துவமனையில்  உள்ள நோயாளிகள் எல்லாம் முற்றிய மன நோய் உடையவர்களாகக் காண்பித்திருப்பது தான் அந்த நெருடல். 

தந்தை இல்லாத தினேஷ் தன் குடிகார அண்ணனிடம் "வாப்பா போப்பா" என்று பேசுவது அவ்வளவு பாந்தமாக இருக்கிறது.

இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் எடுத்த படம் என்கிறார்கள் முடிவில். அது மட்டுமல்லாது கல்கத்தாவிற்கு போய் விட்ட பேபி அம்மாவை கண்டு பிடிக்க உதவும் எக்ஸ் மிலிட்டரி மேன் பாத்திரத்தில் நிஜத்தில் உதவியவரையே நடிக்க வைத்திருக்கிறார்கள்.

நம்மை பெற்றவர்களை இறந்த பிறகு அப்படி கவனிச்சிருக்கணும் இப்படி கவனிச்சிருக்கணும்னு சொல்வதை விட்டு  இருக்கும் போதே நல்லா பார்த்துக்கணும்னு நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல படம். Don't miss it.

20 March, 2024

 எனக்கு பிடித்த இன்னொரு படம் "ஆட்டம்"  மலையாளம்.

இயக்குநர் : ஆனந்த் ஏகர்ஷி ( இது இயக்குநரின் முதல் படம் என்று சொல்கிறார்கள்)
முக்கிய கதாபாத்திரத்தில் :  வினய் ஃபோர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப்

முதல் படத்திலேயே கை தட்டல் வாங்கி விடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவு ஒரு தேர்ந்த இயக்குநரின் அனுபவத்தை சொல்கிறது.

ஒரு டிராமா குரூப். அத்தனை ஆண் நடிகர்களுடன் ஒரே ஒரு பெண் ( அஞ்சலி)  நடிக்கிறார். எந்த வித ஆண்,  பெண் பாகுபாடும் இன்றி பழகுகிறார். அதில் பள்ளியிலிருந்தே உடன் படித்த ஒரு நண்பர்( வினீத்)  இருக்கிறார். அவரோடு ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறார் அஞ்சலி . ஆனால் வினய் திருமணமானவர். மனைவி உடனான விவாகரத்து வழக்கு முடிவடையாத நிலையில் அந்த நட்பு வெளியே தெரிய வேண்டாம் என நினைக்கிறார். 

நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினய் புதிதாக நடிக்க வந்த ஹரியால் பின்னுக்கு தள்ளப்படுகிறார். ஹரி சினிமாவில் நடித்திருப்பதால் கூடுதல் கவர்ச்சி. ஹரியின் வெளிநாட்டு நண்பர்கள் நாடகம் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு ரிசார்ட்டில் பார்ட்டி கொடுக்கிறார்கள்.
அந்த பார்ட்டியில் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் குடிக்கிறார்கள். ( மலையாளப் படத்தில் குடிப்பது என்பது தவறாமல் இடம் பெறுவதில் எனக்கும் உடன்பாடில்லை)

 படுக்கப் போன பிறகு அஞ்சலிக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதை தன் காதலன் வினய்யிடம் மட்டும் சொல்லி பிறருக்குத் தெரியாமல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அவரும் குழுவின் சீனியரிடம் அஞ்சலியே சொன்னதாக சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். அங்கே தொடங்குது முதல் பொய்.

குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப் படும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அஜென்டா. ஒரு பெண்ணின் மன உணர்வுகளுக்கு அங்கே இடமே இல்லை. மொத்த குழுவாக விவாதித்தாலும் ஒத்த கருத்துள்ள இருவர் மூவராக தனியாகவும் விவாதிக்கிறார்கள்.  எல்லோர் சொல்லும் கருத்துக்கும் பின்னால் அவர்களுக்கான சுயநலம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திய காட்சிகள். 

சில பல காரணங்களைச் சொல்லி மேலும் மேலும் பொய் சொல்ல வினய் அழுத்தம் கொடுக்கும் போது அஞ்சலி என்ன முடிவெடுக்கிறாள். யார் அந்த தவறைச் செய்தவர்கள். தண்டனை பெற்றார்களா என்பதை அறிய அமேசான் ப்ரைமில் "ஆட்டம்" மலையாளப் படம் பாருங்கள்

05 February, 2024

அமுதென்பதா? விஷமென்பதா? அமுத விஷமென்பதா? எதை? நம் அஞ்சரைப் பெட்டியை. கொஞ்சம் நான் எண்ணுவதை சொல்கிறேன் கேளுங்கள். பின் சரியா தவறா என்பதை "நீங்கள் " சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன். என் தோழி ஒருவர் தினம் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் நாலு மிளகை வாயில் போட்டு மெல்லுவேன் என்று சொல்வார்கள். அது எதற்கு நல்லது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கிறேன். பல வெளி நாட்டினருக்கு இல்லாத, வெளி மாநிலத்தினருக்கு இல்லாத ஒரு அனுகூலம் நம் அஞ்சரைப் பெட்டி. கொரோனா வரும் வரை கிராம்பிலும் பட்டையிலும் உள்ள மருத்துவக் குணங்கள் வெளியே பலரும் அறியாத விஷயமாகத் தான் இருந்தது. பல புரதச் சத்துக்களும் தேவையான விட்டமின்களும் நிறைந்தது நம் உணவு. ஆனால் எது எவற்றுடன் எவ்வளவு சேர வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அது மாறும் போது தான் அமுதம் விஷமாகிப் போகும். புளியைக் கெட்டியாக கரைத்து அதை நிகர் செய்ய உப்பை அள்ளிப் போட்டு, உரைப்பு தூக்கலாக தெரிய வற்றலையும் அதிகம் சேர்த்து இவை அத்தனையையும் சரி செய்ய எண்ணையையும் கோரி ஊற்றி நாம் ஒரு சமையல் செய்தால் அது அமுதமா? விஷமா? நாக்குக்கு ருசிஆகவே இருந்தாலும் நாம ஒரு பிடி விஷத்தை கூடுதலாக உண்போமா? . வெறும் பச்சை மிளகாயையும் உப்பையும் அரைத்து தொட்டுக் கொண்டு ருசிக்காக உண்டவர்கள் காலப் போக்கில் கும்பியும் குடலும் புண்ணாகி உப்பு சப்பற்ற உணவை உண்டது எனக்குத் தெரியும். பொரியல் கூட்டு வகையறா எங்களுக்கு பிடிக்காது ஃப்ரை ஐட்டம் தான் செய்வோம் என்பவர்கள் நாளானால் எண்ணெயே இல்லாமல் சமைக்க நேருகிறது. நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும் . ஒரு குடும்பத்தின் அத்தனை பேரின் உடல் நலம் அந்த வீட்டின் சமையலறை யார் பொறுப்பில் இருக்கிறதோ அவர்கள் கையில் இருக்கிறது. பல வீடுகளில் வீட்டுப்பெண்களின் கையில் , சில வீடுகளில் வீட்டு ஆண்களின் கையில். இன்னும் சில வீடுகளில் சமையல்கார பெண்மணிகளின் கையில். அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டவர்களுக்கு அந்த வீட்டில் உள்ள அத்தனை பேர் உடல் நலமும் கவனத்தில் இருக்க வேண்டும். சமையல் வேலை செய்பவர்களுக்கு இருக்குமா? அதனால் தான் நான் வலியுறுத்தி சொல்வது சமையல் பொறுப்பை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என்று. இதைச் சொல்ல எனக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. என் அம்மா வீட்டில் சேர்ந்திருந்த காலம் தவிர 44 ஆண்டுகளை நெருங்கும் என் திருமண வாழ்வில் நான் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டதே இல்லை. இதனால் நான் சொல்ல வருவது, இத்தகைய அபூர்வ அமிர்த சுரபியாக இருக்கும் நம் அஞ்சரைப் பெட்டியை, சரியாகப் பயன்படுத்தி நம் உடல் நலம் காப்போம். இன்று அத்தியாவசிய தேவை உயிர் வாழ்பவர் அத்தனை பேருக்கும் பணமாக இருந்தாலும் அதை தொட்டு அடுத்து close range ல் வருவது ஆரோக்கியமும் தான். பின் குறிப்பு: என் வீட்டில் உள்ளவர்கள் நீ ரொம்ப health conscience ஆ ஆகிட்ட. எப்போ பார்த்தாலும் உடல் நலம் பற்றியே பேசிக்கிட்டு இருக்கிற என்கிறார்கள். நான் மட்டுமா நண்பர்களே!!

04 January, 2024

அண்ணன் சப்தரிஷி எழுதிய பதிவு இதை எழுதத் தூண்டியது. பல வருடங்களுக்கு முன் , எனது 30+ வயதில் நடந்த நிகழ்வு. நாங்கள் அப்போ ஈரோடில் குடியிருந்தோம். இரவில் நானும் என் கணவரும் கடைக்குப் போய் விட்டு நடந்து வரும் போது ஒரு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என்னை ஒட்டிய படி நடந்து வந்தாள். மெலிந்த உருவம். சோர்ந்த முகம். வழக்கமான முன்னெச்செரிக்கை உணர்வோடு என் கைப்பையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். எங்க வீட்டுக்குப் பக்கம் வரும் போது தான் கவனித்தேன் எங்களுக்கு இணையாக தெருவின் அடுத்த பக்கத்தில் ஒரு இளைஞன் வருவதை. அந்த பெண்ணை நிறுத்தி "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று நான் கேட்பதை பார்த்தும் இளைஞன் வேகமாக நகர்ந்து விட்டான். அந்த பெண் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கிருந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு அம்மா கூட்டி வந்தாங்க. ஈரோடு பஸ் ஸ்டான்டில் இந்தா வந்திடுறேன்னு சொல்லி "உன் பையை நான் பத்திரமா வச்சிருப்பேன்" னு சொல்லி வாங்கிட்டு போனாங்க. திரும்பி வரவே இல்லை. காலையில இருந்து இந்த பையன் என்னை சுத்தி சுத்தி வர்ரான். தப்பான காரியத்துக்கு அழைக்கிறான். நான் மறுத்தாலும் என்னை விட்டு போகல. இப்போ நீங்க பேசினதைப் பார்த்து தான் போறான்" என்றாள். பணம் கொடுத்தால் ஊருக்கு போய் விடுவதாக சொன்னாள். நான் அப்போ இருந்தது. இரண்ட்டுக்கு மாடி வீடு.படத்தில் இருக்கும் வீடு தான். அப்போ சிறு நகரங்களில் அபார்ட்மென்ட் வராத காலத்திலேயே ஈரோடில் இது இருந்தது. மொத்தம் 36 வீடுகள். நிறைய பேர் வந்து ஆள் ஆளாளுக்கு விசாரித்து மணி ஒன்பதாகி விட்டது. ஆளுக்கொரு யோசனை. 1) கொண்டு போலீஸ் ஸ்டேஷன்ல விட்டிடுங்க. 2) பணத்தைக் கொடுத்து ஊருக்குப் போக சொல்லுங்க. 3) இந்த காலத்தில யாரை நம்ப முடியுது. தேவையில்லாம பொறுப்பு எடுக்காதீங்க. ஆனால் எனக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் விசாரிச்சிட்டு அப்படியே விட மனசில்லை. வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். நாளைக் காலையில யோசிச்சுக்குவோம் னு நினைச்சேன். என் கணவரும் சரி என்றார். ஆனால் மற்றவர்கள் பயமுறுத்தினார்கள். தேவையில்லாம பிரச்னையில மாட்டப் போறீங்க. ஏன் இந்த வேண்டாத வேலைன்னாங்க. ஆனால் நான் "எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்குது. அப்படி விட முடியாது" ன்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டோம். சாப்பிட சொன்னேன் . சாப்பிட்டாள் அந்நிய வீட்டில் இருக்கிற உணர்வே இல்லாமல் ஒரு ஓரமாக படுத்து உறங்கி விட்டாள். நானும் கணவரும் நிம்மதியாக உறங்க முடியாமல் மாறி மாறி விடியும் வரை விழித்திருந்தோம். மறு்நாள் அமைதியாக விடிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று சொன்னதும் ஒரு கான்ஸ்டபிளுடன் அந்த பெண்ணை அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொன்னார். ஒரு பெண் குழந்தையை ஒரு இரவு பாதுகாத்த நிம்மதியோடு அன்றாடப் பணியை தொடங்கினேன்.